Tag Archives: கவிதைகள்

ஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்!!

சுதந்திரம் என்று சொன்னாலே உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்; ஏன்? அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும் காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின் வலிபற்றிய பயமுமது; நிற்க முறைத்தலும் பார்க்க அடித்தலும் எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில் வாங்கியச் சுதந்திரம் – இன்று எம் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்தின் நிறுவனர் ம. யூஜின் புரூஸ் அவர்களுக்குத் திருமண வாழ்த்து..

உலகே வா; உன்னத வாழ்த்தினைத் தா!! பூக்காடு மணக்கும் மனம், பேரன்பு நிரஞ்ச மனம் மூப்பில்லாத் தமிழுக்கு மலர்க்கொத்து சேர்த்த மனம் பாரெங்கும் பேர்சொல்லப் பட்டினியாக் கிடந்தாலும் பழந்தமைழை சிரந் தாங்க தூக்கத்தையும் தொலைத்த மனம்; யூஜின்புரூஸ் கைபிடித்து ஏஞ்சல்கிருபா நடைதுவங்க வாழ்வின் படிகள் ஒவ்வொன்றும் வெற்றி வெற்றியென அணிவகுக்க ஊரெங்கும் தமிழ் ருசிக்க வாழ்த்த … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நானும் அவளும் மேகத்தின் இரு சிறகு போல..

அது ஒரு கண்ணாடி உடையும்போன்ற மனசு; எப்படியோ ஆண் பெண் அவள் அவன் அது இதுவென்றுச் சொல்லி உடைத்துவிடுவதில் என்னதானிருக்கோ (?) ஆனால் – உடையாமல் பார்த்துக் கொள்ளும் அன்பில் தான் அவளும் நானுமிருந்தோம்; தேனீர் தருவாள் இனிப்பது அவளாகவே இருப்பாள், சோறு போடுவாள் உண்டது தனிச் சுகமாகயிருக்கும், தோள் மீது சாய்ந்துகொள்வாள் சாய்ந்துக் கிடப்பதை … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தொத்தா என்று ஒருத்தி இருந்தாள்; இனி இல்லை..

நான் அன்றும் இறந்திருக்கவேண்டும் இருப்பதைத் தொலைத்த அந்த வலி அத்தனை கனமானது; விமானமேறி நாடுகடந்து நான் ரசிக்கும் தெருக்களையெல்லாம் வெறுத்துக்கொண்டு வாய்மூடி உயிர்தேம்பியழுத கணமும் அவளை ஒருமுறையேனும் கண்டுவிட ஓடிய ஓட்டமும் தவிப்பும் எனை எரிக்கும்வரை எனக்குள் வலியோடிருக்கும் வானம் கிழிவதைப் போல அன்று அறுபட்ட மனதில் அவள் அப்படி வலிப்பாளென்று நினைக்கவேயில்லை காதாழம் சிதைக்கும் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை!

ஒவ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள் எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய் வந்துவிழுந்தது அவரின் மரணம்.. மரணம்; பெரிய மரணம் இல்லாதுப் போவது மரணமா? பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர் அவர்களென்ன பிணமா? பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள் அவரின் மரணத்திற்குப் பின் அவளின் பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும் மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்