ஹைக்கூ – 28

உனக்கென கேட்டால்
என்னை தருவேன்;
எனக்கென கேட்டால்
என்னால் நம்பிக்கை மட்டுமே தர முடிந்தது!.

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 27

சந்தேகத்தோடு
பார்த்த கண்களுக்கு
சூரிய வெளிச்சம் கூட
சூனியம் ஆகிறது;
நம்பிக்கையோடு வாழ்பவரின்
வாழ்க்கையில் –
சூனியமும் சூன்யம் கொள்கிறது!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 26

உன் கண்ணும்
என் கண்ணும்
பேசி பேசியே தீர்கிறது
உயிர் வாழ்தலை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 25

நீ
பவுடர் பூசிக் கொண்டு
எனை பார்த்து
அழகு விசாரித்ததில்
நான் தான் அழகானேன்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 24

சொல்லில்
பொருளில்
பேச்சில்
எதிலுமே புரிவதில்லை வாழ்க்கை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக