Tag Archives: கவிதைகள்

பூ (9)

விதவையின் வெள்ளை நெற்றியில் முள்ளாய் குத்திய பூ; பெண்ணின் தாவணி கனவுகளில் மங்களமாய் மணக்கும் பூ! மரண சாலையில் – சுனாமி குவித்த பிணங்களாய் கசங்கி மிதிபடும் பூ; திருப்பதியோ திருத்தனியோ தொட்டுவிட்டால் திருப் பிரசாதம் பூ! தெருக்களில் கூவி கூவி விற்றவளின் வயிற்றுப் பசிக்கு – உணவு தரும் பூ; பூ பூவென கத்தியவளின் … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

வெயில் (8)

உழைக்கும் வர்கத்தின் உடல் சுடும் நெருப்பு; வெயில்! இலையுதிர்ந்த மரங்களின் பசுமை பூப்பிக்கும் தகிப்பு; வெயில்! எட்டித் தொட இயலா சூரிய முகத்தை மண்ணில் பதிக்கும் பதைப்பு; வெயில்! மனித குல முன்னேற்றத்திற்கு வெளிச்சம் போர்த்திய எரிப்பு; வெயில்! பூமி சூழ்ந்த கடலை உறிஞ்சிக் குடிக்கும் உழைப்பு; வெயில்! உப்பையும் மழையையும் மண்ணுக்குக் கொடுக்க இயற்கை … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

கருப்பு; கருப்பு; கருப்பு (7)

வெளிச்சத்தின் பிறப்பிடம் இருட்டின் தாய் நிறம் – கருப்பு; வண்ணங்களின் மூலாதாரம் வாழ்வின் அஸ்தமனம் பேசும் – மொழி கருப்பு! மூடதனம் தகர்க்க – மூச்சு விட்ட புரட்சி நெருப்பு – கருப்பு; சாஸ்திர சம்பிரதாய திநிப்புகளை தகர்த்து எரித்த தீ நாக்கு – கருப்பு! வெள்ளை போர்த்திய மனதின் உள்ளிருக்கும் உண்மை கருப்பு; மெல்ல … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

பணம் தின்னி; பட்டுப் புடவை (6)

பட்டுப் புழுவின் உயிரில் நெய்த ஆபரண ஆடை! ஆயிரம் லட்சம் உயிர்களை கொன்ற கொலை வியாபாரம்! என் ஏழை சகோதரிக்கு என்றுமே கிடைக்காத கனவு அவதாரம்! என் தாயை கொள்ளியில் வைத்த பிறகும் எரிந்திடாத பட்டுப் புடவை! ———————————- வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

வட்டியும் கிட்டியும் (5)

பணம் பணம்னு அலைந்ததுல பொணம் தின்னும் பொழப்பு பாரு; கந்து வட்டி கிந்து வட்டின்னு ஏழை ரத்தம் இனிக்கும் பாரு! சுட்ட உடம்பில் சூடு போடும் – மிருக குணம் தொழிலு பாரு; வாரமானா வந்து நிற்கும் மாடி வீட்டு மைனர் பாரு! கூரை – பிய்த்து பிய்த்து எறிந்ததுல – வீட்ட; உசத்தி கட்டி … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்