காலம் கடக்கும் ஒவ்வொரு பொழுதுகளையும்

காலம் கடக்கும்
ஒவ்வொரு பொழுதுகளையும்
நம் அன்பில் நனைத்து
வாழ்வின் –
நினைவுகளாய் பதிந்துக் கொள்வோம்
வாருங்கள் தோழர்களே…

அனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 12

மனசு தோற்கும்
இடத்திலிருந்து
ஒரு வெற்றி கூட
புறப்பட்டதில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | 1 பின்னூட்டம்

ஹைக்கூ – 11

உனக்கும் எனக்கும்
ஒரு பொருத்தமும்
இல்லை என்றாலும்
இருப்பதாகவே நம்புகிறது மனசு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 10

வாழ்வின் பாதைகளில்
ஒற்றை தெருவே
மறப்பதில்லை –
நீ சென்று திரும்பிப் பார்த்த தெரு!!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 9

கல்லும் கல்லும்
உரசினால் –
நெருப்பு வருமென்றறிந்த மனிதனுக்கு
கத்தியும் கத்தியும்
உரசினால் மரணமென்பது
புரிந்தும் –
நீள்கிறது போர்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக