Tag Archives: பண்பாடு

33) கவிதையில்லாத பொழுது..

ஒரு நெடுமரத்தின் இலைகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து வேரறுபடும் நிலை; மண் வாரி முகத்திலெறிய நெருப்பு விழுந்து குழி குழியான கதியாய் உணர்வுகள் அறுபட்டு வலிக்குமொரு ரணம்; உயிர் முடிச்சவிழ்ந்து துடித்து துடித்தடங்கும் உடல் சரிவில் ஒரு விளக்கு அணைந்த இருட்டு; அனல் காற்றில் வெப்பமேறி வெடித்துச் சிதறி மண்ணில் புதையுண்ட விதையின் சிறுமுளை துளிர்த்த உயிர்ஜனிக்கும் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

30) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்!!

ஒரு பானைப் பொங்கலிலே – நூறு பானை சந்தோசம்; பொங்கும் நூறு பானையிலும் – மணக்குதுப் பார் மண்வாசம்! மஞ்சக் கொத்துக் கட்டியதும் சிரிக்குதுப் பார் சூரியனும், வெந்தப் பானைக் குளித்ததுபோல் மினுக்குதுப் பார் வீடுகளும்! குருத்தோலைத் தோரணமும், கரும்பச்சை மாயிலையும் அறுத்தமர வாசலுக்கு அடிப்பச்சை பூசிவிடும், மஞ்சுவிரட்டுக் காளைகளும் – நீளம் சிவப்பு வண்ணஞ்சொலிக்கப் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

26) இனியேனும்; எதையேனும் செய்.. (2012)

வா.. சிப்பி திற முத்து எடு உப்புக் குளி முக்கி கடலில் மூழ்கு உலகின் நீளத்தை நீருக்குள் தேடு வானத்தின் உயரம் மிதித்து மிதித்து ஆழத்தை அள அந்திவான பொழுதின் மௌனத்தில் ஞானம் பெருக்கு எங்கெங்கோ தேடி அலையும் பாடத்தை வீட்டில் படி எல்லாம் நடக்கும்; எதையேனும் செய்.. முதிர்கன்னிகள் பாவம் வரதட்சணை யொழி விதவை’ … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (15) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

வாசல்ல சாணி தெளிச்சா கிருமி நாசினி, மாவுல கோலமிட்டால் சிற்றுயிர்களுக்கு உணவு கிடைக்கும், உணர்வு கூடுமிடங்களில் தங்கம் அணிந்தால் அழகோடு உஷ்ணமும் இறங்கும், நல்ல விழா நாட்கள் வைத்தால் வாழ்வு குதூகலப்படும், தெய்வ நம்பிக்கை கூட்டினால் கர்வமும் பேராசையும் அற்று போகும், தானம் செய்யும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டால் எளியோரின் வாழ்வும் சிறக்கும், மனதை ஒருமுகப் … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காற்றின் ஓசை (14) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!!

இதற்கு முன் நடந்தது.. வாழ்வின் அனுபவங்களின் முக்கிய கூறுகளை, ஆரோக்கியமான சிந்தனைகளை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் அக்கரையில் நீள்கிறது எனக்கான பயணம் திருமேனியா. சுவற்றில் அடிக்கும் ஆணி போல் என் எண்ணங்களை உங்களுக்குள் குத்தி ஆழப் பதியவைக்க எண்ணவில்லை. அதே சுவற்றில் பூசும் ஒரு புதிய வண்ணத்தினை போல் ஒரு ஒத்திகைக்கு என் எழுத்தினை காட்டுகிறேன். இல்லை … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக