Tag Archives: கைம்பெண்

எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!!

ஆழக் கிணற்றிற்குள் தெரியும் முகம்போலவே தெரிந்துக்கொண்டேயிருக்கிறது மனதுள் உன்முகம், நினைவுச் சிறையிலிட்ட உன் மரணமொன்றே வேகமாய் தள்ளுகிறது எனை விதவையெனும் வார்த்தைக்குள், விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம் மீண்டும் வாழ இடம் தராத மனதிற்குள் மட்டுமே சிறைவைக்கிறது என்னை, சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு பொட்டையும் பூவையும் தந்தாலும் வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே எழுதுகிற மனசு … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை!

ஒவ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள் எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய் வந்துவிழுந்தது அவரின் மரணம்.. மரணம்; பெரிய மரணம் இல்லாதுப் போவது மரணமா? பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர் அவர்களென்ன பிணமா? பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள் அவரின் மரணத்திற்குப் பின் அவளின் பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும் மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

40, அப்படியொரு வீடிருந்தது; நான் பிறந்த வீடு..

எனக்கொரு வீடு இருந்தது.. அங்கே எனக்கொரு போர்வை எனக்கென ஒரு தலையணை எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது.. என் தலையணையிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன் தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்.. வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும் நான்கு கைகொண்டு வீடு எனை அணைத்துக் கொள்ளும்.. எட்டி வெளியே பார்த்தால் வாசலில் மல்லிகைத் தெரியும் மல்லிகை … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

36, கைம்பெண் அவளின் காலம்..

சாப்பாடென்ன சாப்பாடு அது வெறும் நெஞ்சுக் குழிவரை விழுங்கி விழுங்கா உன் நினைவு அதலாம் கடந்து கடந்து நிற்கிறது மகளே.. ஏழையின் குடிசையில் அன்று நான் பிறந்ததே பாவம்; மிச்சத்தில் நீயும் பிறந்தாயே.. விதவை என்றாலே வெற்று நெற்றியில் காமம் தடவி வயிற்றுப் பசிக்கு உடம்பு விற்று கட்டாந்தரையில் களவு போவாளென கதவோரமெட்டிப் பார்க்க கண்ட … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

35, குடிக்க கஞ்சும், கடிக்க அவ(ன்)படிப்பும்..

குளிக்கையில் சோப்பிடுகையில் கழுற்றில் சிக்கித் தான் கொள்கிறது; நேற்று உன் படிப்பிற்கென அடகுவைத்த அந்த தாலிக் கொடியின் நினைவு.. ———————————————————- கால்கள் சுடுகின்றன மீறி மிதிக்கிறேன் எனக்குச் செருப்பு வாங்கும் பணம் உனக்கு உடுப்பு வாங்க மீறுமென.. ———————————————————- அது – குவளை குவளையாக குடிக்காமல் சேமித்த தேனீருக்குரிய பணமென்று உனக்கெப்படித் தெரியும் ? உன் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்