Tag Archives: கவிதைகள்

என்னன்புத் தம்பிக்குத் திருமண வாழ்த்து…

மணமகன் : சேவியர்                                     மணமகள்: ஜெகா நாள் : 23. 03. 2011                                              இடம் : கன்னியாகுமரி உடன் பிறந்த மூன்று பேரோடு நான்காவதாய் சேர்ந்தவனே; நாளும் பொழுதும் – நெஞ்சில் சுமந்து பிறப்பின் தூரத்தை நட்பினால் அறுத்தவனே; அன்பெனும் ஒற்றை வார்த்தைக்கு உயிரை கடைசிச் சொட்டுவரை கொடுப்பவனே; உண்மை நிலைக்கு அஞ்சி – சத்தியம் … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

43, போனதடி; பொய்யென ஓர் போர்!!

வீசும் மழை போல் வீசி அடங்கும் மழை போல் அடங்கி காணுமிடமெல்லாம் கண்ணீர் தெளித்து உயிர் கொண்டு போனதடி போர்; எம் உயிர்கொண்டுப் போனதடிப்போர்!! கொஞ்சும் மழலை கொன்று நரை எஞ்சும் பலரை தின்று பெண்கள் மானம்குடித்து கொலைவெறி தரித்து தமிழனை அடையாளமின்றி அழிக்க வந்ததடிப் போர்; அங்கே அழித்துவிட்டேப் போனதடிப் போர்!! துயிலந்தனை இடித்து … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

கண்டிப்பா படிங்க – திருக்குறளில் வாழ்வியல்!!

பிறக்கும் ஒவ்வொரு உயிரும் தன் வாழ்தலுக்கிடையே உண்டாகும் இடர்பாடுகளின் விளிம்பில் நின்று, ‘கடைசியாய் காலத்தையே சபித்து நிற்கிறது, என்றாலும், காலம் தன் வாழ்தலின் கொடூரத்திலும், உண்ணதத்திலும், நன்மையிலும், தீமையிலும், சரி என்பதிலும், தவறு என்பதிலும், உண்மையிலும், பொய்யிலும்; தன்னைத் தானே புடம் போட்டு தனக்கான வேள்வியில் தானே தன்னை சுட்டு மிளிரும் தங்கமென பூத்து, நாளைய … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

வளைகுடாவிலிருந்து; அன்புள்ள அம்மாவிற்கு மகனெழுதும் கடிதம்!!

அன்புள்ள அம்மாவிற்கு, வீடும் நீயும் உறவுகளும் நலமா அம்மா? அப்பாவிற்கு என் வணக்கத்தையும் அன்பையும் சொல்லுங்கள் அம்மா. நானும் நண்பர்களும் உங்களின் நினைவுகளை தாங்கியவண்ணம் இங்கு நலமாக உள்ளோம். நலமெனில், உணவிற்கு பஞ்சமின்றி உடுத்தும் ஆடைக்கு பஞ்சமின்றி உடனிருக்கும் தோழமைக்கு பஞ்சமின்றி நலம். இது ஒரு வேளைதவராமல் மருந்துண்ணும் கட்டாய வாழ்க்கை அம்மா. ஏழுமணிக்கு வரிசையில் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

செல்லம்மா வித்யாசாகரின் சிறுகதைகள்..

“தலைப்பு : பயணம்..” கல்யாணியும் சாந்தியும் நல்ல தோழிகள். அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவர்கள். அலுவல் முடிந்து, எப்பொழுதும் அவர்கள் பேருந்தில் பயணம் செய்துதான் வீட்டுற்கு போவார்கள். அப்படி ஒரு நாள் பயணத்தின் போது – “கல்யாணி சாந்தியிடம் கேட்கிறாள் நேற்று செய்தி பார்தியாடி, தேர்தல் நெருங்குகிறது ஆகவே சாலை … Continue reading →

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்