Tag Archives: புதுக் கவிதைகள்

16, தன்னை தான் உணர்வதே ஞானம்..

முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும் முடிவுகளால் தளர்ந்தவர்கள், நினைத்ததைச் சாதித்தும் நடக்காததில் நோகும் பிறப்புகள்; ஏக்கப் பெருமூச்சினுள் வெந்துவெந்தே நித்தம் வாழ்பவர்கள், என்றேனும் மாறும் வாழ்க்கைக்கு என்றென்றும் கனாக்காணும்; ஈசல் பூச்சிகள்; வந்தவர் போனவர் பற்றியெல்லாம் பகடி பேசும் பழையப் போர்வாள்கள்; அடிப்பவன் ஓங்கியடித்தால் – அதிர்ச்சியிலேயே மூச்சைவிடும் அற்ப உயிரின் பாவப் பிராணிகள்; எதிலெல்லாம் ஏற்றம் உண்டென … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

4, வலி தீரா மனதிற்குள் ‘அவளின் ‘ஆயிரம் ‘ஆயிரம் நினைவுகள்..

அடகுவைத்து மீட்டமுடியாத நகைகளைப்போல ஆசைப்பட்டு கிடைக்காமல் காலாவதியாகிப்போன நினைவுகளுள் நிறைய இருக்கிறாய் நீ; உன்னைத் தொடாமல் அதிகம் பார்க்காமல் ஓரிரு வார்த்தையைக் கூடப் பேசாமல் ச்சீ எதற்கிது எனும் சலிப்பின்றி சிநேகித்த எனதன்பில் என்றுமே புனிதம் குறையாதிருப்பவள் நீ; படைப்பு பிரம்மாக்கள் வடிக்கும் சிலைக்கீடாக நீ எனக்குள்ளே சிரித்திருக்கும் காட்சியுள்தான் எனக்கு சூரியன் உதிப்பதும் நிலா … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கவனிக்கவேண்டிய காருண்யம்..

15 கொசு பாவம் பசிக்குத்தான் ரத்தம் குடிக்கிறது; நாம்தான் கொலைக்காரர்கள் வலிக்கு பதிலாக – கொசுவையே கொன்றுவிடுகிறோம். கொசு அதன் இயல்பில் அது சரி; எனில்  – நாம்? —————————————————— வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கவனிக்கவேண்டிய காருண்யம்..

14 இடத்தை சுத்தம் செய்வதாக நினைத்து வெட்டிய மரங்களில்லா இடத்தில் எத்தனை மரணம் (?) எத்தனை மரணம்.. ?!! —————————————————— வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

13 புற்களை பூஞ்செடிகளை காடுகளை அழித்து அழித்துப் பரவிய நாம் – சிறுத்து சிறுத்தேப் போகிறோம், மனிதம் அறுந்து அறுந்து மறைகிறது.. —————————————————— வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக