Tag Archives: ஐக்கூக்கள்

ஞானமடா நீயெனக்கு – 62

உன் நெடுந்தூர பயணத்தில் உனை போல் ஒரு பூ – உன் வீட்டிலும் பூக்கும்; அன்று – அதற்கு நீ தரும் நிறைய முத்தங்களில் ஒன்றிலாவது நிறைந்திருக்கும் – நானுனக்கு கொடுக்கும் நிறைய முத்தங்களின் அன்பு!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

61 குழந்தைகள் காணும் உலகம் புதிது; கவனம் கொள்க!!

அடுப்பு எரிகிறது.. நான் வெளியே கூவிச் சென்ற கீரைகாரரிடம் கீரை வாங்க வாசல் நோக்கி போகிறேன் நீ அடுப்பினை பார்க்கிறாய்.. அடுப்பில் நெருப்பு சிவப்பாக கனன்று எரிகிறது உனக்கு நெருப்பு அதிபுதிது முதன் முதலாக இன்றுதான் அடுப்பின் சிவந்த – நெருப்புத் துண்டுகளை பார்க்கிறாய், நெருப்பு சிவக்க சிவக்க – நெருப்பின் மேல் உனக்கு ஆசை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு……..

அன்பு வணக்கம் நட்புறவுகளே.., அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! நம் எழுத்துப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நட்புள்ளங்களுக்கு என் மணம் நிறைந்த நன்றிகள் நிறையட்டும்!! பேரன்புடன்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

அருமை கவிஞர் தி. தமிழினியனின் கவிதைகள்..

ஆசை ஆதி மனிதர்களாய் இருக்க ஆசை; ஆடையற்றவர்களாய் அல்ல ஜாதியற்றவர்களாய்! —————————————— காதல் அருகில் நீயிருந்தால் அகிலத்தையே மறக்கிறேன்; அகன்று நீ சென்றால் அக்கணமே உயிர்துடிக்கிறேன்! —————————————— காதலிக்காக.. மீரா – கண்ணனுக்காக காத்திருந்தாள் கையில் வீணையோடு; உனக்காகவே காத்திருக்கிறேன் இதயம் முழுதும் நான், காதலோடு! —————————————— கல்லறை பூக்கள் பெண்கள் பூக்கள் தான் மண்மீது … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 25

ஒரு மனிதன் பிறக்கையில் பிறக்கிறது மரணமும் மனிதனோடு வளர்கிறது மரணமும் மரணத்தை கொன்று கொன்று வென்று விட்டதாய் எண்ணும் நாளில் மரணம் மனிதனை நெருங்குவதை மனிதன் அறிவதுமில்லை, மனிதன் அடங்குவதுமில்லை! ————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்