ஹைக்கூ – 32

நீபார்த்து
பேசி
சிரித்த நாட்களில்
நாட்காட்டி எனக்கு
அவசியப் பட்டிருக்க வில்லை தான்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 31

கோடி பூக்கள்
தரையில் வீழ்ந்து
காய்ந்தும் –
எனக்கான பூக்கள்
பூக்குமென்றே காத்திருக்கிறது மனசு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 30

வாழ்வின் ஒரு
சொட்டுக் கண்ணீராவது
வெற்றி கொள்வதில்
துளிர்த்து விடுகிறது நம்பிக்கை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 29

உன்னை நானும்
என்னை நீயும்
நட்பென அறிவித்த
தருணம் நம்பிக்கையானது!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 28

உனக்கென கேட்டால்
என்னை தருவேன்;
எனக்கென கேட்டால்
என்னால் நம்பிக்கை மட்டுமே தர முடிந்தது!.

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக