Tag Archives: கவிதைகள்

இரத்தச் சுவடுகள்..

தலையில் அச்சு பதிய புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில் புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு; கிழிந்து கிழிந்துப் போன புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே மனதிற்குள் கிழியும் உணர்வுகளின் அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்; ஆங்காங்கே – எதை எதையோ நினைத்து வலிக்கிறது மனசு.. உள்ளே வேகமாய் புகுந்தோடி வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம், பயந்து … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்..

வியர்வை வாசத்தில் மனம் ஈரமாகிப் போவதுண்டு., இன்றும் அப்படி அவனின் வியர்வை வாசத்தில் நனைந்துபோனேன் நான்.., இரவுகள் கிடைக்காததொரு பகல் எத்தனை ஈர்க்குமென்று ஈரத்தில் நனைந்தோருக்கே தெரியும், அவனின் வாசம் அப்படியொரு வாசம்.., மனதை அள்ளிக்கொள்ளுமொரு மனம், மோக முற்கள் உடம்பெல்லாம் தைக்கத் தைக்க சொட்டும் ரத்தமெனச் சொட்டியவியர்வையில் உயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரியாத மனங்களிரண்டு பேசிக்கொண்ட நினைவுதனில்..

மனதிற்குள் மறக்காத முகம் அவளுடைய முகம்; இதயம் முழுதும் சுமக்கும் நினைவுகளில் சிரிக்கவும் அழவும் வைப்பவள் அவள் மட்டுமே; அவளுக்கும் எனக்கும் அன்று அப்படி ஒரு காதல் இருந்தது.. நான் அழுதால் அவள் அழுவாள் நான் சிரித்தால் அவளும் சிரிப்பாள் ஏனிப்படியிலேறி மேலிருந்து தலைகீழ்விழும் குழந்தையைப் போல மனசு மேலேறி மேலேறி மீண்டும் அவளின் காதலுள் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

திசைமாற்றிய திருப்பங்கள்.. (இணைய கவியரங்கக் கவிதை)

எனையாளும் ஐயனுக்கு மடிதாங்கும் அன்னைக்கு ஒளியாகி வளியாகி உயிராகி உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம்! மொழியாகி பேச்சின் அழகாகி முதலாகி எழுத்தின் மூலமாகி விழுதாகி எங்கும் செறிவாகி தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம்! நெருப்பின்றி நீளும் ஒளியாகி மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

செவிலித் தாயிக்கு மனசு வானம் போல..

பிணம்தின்னும் சாமியிடம் வரம் கேட்கும் பூதங்கள், மலமள்ளி மூத்திரம் துடைத்தும் மனதால் மணக்கும் சாமிகள்; அறுந்தக் கழுத்தில் ரத்தம் கசிய கண்ணீரால் கழுவும் தெரசாக்கள், தாயைப் போல கருணைப் பொங்க ஆலயம் தொழும் தெய்வங்கள்; நீதி தேடி ஒதுங்கிடாது சேவை- யாற்றும் தேவதைகள், பாவமூட்டையை தான்சுமந்து வியாதியை போக்கும் சகோதரிகள்; காலவிளக்கை ஊதிவிட்டு; கருணையில் தலைகோதும் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக