84 உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !!

நாட்கள் தொலைத்திடாத
அந்த நினைவுகளில்
சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ;

னை பார்த்த பழகிய உன்னோடு பேசிய
முதல் பொழுது முதல் தருணம் –
உடையாத கண்ணாடியின் முகம் போல
பளிச்சென இருக்கிறது உள்ளே;

டிவந்து நீ
சட்டென மடியில் அமர்ந்த கணம்
என்னை  துளைத்து துளைத்து பார்த்த
இருவிழிகள்,
எனக்காக  காத்திருக்கும் உனது தவிப்புகள் என
எல்லாமே உன்னை எனக்குள் –
மறவாமல் வைத்திருக்கிறது இன்னும்;

னக்காக இல்லையென்றாலும்
உனக்காகவேனும் வந்து –
உன் வாசலில் நின்று நீ ஓடிவந்து கட்டிக் கொள்ளுமுன்
ஸ்பரிசத்தை எல்லாம் சேகரித்து –
இன்றுவரை பத்திரமாக உணர்வுகளில்
வைத்திருக்கிறேன்;

பெரிதாக அதையெல்லாம் எண்ணி
கதையெழுதும் காதலெல்லாம்
அல்ல; நம் காதல்;

காதலென்ற வார்த்தை கூட நம்
உதடுகளை ஒருவேளை சுடச்செய்யலாம்,
அதையெல்லாம் கடந்து
நமக்கிடையான ஒரு புரிதல்; ஒரு ஆழமான அன்பு அது.

திரும்ப எடுக்க இயலா நீளக் கிணற்றுக்குள்
தவறிப்  போட்டுவிட்ட – கல் போல
மனதிற்குள் மனதை போட்டுவிட்டு
யாரிடமே சொல்லிக் கொள்ளாத தவிப்பு அது.

சொல்லியிருந்தால் மட்டும் உலகம்
அதற்கு என்ன பெயர் வைத்திருக்குமோ
தெரியாது – ஆனால் –

காதலென்னும் அவசியமோ
நட்பென்று சொல்லும் பெரிய வார்த்தைகளோ
அல்லது ‘அத்தனை’ இடைவெளியோ கூட
அவசியப்பட்டிருக்க வில்லை நமக்கிடையே;

ப்படி –
சேருமிடமே தெரியாத
வானமும் பூமியும் போல்
எங்கோ ஒரு தூரத்தில்
ஒட்டிக் கொண்டு கிடந்தது நம் மனசு;

நானென்றால் நீ ஓடிவருவதும்
நீயென்றால் நான் காத்திருப்பதும்
எச்சில் பாராமல் –
தொடுதலுக்கு கூசாமல் –
ஆண்  பெண் பிரிக்காமல் –
எந்த  வரையறையுமின்றி –
உரிமையே எதிர்பாராது – மனதால்  மட்டும்
நெருங்கியிருந்த உணர்வு
சொன்னால் மட்டுமிப்போ யாருக்குப் புரிந்துவிடும்???

தெரிந்தால் புரிந்துக் கொள்ளக் கூட
திராணியின்றி  நகைக்கும்
உலகம் தானே இது;

அட, உலகமென்ன உலகம்;

உலகத்தை தூக்கி வீசிவிட்டு
நாம் கூட நம்மை வெளிப் படுத்திக் கொள்ள
தயாரில்லை என்பதற்கான காரணத்தை
காலம் மட்டுமே ஒருவேளை
அறிந்திருக்கக்கூடும்;

ப்படியோ; யார்மீதும்
குற்றம் சொல்வதற்கின்றி பிரிந்தபின்
இன்று – அறுத்துப்போட்ட உயிர்போல வலிக்கிறதே
உனக்கும் எனக்கும் மட்டும்;

தூரநின்று கண்சிமிட்டும்
அந்த குழந்தையின் சிரிப்புப்போல
நீ சிரிக்கும் அந்த சிரிப்பின்
நினைவுகளில் தான்
கட்டிவைத்திருக்கிறேன் என்னை –
வாழ்விற்குமாய்; இப்போதும்!!

ப்படியே கடந்து கடந்து
ஓர்நாளில் –
என் உயிர்முடுச்சு அவிழ்ந்து
நான் கீழே விழுகையில் –

ஒரு சொட்டுக் கண்ணீராகவாவது
நீ வந்து நிற்கையில் –

ன் உடம்பு சாம்பலாய் பூத்திருக்கும்
நீ விழுந்து அழுது புரண்டால் – உனக்கு
வலிக்காமல் தாங்கிக்கொள்ளும்!!
————————————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to 84 உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !!

  1. suganthiny75's avatar suganthiny75 சொல்கிறார்:

    Super, super……..sir

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சுகந்தினி. வலிக்க வலிக்க அழாமல் சேகரித்து வைத்த நிறைய பேரின் கண்ணீரிது. வரிகளால் கோர்த்ததில் வார்த்தைகள் கவிதையும் ஆனது. எங்கோ யாருக்கோ புரியும், யாரேனும் சிலருக்கு புரியாமலும் போகும்..

      Like

  2. anpudan vijeyananth's avatar anpudan vijeyananth சொல்கிறார்:

    //*எ*ன் உடம்பு சாம்பலாய் பூத்திருக்கும்
    நீ விழுந்து அழுது புரண்டால் – உனக்கு
    *வலிக்காமல் தாங்கிக்கொள்ளும்!!*//
    காதலின் வலிமையையும் வலியையும் அருமையாக படைத்துள்ளீர்கள் மிக நன்று சார்

    Like

  3. rathnavel natarajan's avatar rathnavel natarajan சொல்கிறார்:

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    Like

  4. Umah thevi's avatar Umah thevi சொல்கிறார்:

    உண்மையான, புனிதமான, ஆழமான அன்பையும் , வலியையும் மிகவும்
    உணர்வு பூர்வமாக எழுதி , இறுதியில் கண்ணீர் சிந்த வைக்கும்
    வரிகளோடு இப்படைப்பை அருமையாக படைத்து உள்ளீர்கள்.
    வாழ்துக்கள்!

    Like

  5. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    மிக்க நன்றி உமா, நன்றி ரத்னவேல். நாமெல்லோருமே அன்பினாலும் நட்பினாலும் உருகிப் போகும் இதயங்களை சுமந்து தானே திரிகிறோம்; அந்த இதயத்தில் நமை கடந்தும் நமக்கே தெரியாமல்; ஏன் உலகிற்கே தெரியாமல் கூட ஒருசில முகங்கள் இருந்து தானே கொள்கின்றன? அதை சற்று வெளிக்காட்டும் கவிதை இது.

    மிக்க நன்றி தங்களின் கருத்து வழங்கியமைக்கு..

    Like

  6. ramanujam's avatar ramanujam சொல்கிறார்:

    பூத்திருக்கும் சாம்பல்-அந்த
    பூவை அழுதே புலம்பல்
    காத்திருக்கும் தாங்க-மனம்
    கனக்க பாடி னீங்க
    (பா)த்திருக்கும உலகம்-உங்கள
    பயணம் நுதலில் திலகம்
    நே(ற்)த்து இதனை கண்டேன்-நெஞ்சம்
    நினைத் ததையே விண்டேன்!!

    புலவர் சா இராமாநுசம்
    புலவர்குரல் சென்னை 24

    Like

  7. suganthiny75's avatar suganthiny75 சொல்கிறார்:

    தூரநின்று கண்சிமிட்டும்
    அந்த குழந்தையின் சிரிப்புப்போல
    நீ சிரிக்கும் அந்த சிரிப்பின்
    நினைவுகளில் தான்
    கட்டிவைத்திருக்கிறேன் என்னை –
    வாழ்விற்குமாய்; இப்போதும்!!anupavam illai

    Like

பின்னூட்டமொன்றை இடுக