Tag Archives: கவிதைகள்

148 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

என்னை பார்த்தால் யோகம் வரும்னு சொன்னவன் கூட செத்துப் போயிருப்பான்; அதெப்படின்னு சிந்திக்காம வாங்கினவன் வீட்ல கழுதை படமும் நெற்றியில் முட்டாள் பட்டமும் தொங்குறதை – கழுதை கூட பார்த்து சிரித்ததோ என்னவோ; கழுதைங்களுக்குத் தான் தெரியும்!!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

147 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

நம்பிக்கைல கொஞ்சம் உழைப்புல கொஞ்சம் உண்மைல கொஞ்சம் அன்புல கொஞ்சம் நேர்மையில் கொஞ்சம்னு எல்லாத்தையும் கூட்டினா கடவுள்னு நம்புறமோ இல்லையோ; எல்லாத்த்தையும் ஒதுக்கியதால் மிஞ்சிய கோர முகம் தான் பேய் யென்று – வேண்டுமெனில் கொள்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

146 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

தெரு மூலையில உடைத்த பூசணிக்கா, உண்டியல்ல போட்ட காசு, கோவில்ல நேந்து விட்ட கோழி, ஆடு வெட்டி போட்ட படையல், வருசாவருசம் மிதிக்கும் நெருப்பு, நாக்குலையும் மூக்குலையும் குத்தும் வேல், நாப்பதம்பது நாள் விரதம்………. இன்னும் இன்னும் இன்னும் என்னென்னவோ; இதலாம் வேண்டாம்னு – சாமியே வந்து சொன்னா கூட சாமியையே முட்டாளென்று சொல்லும் புத்திசாலிகள் … Continue reading

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

31 மனைவிக்கு தெரியாமல் எழுதிய கடிதம்! (பெண்ணியம்)

எப்படி நிகழ்ந்ததோ அது ஆணுக்கு பெண் – அடக்கம் என்னும் சமாச்சாரம், சமபங்கு கொடுப்பதாய் உன்னையும் வேலைக்கனுப்பி உன் திறமைகளை வெளிப்படுத்த எண்ணி பாவம்; அவளும் கஷ்டப் படுவானேன் நிம்மதியாய் வீட்டில் இருக்கட்டுமே என நினைத்த இடத்தில் தான் துரோகம் இழைக்கப் பட்டுவிட்டது போல்; உடல் கூசப் பார்க்கும் கயவர்களுக்கு மத்தியில் மனம் கூசி போவாயோ … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (42)

ஒரு லட்சமாம் இரண்டு லட்சமாம் கணக்கு சொல்கிறது செய்தி முல்லைவாய்க்காலில் இறந்தவர் பற்றி; கணக்கில் வராது இறந்து போன எத்தனயோ உயிர்களுக்கென்ன இன்னொரு பிறப்பையா திருப்பித் தந்துவிடுமிந்த தேசங்கள்???? ஓஹோ; தமிழரை உயிர்கணக்கிலிருந்து தள்ளிவைத்துவிட்டார்கள் போல் சிங்களன் வெல்லும் வரை; பாவிகள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்