Tag Archives: பண்பாடு

நானும் அவளும் மேகத்தின் இரு சிறகு போல..

அது ஒரு கண்ணாடி உடையும்போன்ற மனசு; எப்படியோ ஆண் பெண் அவள் அவன் அது இதுவென்றுச் சொல்லி உடைத்துவிடுவதில் என்னதானிருக்கோ (?) ஆனால் – உடையாமல் பார்த்துக் கொள்ளும் அன்பில் தான் அவளும் நானுமிருந்தோம்; தேனீர் தருவாள் இனிப்பது அவளாகவே இருப்பாள், சோறு போடுவாள் உண்டது தனிச் சுகமாகயிருக்கும், தோள் மீது சாய்ந்துகொள்வாள் சாய்ந்துக் கிடப்பதை … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முற்றுப்புள்ளி!!

வாழ்க்கை தீரா வெள்ளைப் புடவைக்கு நெற்றியில் ஒரு புள்ளி வேண்டும், குற்றம் இதென்று உணராது நீளும் காதல்கொலைக்கு நிச்சயம் மறுபுள்ளி வேண்டும், வட்டிக் கடனோடு ஓயாத துயருக்கு வரும்புள்ளி மரணமென்றாலும் வேண்டும், குட்டிச்சுவர் மீது உடைகின்ற புட்டிகளில் தேசம் தொலையாத புள்ளியது வேண்டும், வாழ்க்கை வரமாக அமைகின்ற பாடத்தின் அறிவை விற்காத சமப் புள்ளி வேண்டும், … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தொத்தா என்று ஒருத்தி இருந்தாள்; இனி இல்லை..

நான் அன்றும் இறந்திருக்கவேண்டும் இருப்பதைத் தொலைத்த அந்த வலி அத்தனை கனமானது; விமானமேறி நாடுகடந்து நான் ரசிக்கும் தெருக்களையெல்லாம் வெறுத்துக்கொண்டு வாய்மூடி உயிர்தேம்பியழுத கணமும் அவளை ஒருமுறையேனும் கண்டுவிட ஓடிய ஓட்டமும் தவிப்பும் எனை எரிக்கும்வரை எனக்குள் வலியோடிருக்கும் வானம் கிழிவதைப் போல அன்று அறுபட்ட மனதில் அவள் அப்படி வலிப்பாளென்று நினைக்கவேயில்லை காதாழம் சிதைக்கும் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை!

ஒவ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள் எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய் வந்துவிழுந்தது அவரின் மரணம்.. மரணம்; பெரிய மரணம் இல்லாதுப் போவது மரணமா? பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர் அவர்களென்ன பிணமா? பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள் அவரின் மரணத்திற்குப் பின் அவளின் பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும் மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

7, மறுபடி பிறந்தாலும் அந்தத் தெருவில் பிறக்கவேண்டும்..

ஒரு காலஇடைவெளியின் கண்களோடுத் திறக்கிறது எனக்கான பார்வை.. நெடுங்காலத்திற்குப் பிறகு மீண்டுமந்த பழைய ஊருக்குச் செல்கையில் மரங்கள் வெட்டப்பட்டிருந்தன ஜூலி இறந்துப் போயிருந்தாள் மாடுகள் வளர்ப்பு அறவே அங்கு காணோம் ஆடும் கோழிகளும் கறிக்காக மட்டுமே கொண்டுவரப்பட்டது முருகன் அண்ணன் இறந்துப் போயிருந்தார் இட்டிலி விற்கும் ஐயா காய்கறி மாமா யாருமில்லை அங்கு.. யாருமில்லா அந்தத் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்