Tag Archives: செம்மொழி

9 உடைந்த கடவுள்!!

வட்டிக்கு பணம் வாங்கி வட்டிக்கு பணம் வாங்கி உடைகிறது சேமிக்கும் மனப்பான்மை; இல்லாமலே போகிறது மனசாட்சி!! ——————————

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

8 உடைந்த கடவுள்!!

எங்கெங்கோ யார் யாரோ பேசிக் கொள்கிறார்கள் – அவன் சரியில்லை அது செய்தது உலகமே அப்படித் தான் என்றெல்லாம்; நான் இப்படித்தானென்று ஒத்துக் கொள்ள – யாருக்குமே துணிவில்லை!! ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

7 உடைந்த கடவுள்!!

சுட்டெரிக்கும் சமுகத்தில் சுயமாக – எல்லோரும் சிந்திக்காதலில் ஒவ்வொன்றாய் நிகழ்கிறது கொலைகள்; மதமென்றும் ஜாதியென்றும்.. இனமென்றும் பணமென்றும்.. உறவேண்டும் காதலென்றும்.. கடவுளென்றும் கூட!!! —————————————–

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

6 உடைந்த கடவுள்!!

மனிதன் செய்யும் தவறுகளில் – கடவுள் உதவிக்கழைக்கப் பட்டு கடவுள் தோற்கடிக்கப் பட்டு கடவுள் குறை சொல்லப் பட்டு கடவுள் குற்றம் சாட்டப் பட்டு கடவுள் மறுக்கப் பட்டு கடவுள் சபிக்கப் பட்டு கடவுள் உடைந்து தான் போனார். மனிதன் உடைக்கவில்லை என்கிறான்; கடவுள் மனிதனை ‘உடைத்ததாக சொல்வதேயில்லை. கடவுள் கடவுளாகவே இருக்கிறார்!! ——————————————

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

5 உடைந்த கடவுள்!!

ஊரெல்லாம் இருந்த குளங்கள் பிளாட் போட்டு விற்பனையாகி விட்டது;   ப்ளாட்டிற்குள் ஸ்விமிங் புல் கட்டியாகி விட்டது;   ஸ்விம்மிங் புல்லின் கரையில் இருந்து நினைத்துக் கொள்கிறோம் – குளக் கரையின் சில்லென்ற காற்றை,   ஸ்விம்மிங் புல் சிரித்துக் கொண்டது. குளக்கரை நம் கைவிட்டு எங்கோ போனது.   ஏதோ ஒரு விதத்தில் ஏற்பட்ட இழப்பை வளர்ச்சி என்றே சொல்லிக்கொள்கிறோம் நாம் மட்டும்! ————————————————————

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்