என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி ‘ரொம்ப புதுசு’

ண்டா இவ்வளோ சம்பாரிக்கிரியே எனக்கிந்த மூக்கு கண்ணாடிய மாத்தி தரக் கூடாதா ..”

“மாத்திடலாம் தாத்தா.. தோ இந்த மாசம் .. இந்த மாசம் கண்டிப்பா மாத்திடலாம் தாத்தா “

“போடா.. போடா.. போக்கத்தவனே.., இதை தானே எப்பவும் சொல்ற.. பாரு என் கண்ணே அவுஞ்சி போச்சி “

“இந்த மாதம்.. கண்ணாடியோட.. வந்தா தான் இங்க வருவேன் தாத்தா, கண்டிப்பா.. கண்ணாடி கண்ணாடி.. கண்ணாடி தான் இந்த மாசத்துக்கு முதல் பட்ஜெட் சரியா ?”

“இதை தானே போன மாசமும் சொன்ன? நீ வேணும்னா பாரேன்.. நான் செத்தா கூட நீ கண்ணாடி வாங்கித் தர மாட்ட….”

ச்ச.. இந்த தாத்தாவுக்கு எப்படி சொல்லி புரிய வைகிறது ‘என் சம்பள பிரச்சனையையும் ‘வீட்டுப் பிரச்சனையையும், வேறு வழியே இல்லை, இந்த மாதம் எப்படின்னா வாங்கியே தீரனும். மனதில் நினைத்துக் கொண்டேன்..

அடுத்த முறை சென்னையின் பக்கம் போன போது தாத்தாவின் நினைவு வந்தது.

”ஏம்பா இந்த கண்ணாடி எவ்வளோ வரும்..?”

“எம்பத்தைந்தாயிரம்…………….”

“என்பத்தஞ்சாஆஆஆஆஆஆஅ….” ஒரு நொடி ஆடித் தான் போனேன், கையை சுட்டது போல் வைத்துவிட்டேன் கண்ணாடியை.

“என்னங்க ஒரு மூக்கு கண்ணாடி கேட்டா தங்கம் விலை சொல்றீங்க..”

“ஆமாங்க நீங்க எடுத்தது தங்கம் தான், தங்க பிரேமுங்க அது..”

“அப்படியா.. நமக்கு அப்படியெல்லாம் வேண்டாங்க.. சும்மா’ ஒரு’ தாத்தாவுக்கு போடுற மாதிரி எதனா இருந்தா காட்டுங்களேன்.. “

“நீங்க எடுத்ததும் தாத்தா கண்ணாடி தாங்க.. “

“ஏன் சகோ.. இப்படி தமாஸ் பண்றீங்க..? நம்ம அளவுக்கு தகுந்த மாதிரி எதனா காட்டுங்களேன்..

ஆங்… தோ.. இந்த பிரேம் எவ்வளோ வரும்..?”

“அது ஒரு ரெண்டாயிரத்துல சரிபண்ணி கொடுக்கிறேன் எடுத்துக்கோங்க..”

“அவ்வளோ ஆகுமா.. ‘அதுவேற கெழவனுக்கு பிரேம் எல்லாம் மெலிசா இருக்கனுமே..”

“அப்போ இந்தாங்க இது ரெண்டாயிரத்து ஐநூறு.. க்கு வரும், ஆனா ரொம்ப நல்ல பிரேம்”

“இதுக்கு கனண்ணாடிவாங்கனும்ல?? அதுக்கு வேற தனியா பணம் ஆவுமா இல்ல அந்த ரெண்டாயிரத்திலேயே போட்டு குடுத்துடுவீங்களா? “

“சும்மா எல்லாம் இங்க கண்ணாடி துடைக்கிற துணி கூட கிடைக்காது சார், தோ.. இதுமாதிரி கண்ணாடி எடுத்தா ஒரு ஆயிரம் ரூபாய்க்கு போட்டு தரலாம்”

“அப்படியா, இது வேற கண்ணாடி மொத்தையா இருக்குன்னு சொல்லுமே அந்த கிழம்..”

“ரொம்ப நெட்டு பிடித்த கிழவனோ.. “

“அட ரொம்ப நெட்டுங்க.. இப்பையும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டைன்னு நலுங்காம போடும்னா பாருங்களேன்.., வயசு என்பதாச்சு”

“அப்போ இதை எடுத்துக்கோங்க, ஆயிரத்தி எட்டுநூறு வரையும் வரும்”

“அப்படியா, மொத்தம் நாலாயிரத்தி முன்னூறு ரூபாவா?”

“வேலைகூலி டேக்ஸ் எல்லாம் சேர்த்து நாலாயிரத்து ஐந்நூறுக்கு செய்து தரலாம். இப்போ பணம் கட்டினீங்கனா ரெண்டு நாள்ல கண்ணாடி கிடைச்சிடும். அட்வான்ஸ் கட்டிட்டுப் போங்க, என்ன பவர்ன்னு தெரியுமா..?”

“அதலாம் தெரியுங்க. ஒரு நூறு ரூபா முன்பணம் கட்டினா போதுமா?”

“பாதி கட்டினா தாங்க வேலை ஆரம்பிப்போம், கிட்டதட்ட அஞ்ஜாயிரத்துக்கு பொருள் வாங்குறீங்க நூறெல்லாம் எப்படிங்க சரிவரும்..?”

“சரி சகோதரரே கோச்சிக்காதீங்க. தாத்தாக்கு கண்ணாடி வாங்கனும்னு ஒரு ஆசை. அதான் விசாரிக்கலாம்னு வந்தேன். இந்த மாசம் சம்பளத்துக்கு கண்டிப்பா வந்து வாங்கிக்கிறனே..”

“பரவாயில்லை பராவாயில்லை.. உங்கள் தேவை எங்கள் சேவை. எப்போ வேணும்னாலும் வரலாம்”

“நல்ல கடைக் காருங்க நீங்க சகோ.., உங்களை மாதிரி எலோரும் இருந்தா நல்லாதான் இருக்கும்’

“உங்களுக்கு நல்லா தான் சார் இருக்கும் நாங்க கடைய இழுத்து மூட வேண்டியது தான் அப்புறம்..”

“அப்படியா” சிரித்துக் கொண்டேன்.

எப்படியோ ஒருவழியா வெளியே வந்துவிட்டேன். அநியாயமா இருக்கே அஞ்ஜாயிரமா. சம்பளமே பத்தாதே, இந்த பெருசு தான் எண்ணமோ நான் பெருசா சம்பாதிக்கிறதா நினச்சி இப்படி தொல்லை பண்ணுது. சரி போட்டம், இந்த மாதம் கொஞ்சம் காசு வெச்சி அடுத்த மாதம் கண்டிப்பா வாங்குவோம், என்று தான் நினைத்தேன்.

வீட்டில் நடந்திருப்பதே வேறு.

“காலைய்ல போனீங்க இப்போ தான் வரீங்களே. ஒரு போன் பண்ணிருக்கலாம்ல…”

“காசில்லைமா அதுல. ஒரு வேலையா சென்னை வரையும் போனேன். தாத்தா ஞாபகம் வந்துடுச்சி சரி கண்ணாடி விலை கேட்கலாமேன்னு போயிட்டேன்..

“………………..”

“வாங்கலமா ஏன் அப்படி பார்க்குற. சும்மா தான் விசாரிச்சேன்..”

வாங்குவீங்க வாங்குவீங்க கண்ணாடி…, இங்க பாருங்க இந்த மாதம் கரண்ட் பில் கட்டலைனா பீச புடிங்கிடுவாங்கலாம். இவனுக்கு வேற பீஸ் இப்பவே உடனே கட்டியாகனுமாம் . பள்ளிக்கூடத்துல சொல்லிவிட்டிருக்காங்க. ஆறாவது போறானாம், பணம் கொஞ்சம் நிறைய கூட கட்ட வேண்டியிருக்குமாம். வீட்ல ஒரு பொருள் இல்லீங்க. காலைல இருந்து வருவீங்க வருவீங்கன்னு உட்கார்ந்திருக்கேன்…”

“சரி சரி.. விடு.. ஒன்னு ஒண்ணா சொல்லு, ஏன் இப்படின்னு ஓன்னு கத்தற.. சலிச்சிக்கிற.., வீட்டுக்கு என்ன வேணும் அதை முதல்ல சொல்லு, காலைல போகும் போதுசொல்லி இருக்கலாம்ல.. வரும்போது கூட வாங்கியாந்திருப்பேனே..”

“மறந்துட்டேங்க.. ஒரு ஞாபகமாவா இருக்கு..”

“சரி சரி நீ ஏதோ நல்ல மனநிலைல இல்லைப் போல விடு, என்னென்ன வேணும் சொல்லு..”

என்னென்ன வேண்டுமோ குறித்துக் கொண்டு கடைதெருவிற்கு நடந்தோம் ‘நானும் என் மனைவியும் ஒற்றை மகனுமாக. ‘கண்ணாடி’ தாத்தாவிற்கு கனவோ இல்லையோ எனக்கு கனவாகவே இருந்தது. கனவுகளில் கடந்தன நாட்கள். ஒரு நாலைந்து மாதம் கழித்து தாத்தாவை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட, போனேன்..

“வாடா பேராண்டி.. அடுத்த மாசத்திக்கு கண்ணாடி வாங்கி தரவனா நீயி.. “

“ஆமான் தாத்தா அடுத்த மாதம் வரும்போது கண்ணாடியோடு தான் வருவேன்..”

“போடா.. போக்கத்த பயலே.. ” அதே வசவு.. அதே சமாளிப்பு என எப்படியோ போன வேலையை முடித்துக் கொண்டு வந்து விட்டேன். தாத்தா பாவம் அவருக்குன்னு இருக்கறதெல்லாம் செல்லமா அடிக்கவும் திட்டவும் நான் ஒத்த பேராண்டி தான். பெரியண்ணன் இஸ்திரி போட்ட சட்டை மாதிரி. வளைஞ்சி கொடுக்காது. அதில்லாம, பாவம், அது தான் வீட்டு செலவு எல்லாம் பார்த்துக்குது. சின்னண்ணா இந்த ஊர்லையே இல்ல வெளிஊர்ல வேலை செய்து அங்கேயே தங்கிப் போச்சி. அப்படி ஒரு நிலையில, அப்பா மருத்துவ செலவு தாண்டி ‘தாத்தா கண்ணாடி எல்லாம் பெரியண்ணாவுக்கு ரொம்ப கஷ்டம். தாத்தா தான் பாவம். ரொம்ப வருசமா அந்த தேஞ்சி போன ஒத்தை கண்ணாடியையே போட்டிருக்கு. அப்பாவுக்கும், உடம்பு சரியில்லாம படுத்த்துட்டாரு, கூட வந்துடுப்பான்னு கூப்பிட்டாலும் பெரியண்ணன் விடுறதில்லை. அதான் அப்பப்போ வந்து இப்படி நான் பார்த்துக்கறது. இந்த முறை மனைவியும் கூட வந்திருந்தாள். அவளுக்கும் எங்க வீடு தாத்தான்னா ரொம்ப பிரியம். சும்மா தான் ஒருமாதிரி கத்துவா ஆனா நல்ல மனசு அவளுக்கு.

“எப்படின்னா இந்த மாசம் தாத்தா கண்ணாடிய முதல்ல வாங்கிடுங்க. போயி சேர்றதுக்குள்ள புதுசா ஒரு கண்ணாடியை போட்டு வாழ்ந்துட்டு சாவட்டோம்” சொன்னேன்ல என் பொண்டாட்டி ரொம்ப நல்லவன்னு. அவன்னு இல்ல, எங்க மொத்த குடும்பமே அப்படி தான், பாசம்னா உருகி போய்டுங்க. பொதுவாவே, நாங்க அவர்கள் வீட்டையோ, அவர்கள் எங்க வீட்டையோ ‘மாமனார் வீடு ‘மாமியார் வீடுன்னு எல்லாம் பார்த்ததில்லை. எங்களுக்கு எல்லா(ம்) வீடும் ஓன்னு தான். ஆனாலும் எங்க கஷ்டம் எங்களோட, எங்க வாழ்க்கையில யாரையும் நாங்க மூக்க நுழைக்க விடுறதில்லை. அது எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயம் தான். என்ன ஓன்னு சம்பளம் குறைவு. யாருக்குமே அப்படி பெருசா வருமானம் இல்ல. ஏழ்மை ஒன்னு தான் எங்களுக்கு பேய் மாதிரி. வருமையால தான் இவ்வளவு கஷ்டப் படுறோம். ஆனாலும் நம்பிக்கை இருக்கு எல்லாத்தையும் கடவுள் சீக்கிரம் தீர்த்து வைப்பாருன்னு ஒரு நம்பிக்கை இருக்கு.

“என்னங்க யோசிக்கிறீங்க?”

“ஒண்ணுமில்ல மஞ்சு. தாத்தாவுக்கு கண்ணாடி வாங்கனும்னல்ல..”

“ஆமாங்க பாவம் வயசானவரு. இந்த மாதம் நம்ம கல்யாண நாளுக்கு புடவை எடுப்பீங்கள்ல, அதை வேணும்னா விட்டுடுங்க அப்புறம் பார்த்துக்கலாம். இதே ஒத்துமையும் அன்பும் சந்தோசத்தோடயும் ஒண்ணா வாழ்ந்தோம்னா போதாதா, கல்யாண நாளுக்கு வேணும்னா கோயிலுக்கு போயிட்டு வருவோம்ங்க, நீங்க எப்படின்னா முதல்ல தாத்தாவுக்கு கண்ணாடி வாங்குற’ வழிய பாருங்க”

தாத்தாவின் கண்ணாடி எங்க சின்ன குடும்பத்தோட பெரிய கனவு மாதிரி வளர்ந்துடுச்சி. கடைத்தெரு வேலையெல்லாம் முடித்து வீட்டிலிருக்கிற மகனுக்கு பழமும், இனிப்பும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினோம்.

ஆனால், வீட்டில் இப்படி ஒரு இடி காத்திருக்கும்னு நினைக்கல. தூக்கி வாரி போட்டது மகன் படுத்திருந்த கோலம் பார்த்ததும். மதியமே பள்ளிக் கூடத்துல இருந்து வந்துட்டானாம். காய்ச்சல்னு ரெண்டுபசங்க கூட்டி வந்துவிட்டாங்களாம். ஐயையோன்னு ஆயிபோச்சி, பக்கத்து வீட்டக்கா சொன்னதும்.

ஆன்னு வாய பிளந்துக்குனு படுத்திருந்தது குழந்தை. தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம். குளுக்கோஸ் ஏத்தனும், மலேரியா காய்ச்சல், இந்த மருந்து வாங்கு, அது வாங்கு, இது செய்யின்னு நாலு நாள் இழுக்கடிச்சி ரெண்டு நாள் வேலைக்கும் போகாம, அக்கம் பக்கத்துல கடன் வாங்கி, மகன் எழுந்து சிரித்து நடந்து பார்த்த பிறகு தான் அப்பாடான்னு உயிரே வந்தது.

எப்படியோ கல்யாண நாளுக்கு வாங்க இருந்த புடவையும், அதை மாத்த இருந்த கண்ணாடியும் வாங்க கூடாதுன்றது இந்த மாதத்தோட விதி போல. ரெண்டு மூணு மாதம் இதே போல ஓடிபோச்சி. நானும் அதே வசவு அதே சமாளிப்பும்னு அப்பாவை மட்டும் அப்பப்போ பார்த்துட்டு வந்தாலும், இந்த முறை தாத்தாவுக்கும் உடம்பு சரியில்லாம போக, அண்ணா தொலைபேசியில் கூப்பிட்டு சொல்லுச்சி. உடனே வந்துடுடான்னு வேற சொன்னதும் மனசுல ஒரு பயம் தாத்தாவுக்கு கண்ணாடியே வாங்கி தர முடியாதோன்னு.

ஒரு விசனத்தோடையே வேலைக்கு போனா அங்க வேலை ஓடுமா என்ன, இடிந்து போன மாதிரி ஒரு கலக்கம் இருந்துது. “ஏண்டா அருணாசலம், எதனா உடம்புக்குமுடியலையா. ஒருமாதிரி இருக்க?” உடன் வேலை செய்யும் நண்பன் கேட்டான். விவரங்கள் சொல்ல. அதனாலென்னடா நண்பா நான் எதுக்கு இருக்கேன் நான் தரேன்டா இந்தான்னு எடுத்துக் கொடுத்தான். ரெண்டு மூணு மாசத்துக்கு பிரிச்சி கொடு இந்தா வெச்சிக்கோன்னு கையில் வைத்து அழுத்தினான். பிரித்து பார்த்தால் ரெண்டாயிரம் தான் இருந்தது, அவனை ஏக்கமாக பார்க்க, மீதி மூனாயிரத்தை வங்கியில இருந்து எடுத்துக் கொடுத்தான். தெய்வதரிசனம் மாதிரி இருந்தது அவனோட நட்பு. இப்படி ஆபத்துல எதிர்ப்பார்ப்பில்லாம உதவறவன் தான் கடவுள்னு தாத்தா அடிக்கடி சொல்லுவாரு. ஆனாலும், பொதுவா நான் என் கஷ்டத்தை யார் கிட்டையும் அவ்வளவா பகிர்ந்துக்கிறதில்ல. பாக்குறவுங்க எல்லாம் ‘அருணாச்சலம்னாலே நல்லா இருக்கான், அவனுக்கென்னடா குறைச்சல்னு தான் பேசிக்குவாங்க. எப்படியோ பணம் கிடச்சுது. இது போதுமடா சாமின்னு அந்த கண்ணாடி கடைக்கு ஓடினேன். மனசுக்குள்ள வேற எங்க தாத்தாவுக்கு ஏதோ ஆயிடுமோன்னு ஒரு பயம் இருந்துகிட்டே இருந்தது.

கடைக்காரர் என்னை பார்த்ததும் முகம் சுழித்தார். அஞ்சாயிரத்தை எடுத்து நீட்டியதும், அவுத்து விட்ட குக்கர் மூடி மாதிரி புஸ்ஸுன்னு முடியெல்லாம் நட்டுக்குச்சி அவருக்கு. ‘வருத்தப் படாதீங்க ‘பார்த்து செய்யுங்க சாமின்னெல்லாம் கொஞ்சம் அப்படி இப்படி பார்த்து பேசியதும் கொஞ்ச இறங்கி வந்தாரு கண்ணாடி காரு. வருஷம் முடிய போவுது. அதே விலையா இருக்கும்னு குறை பட்டுகிட்டாரு. கடைக்காரருக்கு எல்லாம் கதையும் சொல்ல முடியாதேன்னு தயங்கி நிக்க என்ன நினச்சாரோ அப்புறம் ஒரு அஞ்சயிரம்னு போட்டு ரசீதையும் கண்ணாடியையும் கொடுத்துட்டாரு. எனக்கும் என் பொண்டாட்டிக்கும் கொள்ளை சந்தோஷம். எண்ணமோ ஒலிம்பிக்ல தங்க பதக்கம் வாங்கின மாதிரி அதை தூக்கிகிட்டு, எங்க மகனையும் கூட்டிகிட்டு பெரியண்ணா வீட்டுக்கு போனோம். வழியெல்லாம் ஒரு பயம் வேற ‘விடாத கருப்பு மாதிரி’ மனசை அரிச்சிகிட்டே இருந்துது. எங்கடா தத்தா சொல்ற மாதிரி தாத்தாவுக்கு எதனா ஆயிருக்குமோன்னு வெலவெலத்து ஓடினோம் ரெண்டுபேரும்.

“என்னங்க.. “

“ஏன் மஞ்சு..”

“நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..”

“தப்பா எடுத்துக்காத மாதிரி சொல்லு..”

“விளையாடுறீங்களா..?”

“இல்ல இல்ல சொல்லு..”

“இல்ல.. இந்த தாத்தா எப்போ போனாலும், ‘நான் செத்த பிறகு தாண்டா வாங்கி தருவ’ செத்த பிறகு தாண்டா வாங்கி தருவன்னு சொல்லுமே.. இப்போ கண்ணாடிய ஒரு வழியா வாங்கிட்டோமே.. தாத்தாவுக்கு ஒன்னும் ஆயிருக்காதே????”

‘அடி பாவிமவ பெத்தவளே’ இடிபோல் வந்தது என் மனைவியின் கேள்வி எனக்குள்.

“சும்மா ஒரு பேச்சிக்கு கேக்குறேங்க.. மனசு பயத்துல கெடந்து தவிக்குதுங்க எனக்கு” நான் ஏதும் காட்டிக் கொள்ள வில்லை. ஆனா நானும் அதைத்தான் நினைத்தேன். மாத்தி மாத்தி நினைத்து அது வேற ஓன்னு கிடக்க ஓன்னு ஆயிடுமோன்னு உள்ளே ஒரு பயம் கவ்வி கொள்ள.

“பேசாம அண்ணாவை தொலைபேசில கூப்பிட்டு கேற்றுட்டா மஞ்சு.. “

“வேணாங்க.. நாம் ஏன் கெட்டதையா நினைக்கணும், தாத்தாவுக்கு ஒன்னும் ஆயிருக்காதுன்னே நினைப்போம், வேகமா நடங்க”

ஒரு வித பதட்டத்தோடு பேருந்தில் ஏறினோம். சற்று நேரம் நின்றிருக்க மகராசன் மகராசி குடும்பம் ஒன்னு எழுந்து உட்கார இடம் கொடுக்க ஜன்னலோரமா மகனை மடியில வைத்துக் கொண்டு ரெண்டு பெரும் உட்கார்ந்தோம். எப்படியோ மகனோட கேள்விகளால தாத்தா கண்ணாடி எல்லாம் மறந்து அவனுக்கு கண்ணில்பட்ட ‘கடைகளையும் ‘மனிதர்களையும் ‘உலகத்தையும் ஒரு பேருந்தின் ஜன்னலின் வழியாக காட்டிக் கொண்டும் ‘சொல்லிக் கொடுத்துக் கொண்டும் போனோம். ரெண்டு மூணு மணி நேர இடைவெளியில பெரியண்ணா வீட்டின் தெருவும் இறங்குவதற்கான இடமும் வந்து விட்டது. இறங்கி வெக்கு வெக்குன்னு நடந்தோம். நடக்க நடக்க ஒரு பயம். அதும் வாசலில் ஒரே கூட்டம் நிற்பது போலவே ஒருபிரம்மை வேறு.

என் மனைவிக்கு கூட அந்த பயம் நிறைய இருக்கும் போல. என் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். ஒரு முனை திரும்பி மறுமுனையில் பெரியண்ணா வீடு தெரிந்தது. யாரோ நின்றிருப்பது போல் தெரிந்தது. என் மகன் கைகாட்டி சிரித்தான்.. என்னடான்னு உற்று பார்த்தா(ல்) தாத்தா வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.

என்ன ஆச்சர்யம் எங்களுக்கு. ஓடிபோயி தாத்தாவை கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்போலிருந்தது. சற்றேறக் குறைய ஓடவே செய்தோம் நானும் என் மனைவியும் மகன் அறிவும்.

ஆமால்ல, என் மகன் பேரு சொல்லவே இல்லையே, அவன் பேரு அறிவானந்தம். அறிவு அறிவுன்னு கூப்பிடுவோம். இதோ அவன் தான் எங்களுக்கு முன் ஓடி தாத்தாவை கட்டிக் கொண்டான்.

“வாடா… பேராண்டி… தாத்தா போயட்டேனோன்னு பார்த்தியா…”

“ச்ச ச்ச இல்லை தாத்தா..”

“அப்ப ஏன் முகமெல்லாம் இப்படி வெளிறி போயிருக்கு” தாத்தா கேட்கும் போதே அதற்கு பதில் சொல்லாமல் கண்ணாடியை எடுத்து தாத்தாவிடம் நீட்டினேன் . தாத்தாவிற்கு வானமே கையில் கிடைத்த மாதிரி ஒரு சந்தோஷம். வாயெல்லாம் சிரிப்பு பொங்கியது. பழைய கண்ணாடியை கழற்றி விட்டு புதிய கண்ணாடியை போட்டுப் பார்த்தார். கண்கலங்கி போனது.. தாத்தாவிற்கு.

”சோடாபுட்டி தெரியாம மெலிசா தான் வாங்கியிருக்க..”

“அப்படியா தாத்தா..”

“பிரேம் கூட பார்த்து பார்த்து வாங்கினியோ..?” என் மனைவி ஆமாம் தத்தா என்று சொல்ல

“அதை சொல்லு, என் பேத்தி எடுத்திருப்பா அதான் இவ்வளவுஅழகா இருக்கு..”

அவளை பார்த்து சிரித்தார் தாத்தா. அவளுக்கு உச்சி குளிர்ந்து போனது என்றாலும்,

“இல்லை தத்தா அவர் தான் எடுத்தார் உங்களுக்கு இப்படி தான் பிடிக்குமாமே.. “

“ஆமா ஆமா.., எப்படி வாங்கின பேராண்டி ரொம்ப விலையா இருக்கும் போலிருக்கே.. ”

“அதலாம் இல்லை தத்தா ‘உன்ன விடவா விலை!!! நீ சிரிச்சியே அந்த சிரிப்புக்கு கோடி கோடியா வாங்கி தரலாம் தாத்தா”

நான் சொன்னது தான் தாமதம், தாத்தா என்னை கட்டிப் பிடித்துக்கொண்டார். கண்ணாடி பிடிச்சிருக்கா தாத்தா என் மனைவி மீண்டும் கேட்க அவளையும் அணைத்துக் கொண்டார். என் மகன் தாத்தா நானுன்னு இடையே வர அவனையும் தூக்கிக் கொண்டோம் ஆளுக்கொரு கையாக.

ஒரு மூக்குக் கண்ணாடி எங்களுக்கு அவ்வளவு சந்தோசத்தை வாங்கித் தந்தது. தெருவெல்லாம் என் தாத்தாவின் சிரிப்பு சப்தம் ‘ஒரு புதியதாய் பிறந்த குழந்தையின் சப்தமாக ஒலித்தது. அவ்வப்பொழுது கழற்றி கழற்றி பார்த்துக்கொண்டார். நான் பார்த்து பார்த்து வாங்கியதன் அத்தனை சந்தோசமும் அந்த ஒற்றை மூக்குக் கண்ணாடிக்குள் இருந்தது. எங்கள் குரல் கேட்டு உள்ளிருந்து அண்ணா அண்ணி குழந்தைகள் எல்லாம் வாசலுக்கு ஓடிவந்தார்கள். நாங்கள் வீட்டிற்குள் ஓடினோம்.

பொருள்; மனிதனை வென்றுவிடுவதில்லை தான், மனிதன் பொருட்களால் தன்னையே வென்றுக் கொள்கிறான்!

——————————————————————————————–

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சிறுகதை and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

22 Responses to என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி ‘ரொம்ப புதுசு’

  1. மனோஜ் சொல்கிறார்:

    ஒரு தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற அவன் எடுக்கும் சிரத்தைகள் நம்மை கண் கலங்க வைக்கின்றன…
    மேலும்,. அந்த தாதா கதா பாத்திரம் இறந்திருப்பாரோ என்ற ஒரு பதட்டம் எனக்குள்ளும் இருந்தது…
    உயிரோட்டமான கதை ..,,தோழரே! …மிக அருமை !!!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம். இது தான் என் எண்ணமாகவும் இருந்தது மனோஜ். கதையில் யாரையுமே தவறாக காட்டக் கூடாது என்று எண்ணினேன். சின்ன வார்த்தைகளில் தான் உடை பட்டு விடுகிறது வாழ்க்கை. அதை கடக்கும் ஒரு உத்தியை கையாள நினைத்தேன்.

      வாழ்வின் இடர்பாடுகளை தாண்டியும்; வாழும் தன்மையினால் கிடைக்கும் வசந்தத்தை காட்டுவதே இக்கதையின் முழு நோக்கமாக இருந்தது. அதிலும் தாத்தாவை கொள்ளக் கூடாது என்பதிலும், நல்ல எண்ணம் நல்ல செயலாக்கத்தின் முன்னோடி என்பதை அழுத்தமாக பதிவு செய்வதையுமே கருத்தில் கொண்டிருந்தேன்.

      அந்த தாத்தாவின் ஆசை, அதாவது ‘ஒரு குடும்பத்தில் ஒருவரின் ஆசை, முழு அன்பின் காரணமாக, மொத்த குடும்பத்தின் ஆசையாக உருக்கொள்வதில் தான், குடும்பத்தின் மேன்மையை ‘உயிர்கொள்ள ‘பறைசாற்ற செய்கிறது ‘வாழ்க்கை!

      தங்களின் ஆழமான வாசிப்பிற்கும், நேர்த்தியான புரிதலுக்கும், விமர்சித்த அன்பிற்கும் மிக்க நன்றிகள் மனோஜ்!

      Like

  2. மனோஜ் சொல்கிறார்:

    அழகிய வாழ்வை அனுபவிக்க சில வலிகள் நம் பெற தான் வேண்டும்….ஆனால் அவை அனைத்திற்கும் அர்த்தம் உண்டு என்பதை அழகாக கூறுகிறீர்கள்…
    அழகிய தமிழும், அருமையான உங்கள் கதையுமே,. என்னை ஆழமாக படிக்க வைக்கிறது….மிக்க நன்றி தோழரே!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அது நிகழ்கிறதெனில்;பெருமிதம் கொள்வதை காட்டிலும் அவன் செயலென சொல்லி விலகிக் கொள்ளவும், உங்கள் அன்பினை ஏற்றவனாகவுமே இருக்கிறேன் மனோஜ்! மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்!!

      Like

  3. verumpaye சொல்கிறார்:

    கதையை படித்து முடிக்கும் பொழுது என் கண்களில், ஓரத்தில் சிறியதாய் ஒரு துளி கண்ணீர்… சொட்டியது!

    சில சமயம் குழந்தைகளை பார்க்கலாம்.. பெரிய மனிதர்களின் மகிழ்ச்சியினூடேயும்…!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      உங்களை என்னால் ‘வெறும்பய’ என்று என்னவோ அலல்து எழுதிக் குறிப்பிடவோ இயலவில்லை. ஒரு வீட்டின் அக்கறைக்குரியவன் அந்த சமுகத்தின் அக்கறைக்குரியவனாகிறான்.

      தனியாக எனக்கு மின்னஞ்சல் செய்தவர்கள் கூட கடைசி இடத்தில் கண்கள் கலங்கியது என்றார்கள். அதுவே அவர்கள் அவர்களுடைய உறவுகளின் மீதும் குடும்பத்தின் மீதும் கொண்டுள்ள அக்கறைக்கான, தனது நன்னடத்தைக்கான சாட்சியுமாகும்.

      அதிலும் பெரியவர்கள், உண்மையிலேயே ஒரு கட்டத்தில் குழந்தையின் மனப்போக்கும் உடல்ரீதியான தன்மையுமே பெற்று விடுகிறார்கள். அவர்கள் நம்மை எப்படி பார்த்தார்கள் என்பதை விட நாம் அவர்களை உயர்வாகப் பார்ப்பது பேரும் கடனாக உள்ளது.

      திருவள்ளுவர் இல்லறம் பற்றி சொல்கையில், ஒருவன் ‘அறநெறியுடன் வாழ்வதை பற்றி சொல்கையில் ‘அவன் முதலில் காக்கவேண்டியதும் காக்க வேண்டிய கடமையாகவும் ”பெற்றோரையே” சொல்கிறார். இரண்டாவதாய் மனைவியும் கணவனும், மூன்றாவதாய் குழந்தைகளும், தவிர வயதில் முதிர்ந்தோர், மெய்ஞானம் அறிந்தோர், துறவு பெற்றோர், நடு தெய்வங்கள் போன்றவைகளை காப்பதும் ஒரு அறநெறியாளனின் கடமை என்கிறார்.

      ஆனால், அவைகளை எல்லாம் கடந்து தன் நலம் மட்டுமே சிந்திப்பதன் காரணம் இன்று பெற்றோரை கூட கவனியாமல் பெருகி நிற்கின்றன பல முதியோ இல்லங்கள். அவைகளை மூடுவதற்கான வழியாக திருவள்ளுவர் சொல்கிறார் ‘உலகின் எம்மூலையில் இருந்தாலும் பெற்றோரை ஒன்று தம்மோடு வைத்துக் கொள்ள வேண்டுமாம், அல்லது உரித்த காலத்தில் நாமேனும் வாழ்விடத்தை அவர்களோடு அமைத்துக் கொள்ளுமாறு பெற்றோரோடு சென்று விட வேண்டுமாம்.

      குறைந்த பட்சம் ‘நாம் வெளியூரில் வாழும் பட்சத்தில் நம் உறவுகளாலாவது அவர்களை கவனித்துக் கொள்ள இயலுமெனில் அந்தளவிற்கு அக்கறையினை ஒவ்வொரு பிள்ளைகளும் தன் பெற்றோர் முதியோரின் மீது கொள்வோமெனில் விரைந்தே மூடி விடலாம் அவசியமற்றளவில் பெருகியுள்ள நம் அனைத்து ”முதியோர் இல்லங்களையும்.

      மிக்க நன்றி நண்பரே. வெறும் ஒரேயொரு நன்றி என்று சொல்லிவிட்டுப் போகலாம் தான், ஆனால் எழுதுவதின் நோக்கம் ‘வெறும் வாழ்த்துக்களை பெற்று நன்றிகளைகொடுப்பதற்கல்ல, நல்ல சிந்தனைகளை குறைந்தளவிலாவது பகிர்வதற்கும் என்றெண்ணுகிறேன்.

      நிறைய எழுதி எல்லோரின் நிறைய நேரத்தை எடுத்துக் கொள்வதற்கு எல்லோருமே மன்னிப்பீர்களாக!

      Like

  4. Natarajan Mariappan சொல்கிறார்:

    வித்யா! ஒரு மூக்குக்கண்ணாடி வழியே பாசத்தின் பேரழகை காட்டி விட்டீர்கள்!

    வேறுவித முடிவை எதிர்பார்த்தே பதறிப்போய் படித்தேன்! சுப முடிவுக்கு நன்றி !

    பொருள் அருமை! //மனிதனை வென்றுவிடுவதில்லை தான், மனிதன் பொருட்களால் தன்னையே வென்றுக் கொள்கிறான்…//

    பிறத்தியார் சந்தோசமே பெரிய சந்தோஷம்!

    தொடரட்டும் உங்கள் தோரணை! வாழ்த்துக்கள்!

    M. நடராஜன்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி நடராசன். குடும்பத்தில் எத்தனையோ வறுமைகள் ஏற்றத் தாழ்வுகள் வருகிறது என்றாலும் நம் தேவைகளும் நிறைவு செய்ய வேண்டியனவாக வந்து கணக்கவே செய்கிறது.

      அந்நேரங்களில் உறவுகளின் பலத்தாலும் அன்பாலும் அவைகளை வென்று எடுக்கிறோம். உறவுகளின் பலம் …என்பது கொடுப்பது மட்டுமல்ல, அன்பினால் நம்மை பெறச் செய்வதும்.

      திருவள்ளுவர் கூட குடும்பம் பற்றி சொல்லும் போது ‘அன்பிருந்தால் அங்கு பண்பு தானே வரும்’ என்று தானே சொல்கிறார். எனவே அன்பை பெருக்குவோம் பண்புடன் வாழ்வோம் என்பதற்கான நோக்கத்தை வலியுறுத்த பயன் பட்டது தான் எனக்கு புதிதாக அணிய பணிக்கப் பட்ட என் ”மூக்குக் கண்ணாடியும், அதை வாங்கிய உடனே ‘முகில்’ உடைத்துவிட, இரண்டாவதை நான் உடனே வாங்க பட்ட சிறு பாடுகளும்!

      Like

  5. மோகன்ஜி சொல்கிறார்:

    வாழ்க்கையின் சுவாரஸ்யமே சின்ன சின்ன ஆசைகளிலும் நிராசைகளிலும் தானே இருக்கிறது! நல்ல பதிவு வித்யாசாகர். வாழ்த்துக்கள்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம் மோகன்ஜி. மூக்குக் கண்ணாடியென்ன ஒரு முழம் பூ வாங்கித் தந்த சந்தோசமும் வாங்கி வராத துக்கம் தலைவிரித்தாடிய நிகழ்வுகளும் இருக்கத் தானே செய்கிறது. இங்கே வாங்கிக் கொடுத்தோம் என்பதல்ல சந்தோஷம், வாங்கிக் கொடுக்குமளவு அக்கறை கொள்கிறோம் என்பதே நிறைந்து போகிறது, இல்லையா.

      குடும்பத்தை பொறுத்த வரை அலட்சியப் படுத்துதல் அல்லது நிராகரித்தல் இலகுவாக விரிசலையும், அக்கறை கொள்ளுதல் அல்லது அன்பு செய்தல் வாழ்விற்கான உன்னதத்தை மிகையாய் கொடுக்கவும் தான் செய்கிறது. அதற்கு உதாரணமே ‘அந்த தாத்தா, பேரன் வாங்கித் தந்த கண்ணாடியை தாண்டியும் //அதலாம் இல்லை தத்தா ‘உன்னை விடவா விலை!!! நீ சிரிச்சியே அந்த சிரிப்புக்கு கோடி கோடியா வாங்கி தரலாம் தாத்தா// என்றதும் கட்டிப் பிடித்துக் கொண்ட அந்த ‘ஆத்மார்த்தமான அன்பு’.

      Like

  6. thamilarasijesuthas சொல்கிறார்:

    நண்பா ரொம்ப அருமையா இக்கதையை எழுதி இருந்தீங்க…………

    படிப்போரை ஒருகணம் திகில் அடையவும் செய்துவிட்டீர்கள் ……..

    சின்ன சின்ன ஆசைகள் தான் எமது பெரிய பெரிய கனவுகளை நிறைவேற்றுகின்றது என்பதை
    ஒரு சிறிய மூக்குகண்ணாடி மூலம் வெளிப்படுதியிருந்தீங்க.

    வாழ்த்துக்கள்.. நண்பா வாழ்த்துக்கள் …………………………………………

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி தமிழ். ஒரு பெரிய லட்சியத்தை அடைய கூட, முதலில் சின்ன சின்ன லட்சியத்தை வெல்ல வேண்டும் என்பார்கள். அதுபோல் தானே ‘வாழ்வென்னும் பெரிய லட்சியத்தை முழுதாக வாழ ‘உறவுகளுக்குள் அவசியப் படும் அன்பு செய்தல், புரிந்து புரியவும் நடத்தல், சகித்துக் கொள்ளுதல், உதவியாய் இருத்தல், விட்டுக் கொடுத்தல், எதிர்ப்பார்ப்பினை குறைத்துக் கொள்ளுதல், எதையும் கொடுக்கத் துணியும் பெருந்தன்மையை வளர்த்துக் கொள்ளுதல், தனக்கெனும் சுயநலம் அறுத்து நமக்கென்பதில் வலிமை கொள்ளுதல், தானெனும் கர்வம் ஒழித்து யாரெனினும் மதித்தல், அக்கறை கொள்ளுதல், பாராட்டல், மன்னித்தல் என பல சிறிய சிறிய குணத்திலும் இடத்திலும் வென்று நிற்கும் மானுடப் பண்பில் தான் மனிதன் தன்னை மனிதனாக அடையாள படுத்திக் கொள்கிறான் தமிழ்.

      இதற்கிடையே சின்ன சின்னதாய் எழும் ஆசைகள் தான் நாளைய வரலாறையே திருப்பிப் போடும் பெரிய கனவின் காரணிகளாகவும் வளர்ந்து விடுகின்றன. உறவுகளுக்குள் ஏற்படும் பரஸ்பர அன்பு, ஒருமித்த மரியாதையின் நிமித்தம் நாளைய சமுதாய புரட்சியே கூட ஒரு வீட்டிலிருந்து ஒரு மனிதரிலிருந்தும் பிறக்கப் படலாம்!

      Like

  7. செல்லம்மா வித்யாசாகர் சொல்கிறார்:

    கதை அருமை. ரொம்ப நல்லாயிருக்கு..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றிடா.. செல்லம்மா.., வாழ்வின் இன்பம் எதுவென்று, ‘வாழ்கையில் ‘உறவுகளுக்கென வாழ்க்கையில் அன்பினால் அறிய படுகிறதென்பதற்கு, உன் இந்த வெளிப்பாடும், நம் போல் வாழ்பவரின் அன்பும் உதாரணமாகட்டும்!

      Like

  8. Hari Haran சொல்கிறார்:

    ‎வித்யா..

    –>நிறைய தாத்தாக்கள் இருக்காங்க இந்த மாதிரி.

    –>தாத்தா, இந்த உறவு என்றைக்குமே அற்புதமானதுதான்

    –>நான் பள்ளிக்கூடம் சென்று வீட்டுக்கு வர ஆன தாமதங்களின் நொடி கூட அவருக்கு பேச ஒன்னா துடிதுடிப்பில், கைஊனியுடன், தள்ளாடும் கால்களுடன், வழிமேல் விழியோடு, இரைப்பையை அதிர்ச்சிப்படுத்தி, என் வருகைக்காய் அவர் வாங்கிய மூச்சு –

    –>என் மூச்சு அடங்கும் வரையில் என் உள்ளத்திலும்.. உணர்விலும்.. உயிரிலும் ………………

    ….வார்த்தைகளின் பஞ்சத்தால் இத்துடன் ………….. முடிக்கிறேன்..

    ஹரிஹரன்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      உங்களுக்கு மிக நல்ல என்பதை விட; தாய்மை நிறைந்த தாத்தா கிடைத்திருக்கிறார் போல் ஹரிஹரன்.

      உறவுகள் அனைவருமே ‘மலர்களை போல் உணரத் தக்க, வியக்கத்தக்க, விரும்பத் தக்க தனக்கான ஒவ்வொரு மனத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு தான் உடன் வாழ்கிறார்கள். மனதை விசாலப் படுத்தி வைத்துக் கொள்கையில் உயர்வுகளும் புரிந்துவிடுகிறது.

      தாத்தாக்கள் பாட்டிகள் வெகு குறைந்த காலத்திற்காய்; நமக்குக் கிடைக்கப் பட்ட வரன்களின்றி வேறில்லை!

      அந்த தாத்தா உங்கள் மேல் காட்டிய அன்பும் அக்கறையும், அதை மறவாத தங்களின் மனதும்; உங்களை மேன்மை படுத்தும் ஹரிஹரன்!

      Like

  9. priya சொல்கிறார்:

    மிக நல்ல கதை..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி பிரியா.. உறவுகளின் வாசனையில் நிறையும் வாழ்க்கை வாழ இந்த தாத்தாவும் நமக்கு தன் பொக்கை வாய் சிரிப்பினால் நினைவுறுத்தி போகிறாரில்லையா..? அந்த தாத்தாக்களின் சிரிப்பு, நம் பெற்றோர்கள் நமக்குப் ‘கையில் பறித்து கொடுத்துவிட்ட மலரினை போல் தான். வாடுவதற்கு முன்னரே.. தெய்வீகப் படுத்திவிடுவோம்!

      Like

  10. பாலு சொல்கிறார்:

    வணக்கம் வித்யாசாகர் அவர்களே..!

    “தாத்தா” ..எனக்கும் இப்படி இரண்டு தாத்தாக்கள் இருந்தார்கள்..!

    இக் கதையை படித்து முடித்ததும் அவர்களின் நினைவுகள் ….!

    பிரியமானவர்களிடம் ..அவர்களுக்கு பிரியமானதை வாங்கிக் கொடுக்கும் போது ..சம்பத்தப் பட்ட அந்த இருவருக்கும் ஏற்படும் சந்தோசம் அளவிட முடியாததுதான் !

    கதையை பாதியில் படித்து வரும்போதே .. தாத்தா இறப்பதற்குள் கண்ணாடி வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என வேண்டி கொண்டேன்.. கதையை சுபமாக முடித்ததற்கு…நன்றி!… வாழ்த்துக்கள்..!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      //கதையை பாதியில் படித்து வரும்போதே .. தாத்தா இறப்பதற்குள் கண்ணாடி வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என வேண்டி கொண்டேன்..//

      இதுதான் பாசம்றது இல்லையா பாலு சகோதரர். மனசு யாரையோ படிக்கும் போது கூட தனக்கு வந்த மாதிரி துடிக்கிது பாருங்க இது தான் மனுஷன்ல. உண்மையிலேயே எனக்கு கூட பிற உயிர்களின் இழப்போ துன்புறுத்தலோ கூட சகித்துக் கொள்ள முடியாது.

      ஆரம்பத்திலிருந்தே என் நோக்கம் ‘தாத்தாவை எப்படின்னா கொள்ளாம, அவர் ஆசையை நிறைவேத்தனும்றதுல தான் உறுதியா இருந்தது. என் நிறைய கதைகள் சொகமானதை பற்றியே பேசியதுண்டு. சில கதைகளில் உண்மையை காண்பிக்கும் பொருட்டு ‘சில குழந்தைகளின் இறப்பை கூட பேசியதுண்டு. ஆனால், இங்கே அருணாச்சலத்தின் மனசு போல ‘தாத்தா’ கொள்ளப் படவில்லை போல்!

      Like

  11. Manju Bashini சொல்கிறார்:

    புதிய கதையின் பதிவு பார்த்தப்ப வித்யாசாகரிடமிருந்து இன்னுமொரு படைப்பா உடனே அதை வாசிக்க வேண்டும் என்று தான் தோன்றியது… என்னிக்குமே உங்களின் படைப்புகளில் கருத்து மட்டுமல்லாது நம்மை அதில் மூழ்கடிக்கும் ஒரு வசியம் இருப்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். அது கதையானாலும் சரி கவிதையானாலும் சரி கட்டுரையானாலும் சரி… என்னவோ ஒரு மெசெஜ் கண்டிப்பா சொல்வது நான் பார்த்திருக்கிறேன்.

    குட்டி கரு…. என்றாலும் அதில் உள்ளடக்கியுள்ள மெசெஜ்…. ஆழ்ந்த கருத்துக்கள்…..தான். வயோதிகம் எல்லாருக்கும் வருவது ஒன்று என்றாலும்…, வயோதிகம் எல்லாவற்றையும் சீர்தூக்கி நிலைநிறுத்தி பார்க்கும் என்றாலும்.., தன்னை எல்லாரும் கவனிக்கனும் என்று குழந்தைகள் அட்ராக்ட் செய்யுமே அப்படியான செயல்களையும் வயோதிகம் கடந்தவரிடம் பார்த்திருக்கேன்… அதை இக்கதையிலும் பார்த்தேன். சுருக்கமா சொல்லனும்னா சோ ஸ்வீட்….னு சொல்லலாம் வித்யா..

    வயசானவங்க பாட்டி தாத்தா யாரானாலும் அவங்க கிட்ட சிரிப்பை அவங்களுடைய பிடிவாதத்தை, வேண்டியதை பெற்றதுமே அந்த சந்தோஷத்தை பிரதிபலிக்கும் அவர்களின் பொக்கைவாய் சிரிப்பை, சின்ன ஒரு வருத்தம் என்றாலும் அதை பெரியதாக்கி வலியை பகிர்ந்திட ஆதரவான தோள் தேடும் குழந்தை மனதை இப்படி நிறைய நிறைய நிறைய…… எல்லாமே இந்த கதை படிக்கும்போது நேர்ல பார்ப்பது போல் உணர்ந்தேன்.

    உண்மைய சொல்லுங்க வித்யா இக்கதையில கதாபாத்திரங்களையா வளைய விட்டிருக்கீங்க?? இல்லப்பா….. உண்மையாவே தாத்தாவின் மன வருத்தமூம் அங்கலாய்ப்பும் தான் அப்பட்டமா தெரியுது. ஆனால் உள்ளூர குட்டி நம்பிக்கை எப்படியும் நம் பேரன் கண்ணாடி வாங்கி கொடுத்துருவான் என்று இல்லையா, அதுபோலவே பேரனின் அவஸ்தை, குழந்தை ஸ்கூல் ஃபீஸ், எலக்ட்ரிக் காரன் ஃப்யூஸ் புடுங்கிருவான் என்ற பதட்டம்……… இதெல்லாம் அத்தியாவசிய செலவுகள்….. எனும் மனப போக்கு என எல்லாவற்றிலுமாய் மொத்தத்தில் மனம் நிறைந்து காண்கிறேன். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் மனதில் இருக்கும் அன்பை இப்படி வெளிப்படுத்தியதை ஆச்சர்யமுடன் பார்க்கிறேன்.

    இன்றைய காலக்கட்டத்தில் அவசர யுகத்தில் பெற்ற தாய் தந்தையரை கவனிக்கமுடியாமல் முதியோர் இல்லத்தில் தள்ளிவிடுவதும் பிள்ளைகளை பார்த்துக்க முடியாததால் க்ரஷ்ல விடுவதும் சகஜமாகிவிட்ட நிலையில் முழு அன்பை தேக்கிவைத்து, பணம் பற்றாக்குறையினால் சிரமப்பட்டாலும், தன் சந்தோஷங்களை கூட ஒதுக்கி வைத்து ‘கல்யாண நாளுக்கு பட்டுப்புடவை எடுக்கனும்னு என்ன கட்டாயம் கோவிலுக்கு போய் இருவரும் ஒன்றாய் இனிப்புண்டு மகிழ்வதில் சரியாகிவிடும் என்று சொல்லும் மனைவியும், பிள்ளைக்கு காய்ச்சல் என்றதும் பதறி ஐயோ இம்மாதமும் தாத்தாவுக்கு கண்ணாடி வாங்க இயலாமல் போகிறதே என்று பேரன் தவிக்கும் தவிப்புமாய் அவர்களோடு சேர்ந்து எங்களையும் துடிக்கவைத்தது உங்கள் வரிகள்……

    சஸ்பென்ஸா கொண்டுவந்து ஐயோ ஐயோ அப்படி ஆகிவிடக்கூடாதே என்று பயத்துடனே தான் படித்துக்கொண்டுவந்தேன்… பேரன், மனைவி மனதில் இருக்கும் பயம் எங்கள் மனதுக்கும் இடம்மாற்றியது உங்கள் கதைக்கு கிடைத்த வெற்றி வித்யா…..

    நல்ல வித்து
    நாளைய நல்ல பிள்ளையாக வளர்கிறது
    நல்ல பிள்ளை பின்னொரு நாளில்
    நல்ல சந்ததியாக தொடர்கிறது….

    பொருள் மனிதனை வெல்ல இடம் கொடுக்கவில்லை…. மனித மனங்களின் தேங்கும் அன்பு எதிர்ப்பார்ப்புகளை வெற்றியாக்கி தாத்தாவின் மனதுக்கு ஆறுதலை மட்டுமா கொடுத்தது…? ‘என்னவோ எங்க தாத்தாவுக்கு நானே கண்ணாடி வாங்கி கொடுத்த அளவு’ சந்தோஷம் நிறைந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல வித்யா…

    கண்ணாடி வாங்கி கொடுத்ததோடு முடியலை…., அதை அணியும்போது தாத்தாவின் மன உணர்வுகள் எப்படி எல்லாம் விகசிக்கும்னு ஒவ்வொரு வரியிலும் கண்டேன். தாத்தாவின் சந்தோஷம் காணும் பேரனுக்கும், பேரனின் மனைவிக்கும் இத்தனை ஆனந்தம் பொங்குகிறது என்றால், அன்பை வாங்குவதை விட ‘கொடுப்பதில் இருக்கும் இன்பத்தை இங்கே கதையில் சொல்லி இருக்கும் விதம் அத்தனை அற்புதம்……

    நடுத்தர குடும்பத்தில் பணம் வேண்டுமானாலும் பற்றாக்குறையாக இருக்கலாம்…. ஆனால் அன்பு???? அடேங்கப்பா எத்தனை அன்பு… எத்தனை அன்பு……. ஹாட்ஸ் ஆஃப் வித்யா…….

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      என் கதைகளுக்கு பொதுவாக படைப்புகளுக்கு இவ்வளவு அழகாக விரிவாக விளக்கம் தரும் மஞ்சுவின் அன்பிற்கே இக்கதையை சமர்ப்பிக்கணும். //ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் மனதில் இருக்கும் அன்பை இப்படி வெளிப்படுத்தியதை ஆச்சர்யமுடன் பார்க்கிறேன். // உணமையில் சொன்னால் என் கதையின் நோக்கமே இது தான் மஞ்சு. அதற்கு தேவை பட்டது தான் நான் புதியதாய் அணிந்த மூக்குக் கண்ணாடியும் என் தொண்ணூறு வயதை தாண்டிய ஒரு தாத்தாவும்…

      மிக்க நன்றி மஞ்சு…எப்பொழுதுமே..!!

      Like

பின்னூட்டமொன்றை இடுக