ஹைக்கூ –89

ருக்கும் காற்றிற்கும்
சுடும் நெருப்பிற்கும்
அணைக்கும் நீருக்கும்
அணைக்கும் பூமிக்கும்
அள்ளிக் கொள்ளும் வானத்திற்கும்
எனக்கும்
உனக்குமிடையே
ஒரு ஈர்ப்பு
தெய்வீகமாய் இல்லாமலில்லை
இருக்கென்றும் உணர மட்டுமே
மானிடப் பிறப்பானோம்!

Posted in எத்தனையோ பொய்கள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ –88

யாரையும்
வணங்கவில்லை நான்
யாரையும்
கெடுக்கவில்லை நான்
யாவரும்
நானாக பாவிப்பதில்
நீயும் நானும் –
கடவுளாவோம் வா..

Posted in எத்தனையோ பொய்கள் | 4 பின்னூட்டங்கள்

ஹைக்கூ –87

ரக் கட்டைக்கு
பொட்டு வைத்ததில்
பக்தனானவன்
மரக்கட்டை என்று
சொன்னதில் பித்தனானேன்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –86

நெருப்பு மிதித்து
நிரூபிக்க –
கேட்டிடாத சாமிக்கு தான்
மிதித்து மிதித்து மிதித்து
எரிகிறது சாமி!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –85

வேல் குத்தி
வலிக்கவில்லை
வழிந்த ரத்தத்தில்
மூடத் தனம் ஒன்றும்
மூடிக் கொள்ளவுமில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக