Tag Archives: தியானம்

சாதியறு; மனதை மனிதத்தால் தை!! (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 16)

அன்றெல்லாம் ராமநாத செட்டி லோகநாதப் பிள்ளை கொழுப்பேறியக் குப்பன் ஏன் சுப்பனுக்குப் பிறந்த கருவாட்டு பயவென்றுக்கூட எப்படி எல்லாமோ அழைத்து வாழ்ந்திருந்தோம் – ஆனால் அப்போதெல்லாம் ஜாதி என்பது குலம்சார்ந்துச் சொல்லப்பட்ட ஒரு பேச்சடையாளமாகவும் பழக்கவழக்கப் பிரிவறிந்து அவரை அணுகி நன்னடத்தைவழியில் அறம் வழுவாத நிலைப்பாட்டிற்கு ஒத்துமே வாழ்ந்திருப்பதாக அறிகிறோம் அப்போது கூட – அது … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் – 15)

காலத்தின்பின் கடக்கும் அத்தனை உயிர்களும்; வாழ்க!! கையச்சு முறுக்குப் போல உடைகிறது மனசு. நகக்கீறல்களைப் போல மறையாமல் ஒட்டிக்கொண்ட தழும்புகளாக மனதுள் ஒட்டிக்கொள்கிறது வார்த்தைகள். வாழ்வின் மூச்சு நிற்கும்வரை மறக்காமல் வலிக்கிறது நமது ஒவ்வொரு சூடானச் சொல்லும். நாளையைப் பற்றி எந்த அக்கரையுமே கோபத்திற்குக் கிடையாது என்றால் யாரைப் பற்றிய எந்த நினைப்பும் கோபத்தில் பேசும் பேச்சுக்கும் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உடம்பொரு ஆயுதம்; ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப்போர் புரிவோம்.. (நிமிடக் கட்டுரைகள்)

உடம்பு ஒரு ஆயுதம். உலகத்தின் அத்தனை அற்புதங்களையும் அடைவதற்கான பலத்தைப் பெற்ற மனிதனுக்கு உடம்பொரு கோவில். உள்ளிருக்கும் ஆன்மச் சக்தியை கடைந்துப் பார்க்கக் கைவரப்பெற்ற கலன் உடம்பு. நினைத்ததை நடத்தவும், கிடைத்ததை பத்திரப்படுத்தவும் உடம்பால் மட்டுமே முடிகிறது. நிலைப்புத் தன்மையில் தோற்றாலும் காலத்திற்கும் வாழ்ந்ததன் சுவடுகளை விட்டுச் செல்ல உடம்பொன்றே சாகும்வரை உதவுகிறது. இயற்கையின் ரகசியங்களை … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கல்லும் கடவுளும்..

மூடிய கண்களின் ஆழத்தில் பளிச்செனத் தெரிகிறதந்த வெளிச்சம்; வெளிச்சத்தை உதறிப் போட்டு எழுந்தேன் கடவுள் கீழே கிடந்தார்!! பாவம் கடவுளென தூக்க நினைத்தேன் – விழுந்தவர்கள் பலர் நினைவில் வர விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன் உன் கோபம் நியாயம் தான் உன்னை இப்படி படைத்தது என் குற்றம் தானே என்றார் கடவுள் உளறாதே நிறுத்து உன்னை … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (11) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

இதற்கு முன் நடந்தது.. கடவுளும் மதமும் எவ்விதம் சரியோ; மனிதனும் அவன் மனமும் எவ்விதம் சரியோ; வளர்ச்சியும் மாற்றமும் எவ்விதம் சரியோ; வாழ்தலும் வரலாறும் எவ்விதம் சரியோ; எது சரி எது தவறாயினும் எனக்கு என் சோறும் என் தூக்கமும் என் வேலையும் என் வெற்றிகளுமே பெரிதாக தெரிகையில் என் பிறந்ததின் நோக்கம் வெறும் இறப்பை … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்