ஹைக்கூ –84

சாமிக்கும் சாமிக்கும்
திருக்கல்யாணம்
ஒரு கல்யாணமும்
நடக்காத முதிர்கன்னி
விரதமிருந்தால்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –83

கோவிலை சுற்றி
தேடி –
கிடைக்காத கடவுள்;
ஏழைகள் சொல்லும்
நிறைய நன்றிகளில்
தென்படாமலில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –82

டவுள்
இருக்கும் இருப்பை
காசுபணம் காட்டுகிறது;
காசு பணத்தையும் –
கடவுள் காட்டுமென
நம்புகிறது மனசு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –81

கொடுக்க மனமில்லாத
பணத்தால் –
மனிதன் கருமியாகிறான்
கொடுத்தவரெல்லாம்
வள்ளலானதில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –80

பெட்டியில்
பூட்டி பூட்டி வைத்ததில்
காகிதமும் பணமும்
ஒரே ஜாதியெனப் புரிந்தது!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக