Tag Archives: கவிதைகள்

28) பிறிதொரு நாளில் பார்ப்போமெனில் அன்று பேசு..

காதல் வற்றிப்போன மனசு காமம் ஆங்காங்கே – முளைவிட முளைவிட தலைகொத்தித் தின்ற பறவையின் மனோபாவத்திற்கிடையே தெரியும் முகங்களை பெயர் சூட்டிடாததொருக் கவிதையின் வரிகள் படித்துக் கொண்டிருக்க.. உயிர்வரை சுரக்குமந்த உணர்வில் தன் புத்தகத்தில் எழுதிய பெயரிலிருந்து டையிரியில் குறித்ததை தொடர்ந்து நெஞ்சு கிழித்தெழுதிய உன் பெயரின் நினைவாழம் வரை – காதலின் வலி உன்னடையாளமாகவே … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

23) என் தாய் வீடு..

ஒரு வீடு ஒரு பெண்ணின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. அந்த பெண் தன் குடும்ப மகிழ்வில் ஒளிர்கிறாள். அவள் ஒளியைப் பற்றி மார்தட்டிக் கொள்ளும் நாம் அவளின் கண்ணீரைப் பற்றி அத்தனைக் கவலைப் பட்டதில்லை. இதோ, அப்படி ஒருத்தி தன் இறந்த தாயை எண்ணி அழுகிறாள்.. தலைப்பு: என் தாய் வீடு.. ——————————————— முன்பெல்லாம் எனக்கு அம்மா … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

22) என் பால்ய காலம்…

மண்சோறு தின்ற நாட்களது.. சனி ஞாயிறு கிழமைகளில் விடுமுறையெனில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அத்தனை பயம் வரும்; வீடெல்லாம் விளையாட்டு நிறையும் வாஷிங் பவ்டர் நிர்மா’ விளம்பரம் கூட இனிக்கும் ஒளியும் ஒலியும் மாற்றிவிட்டு வேறு சானலில் – வயலும்வாழ்வும் வைக்க முடியாது அன்று; தொலைகாட்சியை நிறுத்திவிட்டால் திருடன் போலிஸ் விளையாட பிளாட் போடாத இடங்கள் நிறைய … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

19) என் தேசம் தூயதேசம்…

ஒரு தேச வளர்ச்சி என்பது ஒரு ஏழையின் கண்ணீரைத் துடைப்பதாய் இருக்கவேண்டும். ஒரு பாமரன் படித்து மேதையான கதை அந்த தேச வளர்ச்சியின் வரலாற்றில் இடம் பெற்றிருக்கவேண்டும். அரசியல் சட்டங்களும் அரசியல் வாதிகளின் போக்கும் மக்களின் நலன் கருதி அமைந்திருக்கவேண்டும். அப்படியிருக்கிறதா நம் தேசம்? எனும் கேள்விதாங்கிய கவிதையிது. தலைப்பு ‘என்’ தேசம் தூயதேசம்.. ஆம் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

கவிதாயினி திருமதி ராணிமோகனின் கவிதைகள்..

ஈழத்தை அவள் பார்ப்பாள்; மோனா லிசா!! பெண்களில் பேறு பெற்றவளே பேசாமல் பேசும் ஓவியமே சித்திரதிற்குள் சிதைந்திடாத, பேரழகே நீ கற்பனையில் விளைந்தவள் அல்ல; லியானர்டோ டாவின்சின் கண்களில் பதிந்து, இதயத்திற்குள் பிம்பமாகி பிறந்தவள். பாரிஸ் நகரில் – உன்னை ஒளிந்திருந்து பார்க்க நினைப்பவர்களையும் நீ ஓர கண்களால் பார்த்து விடுகிறாயமே.., அப்படி என்ன உன்னிடம் … Continue reading →

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்