வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 914,337
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (890)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

நவம்பர் 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
50 உயிரணையும்வரை பிரியாதிருப்பவள்..
மூன்றோ நான்கோ இட்டிலி தின்று
எனை மூன்றுபொழுது ஓடவிட்டவள்;
ஒரு சின்னப்பார்வையுள் சிரிப்பைப் பூட்டி
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொன்றுப்போட்டவள்…
நினைத்ததும் கடவுள்போல் வந்து
நிந்திக்கச் செவ்விதழைக் கொண்டவள்;
உள்ள சிரிப்பழகை உதட்டோரங் கொண்டு
எனை உயிரோடு கனவில் தின்பவள்…
குறுகுறுக்கும் பார்வையாலே
இதயத்துள் கேட்காமல் புகுந்தவள்;
இனி காலம் அது கனக்காது கண்ணுள்
கனவாக நினைவாக நிற்பவள்..
சில்லரையெழுத்துப் பெயரைக்கொண்டு
எனைச் சீனிப்பேச்சில் சொக்கவைத்தவள்;
இனி உயிரணையும் காலம் மட்டும்
உயிராக வாழவே வேள்வி ஏற்றவள்..
இரவோ இது பகலோ எனப் புரியாதெனை
திகைக்கவைத்தவள்;
என் நிமிடமதை யுகமாய் யுகமாய் மாற்றி
காலத்திற்கே யழகு வண்ணம் செய்தவள்..
மனதில் ஒரு துளி
மருந்தைப் போட்டவள்;
மழைபோல் மழைபோல் அவளே
விடாது பெய்பவள்..
அழகே அழகே மொத்தம்
அவளேயானவள்;
உயிரோ ஒரு வரமோ
அவள் கடவுள் தந்தவள்! !
—————————————
வித்யாசாகர்
Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..
Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே..
அந்தத் திருமுகம் காணலியே கிளியே
நெஞ்சம் பச்சையாய் வேகுதடி கிளியே
இச்சையொன்றுமில்லையே கிளியே – மொத்தத்தில்
அன்பொன்றே போதுமேடி கிளியே..
சர்க்கரைப் பொங்களோடி கிளியே – நீ
சர்க்கரைப் பொங்களோடி கிளியே, உன்னில்
சவ்வாது மணக்குதோடி கிளியே – கொஞ்சம்
கொஞ்சத்தான் மனம் சிவக்குதடி கிளியே..
உயிரை மிஞ்சித்தான்போகிறாய் கிளியே – உலகை
உன்னுள்ளே வைக்கிறாய் கிளியே, அன்பிற்கு
எல்லையேது கிளியே; கடலின்
ஆழத்தை வெல்லுகிறாய் கிளியே..
கொள்ளை நெருப்போடி கிளியே, நீயில்லா
தனிமை கொள்ளை நெருப்போடி கிளியே; கொன்று
பொசுக்குதடி கிளியே; உன் நினைவோ
கொள்ளியாய் தீ கொளுத்துதடி கிளியே..
சோகத்தில் ரணம் வலிக்கிறது கிளியே, காற்றில்
பஞ்சைப்போல் மனது பறந்துதவிக்குதடி கிளியே
ஆழிசூழ் இருட்டு அது கிளியே, நீயில்லாத
தனிமையெனக்கு ஆழிசூழ் இருட்டு கிளியே..
தீக்கிரை ஆக்குவேனடி கிளியே, நீயில்லா
தனிமையதை உள்ளத் தீக்கிரை யாக்குவேனடி கிளியே..
சற்றே நெருங்கிப்பார் கிளியே, ஒரு கோணல் திரும்பிப்பார் கிளியே,
என்னில் சிறகடிப்பேன்’ ஏழுகடல் தாண்டியொரு
கூற்றுமாடி களிப்பேனடி கிளியே!!
ஆனந்தக் கூற்றுமாடி களிப்பேனடி!!
———————————————————————–
வித்யாசாகர்
Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..
Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, vidhyasagar, vithyasaagar, vithyasagar
4 பின்னூட்டங்கள்
மழை தூறும் வானில் நீயும் நானும்..
1
எனக்குத் தெரியும்
அது நீதானென்று;
ஆம்
அது நீ தான்
நான் சுவாசிக்கும் காற்று..
——————————————–
2
அழகாய் சிரிக்கிறாய்..
நீ சிரிப்பதால்
விண்மீன்கள் உடைந்து விழலாம்..
மேகங்கள் மழையாகப்
பெய்யலாம்..
வானவில்லில் பல வண்ணத்தோடு
உனது முகம் தெரியலாம்..
உன் சிரிப்பிற்குள்
ஒரு உலகமே கூடத் தோன்றலாம்..
எதுவோ
எப்படியோ நடந்துப் போகட்டும்
எனக்கு நீ சிரிக்கிறாய் சிரி, சிரித்துக்கொண்டேயிரு
நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்!!
——————————————–
3
உற்றுப்பார்
நீ தொடுமிடத்தில் தான்
நானும் தெரிகிறேன்,
உனக்கும் எனக்கும்
ஆண் பெண் தவிர்த்து
மனசுக்கு வேறு வேறுபாடில்லை..
——————————————–
4
எந்த அலை
உனைத் தொடுமோ
அதன் கடலுக்கு நான் ரசிகன்..
எந்த நீருள்
உனது முகம் தெரியுமோ
அந்த நீருள் நானொரு துளி..
எந்த பூமி
உனைத் தாங்கிச் சுழல்கிறதோ
அந்த பூமியில் நான் வசந்தம்..
எந்த வானம்
உனக்கு குடைபிடிக்குமோ
அந்த வானில் நான் மழை..
மழைதோறும் நீ
நீதோறும் நான்..
——————————————–
5
உன்
விரல்பிடித்து நடந்தால்
ஓராயிரம் கனவுகளை வாங்கலாம்..
உன் உதட்டோர
சிரிப்பு துளி கண்டால் – என்
கனவுகளுக்கெல்லாம் கால் முளைக்கலாம்..
எனது கால்முளைத்த
கனவுகளிலெல்லாம் பார்
நீ மட்டுமே சிரித்துக் கொண்டிருக்கலாம்..
உண்மையில் உன்
சிரிப்பில் சிலிர்ப்பவன் நான்,
எனது சிரிப்பிற்குமுன் உயிர்ப்பவள் நீ..
யாரந்த நீ, என் நீ..
——————————————–
வித்யாசாகர்
Posted in கவிதைகள்
Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
அழகே அழகே..
1
படபடவென
புத்தகத் தாள்கள் போலவே
படபடக்கிறது மனசு;
ஒவ்வொருப் பக்கத்திலும்
எழுதிவைத்துக்கொள்கிறேன்
உனது சிரிப்பை..
——————————————————————————-
2
ஒவ்வொரு
நட்சதிரங்களையும்
உடைத்து உடைத்து –
வேறென்ன செய்யப்போகிறேன்
உன் –
பெயரெழுதுவதைத் தவிர..
——————————————————————————-
3
முன் பேருந்தில் நீ
பின் பேருந்தில் நான்,
படியேறி
படியேறி நிற்கிறது மனசு
உன்னிடம்..
——————————————————————————-
4
நீ நிலா அல்ல
நதி அல்ல
அன்னமோ தென்றலோ அல்ல
ஆனால் எல்லாமே நீ
ஏனெனில் அது நீ..
——————————————————————————-
5
தண்ணீரை கலைக்கிறேன்
உன் முகம் தெரிகிறது;
மீண்டும்
தண்ணீரைக் கலைக்கிறேன்
உன் முகம் தெரிகிறது;
அம்மா ‘என்னடா பைத்தியமா உனக்கு’
என்கிறாள்,
நான் இல்லையென்றெல்லாம்
சொல்லவில்லை,
மீண்டும் தண்ணீரைக் கலைக்கிறேன்
உன் முகம் பார்க்க!!
——————————————————————————-
வித்யாசாகர்
Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..
Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, vidhyasagar, vithyasaagar, vithyasaga
பின்னூட்டமொன்றை இடுக
நீ.. நீ மட்டுமே நீ.. என் நீ!!

1
எத்தனை விளக்குகள்
எரியுமிந்த வீட்டில்
நீ மட்டுமில்லை;
வீடு இருண்டே
கிடக்கிறது..
———————————–
2
தண்ணீர் தா
என்கிறேன்
துண்டெங்கே எனக்
கத்துகிறேன்
தூளியில்
குழந்தை அழுகிறது பாரென்கிறேன்
நிசத்தில் ஒன்றுமே
நடக்கவில்லை,
ஆம் –
நீயில்லாத வீட்டில்
எனக்கென ஒன்றுமே நடப்பதில்லை..
———————————–
3
தனிமை சுகம்
தியானம் பெரிது
உடற்பயிற்சி நன்று
விளையாட்டு அலாதி
எனைவிட்டுப் போ என்றெல்லாம்’ வக்கனையாக
பேசமுடிகிறது
நீ என்னோடிருக்கையில் மட்டும்!!
———————————–
4
போனால்
திரும்பி வராது உயிர் என்பார்கள்
அர்த்தம் புரிந்ததேயில்லை;
நீ ஊருக்கு போய்
நாளொரு நாள்தான் ஆகிறது
உயிர் போனதாகவே உணர்கிறேன்!!
———————————–
5
உள்ளே வரும்போதே
குழந்தையெங்கே என்பேன்
வாசலில் நீ நிற்பாய்;
உள்ளே வரும்போதே
அம்மா சாப்பிட்டாங்களா என்பேன்,
சாப்பிடாமல் நீயிருப்பாய்,
உள்ளே வரும்போதே
அசதியா என்பாய்,
அமைதியாய் இரு போதுமென்பேன்;
இன்று உள்ளே வரும்போதே
நீயிருக்கிறாயா என்றுப் பார்க்கிறேன்
ஒரேயொருமுறை –
நீ நலமா என்றுக் கேட்டுவைக்க…
———————————–
வித்யாசாகர்






















