Tag Archives: அவள்

எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!!

ஆழக் கிணற்றிற்குள் தெரியும் முகம்போலவே தெரிந்துக்கொண்டேயிருக்கிறது மனதுள் உன்முகம், நினைவுச் சிறையிலிட்ட உன் மரணமொன்றே வேகமாய் தள்ளுகிறது எனை விதவையெனும் வார்த்தைக்குள், விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம் மீண்டும் வாழ இடம் தராத மனதிற்குள் மட்டுமே சிறைவைக்கிறது என்னை, சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு பொட்டையும் பூவையும் தந்தாலும் வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே எழுதுகிற மனசு … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

50, தொட்டில் ஆடாத வயிறு..

தாலிச் சுமையை தாங்கித் தாங்கி வயதைத் தொலைக்கும் மாசற்றவள்; பிறக்கையில் – பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும் புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த மலரைப் போன்றவள்; எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து எள்ளி நகைப்போரை தினங் கடந்து வாழப் பழகும் – வலிமையானவள்.. செய்தக் குற்றம் தேடி தேடி செய்யா தெய்வப் பாதம் நாடி தொட்டில் ஆடும் – வயிறு … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்..

வியர்வை வாசத்தில் மனம் ஈரமாகிப் போவதுண்டு., இன்றும் அப்படி அவனின் வியர்வை வாசத்தில் நனைந்துபோனேன் நான்.., இரவுகள் கிடைக்காததொரு பகல் எத்தனை ஈர்க்குமென்று ஈரத்தில் நனைந்தோருக்கே தெரியும், அவனின் வாசம் அப்படியொரு வாசம்.., மனதை அள்ளிக்கொள்ளுமொரு மனம், மோக முற்கள் உடம்பெல்லாம் தைக்கத் தைக்க சொட்டும் ரத்தமெனச் சொட்டியவியர்வையில் உயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால் … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரியாத மனங்களிரண்டு பேசிக்கொண்ட நினைவுதனில்..

மனதிற்குள் மறக்காத முகம் அவளுடைய முகம்; இதயம் முழுதும் சுமக்கும் நினைவுகளில் சிரிக்கவும் அழவும் வைப்பவள் அவள் மட்டுமே; அவளுக்கும் எனக்கும் அன்று அப்படி ஒரு காதல் இருந்தது.. நான் அழுதால் அவள் அழுவாள் நான் சிரித்தால் அவளும் சிரிப்பாள் ஏனிப்படியிலேறி மேலிருந்து தலைகீழ்விழும் குழந்தையைப் போல மனசு மேலேறி மேலேறி மீண்டும் அவளின் காதலுள் … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

காதல் தேரினில் அந்தக் காரிகை போகிறாள்..

1 அந்த தெருமுனை திரும்பும் போதெல்லாம் உன் நினைவு வரும்; நீயுமங்கே நின்றிருப்பாய் நானுனை திரும்பிக்கூட பார்க்காமல் போவேன், நீயும் பார்க்கமாட்டாய்; நாம் பார்க்காவிட்டலென்ன காதல் நம் தெருவெல்லாம் பூத்திருக்கும்.. ————————————————————– 2 காற்றடிக்கும் கண்களை நீ சிமிட்டும் நினைவு வரும்.. நிலா காயும் நீ தெருவில் வந்துநிற்க பூக்கள் சிரிக்கும்.. மேகம் நகரும்.. உன் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக