Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்

ஞானமடா நீயெனக்கு (45)

நான் உன் அம்மாவிடம் பேச தொலைபேசியில் அவளை அழைத்தேன்; நீ தொலைபேசியை அவளிடமிருந்து பிடுங்கி அப்பா அப்பா என்று கத்தினாய்; முதல் முறையாக கிரஹம்பெல்லினை மனதார பாராட்டினேன்!! ——————————————

Posted in சின்ன சின்ன கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (44)

நீ எனை அம்மா என்பாய் – அம்மாவை அப்பா என்பாய், யாரை எப்படி அழைக்கிறாய் என்பதில் ஒன்றுமேயில்லை; இருவரையுமே அழைக்கிறாய் என்பதில் நிறைவானோம் இரண்டு பேருமே!! —————————–

Posted in சின்ன சின்ன கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (43)

தின்பண்டங்களை வீடெல்லாம் இரைத்தாய், அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ அமைதியானாய்; ஓயாமல் மேலும் கீழுமாய் எகிறி எகிறி குதித்தாய் ஏக சேட்டைகள் செய்தாய் அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ அமைதியானாய்; அம்மாவின் முடி பிடித்து இழுத்தாய் தலையிலேறி அமர்ந்தாய் அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ அமைதியானாய்; எல்லாவற்றிலுமே அம்மா என் பெயரை சொன்னதும் பயந்து அமைதியானாய் … Continue reading

Posted in சின்ன சின்ன கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

36 சிவப்பு ரத்தத்தின்; கருப்பு ஜூலை!

ஆதிக்க நெருப்பு தின்ற அன்றாட ஏழைகளின் இறப்பிற்கு சாட்சி நின்ற நாள்காட்டியின் சாபமிந்த மறக்கமுடியா – கருப்பு ஜூலை! மனிதக் – கருப்பு மனத்தின் கொலைவெறி முற்றி முற்றும்; முடியாதோரையே அழித்த வரலாற்றுக் கொடுமை – கருப்பு ஜூலை! சுயநல வெறி சிகப்பாய் ஓடி தாமிரபரணியின் உடம்பெல்லாம் பிணங்களாய் மிதந்து – மனிதமின்மையை மனிதனே நிரூபித்த; … Continue reading

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 34

வாழ்க்கை வெங்காயம் போல் என்றார் யாரோ; உரிக்க உரிக்க கண்ணீராம். உரிபடுவதேயில்லை இப்போதெல்லாம் நிறைய பேரின் வாழ்க்கை; வெங்காயம் என்று வாழ்க்கையை சொல்லிக் கொண்டதில் கண்ணீர் மட்டும் மிட்சம் போல். என்னை கேட்டால் வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள் உங்கள் வாழ்க்கையை யாரிடமும் தேடாதீர்கள் வாழுங்கள் என்பேன்!! ———————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக