Tag Archives: காதல்

ஒரு வெற்றியின் ரகசியம் – 3 (சிறுகதை)

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு வெற்றியின் ரகசியம் – 4 (சிறுகதை)

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

(83) பிரிவுக்குப் பின் – நிறைவுறுகிறது!

உடம்பெல்லாம் நரைத்து சிரித்த ரோமங்களுக்கிடையே – வலித்துக் கொண்டன – உன்னோடில்லாத அந்த தனித்த நாட்களெல்லாம்; ஊரெல்லாம் சிரிக்கும் சப்தங்களை தாண்டித் தானடி கேட்டுக் கொண்டிருக்கின்றன – நாம் பிரிந்து தவித்த அந்த விசும்பலின் சப்தங்களெல்லாம்; நெருப்பில் சிவந்து தகித்த அனலாய் எரியுதடி – உன்னோடில்லாத நாட்களின் இரவில் கரைகளாய் படிந்து கரைந்தோடிய நம் இளமையும் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 82

இன்று எனக்குப் பிறந்தநாள், புது துணியுடுத்தி எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து தொலைபேசியில் எல்லோரிடமும் வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்கையில் கண்களின் ஓரம் – ஒரு சொட்டுக் கண்ணீர் சுட்டது; தூக்கம் கலைவதற்குள் நீ வந்து என் காதுகளில் கிசுகிசுக்காத பிறந்த நாள் ஒரு பிறந்த நாளா!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 81

தொலைபேசியில் பேசும்போது – ஏதோ நீ பேச வந்ததை பாதியில் நிறுத்தினாய்; நாம் கடந்த இரவுகளின் மிச்ச ஆசைகள் என்று நினைக்கிறேன்; தயவுசெய்து – கடிதத்தில் கூட அவைகளை எழுதிவிடாதே, இன்னும் – ஒன்றரை வருடத்திற்கு மேல் சுமக்க எனக்கு பலமில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக