Monthly Archives: மே 2011

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 7)

உலக மக்களின் மொத்த பரபரப்பினையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட ஒரு பிரபல்யம் மிக்க அசைவ உணவகமான சனியாண்டி விலாஸ் வாசலில் வந்து நின்றது அந்த மீன்களை சுமந்து வந்து விற்பனைக்குக் கொட்டும் மீன்பாடி வண்டி. பழக்கத்தின் பேரில் மிக லாவகமாக ஈர வலையில் சுற்றிக் கட்டப் பட்டிருந்த மீன்களை எடுத்து முதுகு மேலிட்டு சற்று சாய்ந்தவாறு … Continue reading

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 6)

இதற்கு முன்.. அமைதியாய் இசைத்துக் கொண்டிருந்த கடல் திடீரெனப் பொங்கியது. உலகை மடியில் தாங்கிக்கொண்டிருந்த பூமியின் கடல்பாகம் லேசாக அதிர்வுற்றன. நிலத்தின் நடுக்கத்தில் நிலைகுலைந்த கடல் பொங்கி அலையெனத் திரண்டு ஒரு ராட்சத வடிவில் கரையின் ஓரமிருந்த கிராமங்களுக்குள் எட்டியவரை புகுந்தன.. ‘ஐயோ.. ஐயோ.. போச்சே போச்சே எல்லாம் போச்சே சுனாமி வந்துடுச்சே… கடல் துரோகி.. … Continue reading

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கடவுளை நோக்கி விரிகிறது; வானம்!! (திரை விமர்சனம்)

சமூகத்தின் சந்து பொந்துகளில் வீழ்ந்துகிடக்கும் மனிதர்குல இன மானத்தை நிமிர்த்தி, மனிதர்களை மனிதர்களாக அடையாள படுத்த நல்லதொரு திரைப்படமாய் விரியத் துணிந்திருக்கிறது வானம். நடக்கும் தவறுகளை யார் சட்டையையும் எட்டிப் பிடிக்காமல், நகர்வுகளில் வெளிப்படும் மனிதரின் இயல்பான மனிதத்தினால் எடுத்துக் காட்டி, ஆங்காங்கே தெறிக்கும் ஞானமென; அதர்மத்தை உடைத்தெறியத் தக்க காட்சிகள் அமைத்து, கடவுள் பற்றிய … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

97 இதயவலி; இலவச இணைப்பு!!

காதல் மறுக்கப் பட்ட காதலியின் கால்கொலுசு சப்தங்கள்; இதயம் மரணத்தினால் துடிக்கும் துடிப்பு; துரோகத்தால் புடைக்கும் நரம்பு; பிரிவின் வலியின் அழுத்தம்; திருட்டு கொள்ளைகளால் எழும் பயம்; குழந்தை கதறும் அலறலின் கொடூரம்; பெண் கற்பழிக்கப் படும் காட்சிகள் மற்றும் கதைகள்; கொட்டிக் கொடுக்கப் படும் வட்டியின் வேதனை; உறவுகளின் சிரித்துக்கொண்டே நிகழ்த்தப் படும் குடும்ப … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம் – ஈழ விடுதலையுடன் – நிறைவுறுகிறது!!

இதற்கு முன்.. பீரங்கிக்கே துணிந்துவிட்ட தமிழினம் துப்பாக்கிக்காகவா பயம் கொள்ளும். மார்பை விரித்துக் காட்டி நின்றனர் எல்லோரும். யாரைச் சுடப்போகிறாய் என்னைச் சுடுகிறாயா? சுடு சுடு.. என்னை சுடு இவனை சுடு எங்கள் எல்லோரையும் சுட்டுவிட்டுப் போ. என்ன கிடைத்துவிடும் உனக்கு, எங்களின் பிணம் வழியெங்கும் இரைந்துக் கிடக்க அதன்மீதேறி படுத்து உறங்கினால் உறங்கிவிடுவாயா நீ? … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்