Tag Archives: கவிதை

11 ஓ………. உலக தமிழினமே..

புதைகுழிகளை தோண்ட அரசானையாமே ? எங்கேனும் என் இறந்த மகனின் அல்லது கணவனின் எலும்புத் துண்டு கிடைக்குமாயின் கொடுத்து செல்லுங்கள் – சிங்கள நாய்கள் தெருவோரம் வந்தால் எடுத்து வீசலாம் – ஏதேனும் இரண்டு தமிழச்சிகளாவது மிட்சப் படட்டும்!! ———————————————-

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

10 ஓ………. உலக தமிழினமே..

கர்ப்பிணி பெண்களின் வயிறு கிழித்து தமிழனென்பதால் சிசுவை கூட கொண்றுபோட்ட சிங்களரா தமிழரை காப்பர்? ஓ………. உலக தமிழினமே வெட்கம் கொள்ளாதே அவன் காலுக்கு செருப்பினும் கேவலமாக எண்ணப் படுகிறோம் இங்கு; ஈழத்தில் முடிந்தால் சற்று கோபப் படு; யாரேனும் இருக்கிறீர்கள் என்றாவது தெரிந்துக் கொள்ளட்டும் சிங்களவர்!! ————————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

8 பிணமென்றே பெயர் வைத்தேன்

   பிணங்களின் எரியும் புகையில் புகுகிறது பள்ளி சீருடைகள்;   பிணங்களின் அழுகிய நாற்றத்தில் மறந்தன மரண பயம்;   பிணங்களின் முறிந்த உறுப்பில் முடங்கின உயிர் பறித்த வலி;   பிணங்களின் தெருவோர குவியலில் அறுந்தன உயிரின் ஆசை;   பிணங்களின் பிணமென்னும் பெயரில் கிடக்கின்றன எம் – வீரமும் உறவுகளும்;   பிணமென்றே பெயர்வைத்தேன் வேறென்ன … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

12 வார்த்தைகளில் மெல்ல மெல்ல..

என் இனியவளே வார்த்தைகளில் மெல்ல மெல்ல இதயம் தொட்டவளே, உள்ளிருக்கும் காதலுணர்வை பார்வையால் ஈர்தவளே, காலத்தின் வழி தடத்தில் – எனக்குமாய் உதித்தவளே, உன் வாழ்நாளில் ரசனைகளில் என்னையும் சேர்த்தவளே.. வா.. உன்னில் பதிந்த ஒரு நினைவெடுத்து கவிதைகளாய் பூப்பிப்போம்; உன் மௌனத்தின் புன்னகை உடைத்து – காதலாய் காதலாய் மலர்விப்போம் வா..!

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

(11) மழையும்.. நீயும்.. காதலும்!!

உன் நினைவுகளை கேட்டு வாங்கியதில் கவிதையாக மட்டுமே மிஞ்சியது – உன் காதல்!

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்