Tag Archives: கதைகள்

என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி ‘ரொம்ப புதுசு’

“ஏண்டா இவ்வளோ சம்பாரிக்கிரியே எனக்கிந்த மூக்கு கண்ணாடிய மாத்தி தரக் கூடாதா ..” “மாத்திடலாம் தாத்தா.. தோ இந்த மாசம் .. இந்த மாசம் கண்டிப்பா மாத்திடலாம் தாத்தா “ “போடா.. போடா.. போக்கத்தவனே.., இதை தானே எப்பவும் சொல்ற.. பாரு என் கண்ணே அவுஞ்சி போச்சி “ “இந்த மாதம்.. கண்ணாடியோட.. வந்தா தான் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , | 22 பின்னூட்டங்கள்

திருநெல்வேலி அல்வாவும் பலகோடி பணமும்!!

பள்ளியில் கட்டுரை போட்டியிலோ ஓவியப் போட்டியிலோ கலந்துக் கொள்ளும் ஒரு மாணவனை அழைத்து ‘இந்தா நீ உலகத்தின் முதல் விருதினை பெற்றாய்’ என்று கையில் கொடுத்தால் அந்த மாணவனின் முகத்தில் எத்தனை வெளிச்சங்கள் சிரிப்பாய் பிரகாசிக்குமோ அப்படித் தான் பிரகாசித்தான் இனியன். தமிழினியன் அவன் முழு பெயரென்றாலும் இனியனென்றே நண்பர்கள் அழைத்துக் கொண்டு அவன் பின்னால் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

இது காமம் சொன்ன கதை (சிறுகதை)

‘வானத்தை அந்நாந்துப் பார்த்து-எச்சில் உமிழும் இளமைப் பருவம், ‘சரியென்று நினைத்துக் கொண்டே சின்னஞ்சிறு தவறுகளோடு வாழ்கையை நகர்த்தும் – சபலமான மனத் தோன்றல். ‘சிரிப்பின் அடையாளம் இதுவென்று கண்டு கொண்டு- சகதிகளில் கால்பதிக்கும், நம் கதாநாயகன் காளமேகம் நடந்து போகிறான்.. காளமேகத்தை, கண்டவுடன் பிடித்துவிடும் அத்தனை அழகென்று யாரும் மெச்சிடமுடியாது, ஆனால் பழக பழக தன் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

‘கத்தாமா’ ஒரு பெண்ணின் கதை!!

   பணத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டு மனிதம் விற்கும் ஒரு நபரின், மனிதம் ஏன் பணத்திற்கெனில் எதையும் விற்கும் ஒரு நபரின் அலுவல் அது. அங்கே வெளிநாட்டிற்கு ஆட்களை விற்கும் பணி நடந்துக் கொண்டிருந்தது. கேட்டால் வெளிநாட்டில் வேலை செய்ய ஆள் எடுக்கிறோம் என்றார்கள். அதும் ‘குவைத்திற்கு படித்த பெண்கள் தேவை’ என ஆங்காங்கே விளம்பரம் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , | 55 பின்னூட்டங்கள்

ஒரு நடிகனும் ஒரு நடிகையும்; ஒரு காட்சி!!

“நெருப்பு – எரிந்ததடிப் பெண்ணே   உன் நினைவு – உலகை மறந்ததடி பெண்ணே  அன்பு – கனன்றதடி பெண்ணே  ஆயுளை பாதியாய் – மௌனம் குறைத்ததடி பெண்ணே  உயிரில் – பூத்தாய் பெண்ணே    உள்ளம் – நீண்டு நிறைந்தாய் பெண்ணே     என் சகலமும் – ஆனாய் பெண்ணே   இல்லை யெனக்  கொண்று – மீண்டும்   ஒரு சின்ன பார்வையில் பிறக்க செய்தாயடிப் பெண்ணே!!”     கட்.. கட்.. கட்..   நில்லு நில்லு இது பத்தாது, காதல் கவிதை படிச்சா அதுல ஒரு உயிர் இருக்கணும்.., பாடம் படிக்கிற … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்