Monthly Archives: ஏப்ரல் 2011

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 3)

இதற்கு முன்.. இருவரும், என்னருகில் வந்து நின்று துப்பாக்கியை சரி செய்து வைத்துக் கொண்டு. யார் நீ என்றார்கள். லண்டன் செல்லவிருக்கும் ஒரு பயணி என்றென். அப்படியா விமானச் சீட்டு காட்டு என்றார்கள், காட்டினேன். கடவுசீட்டு காட்டு என்றார்கள், காட்டினேன். அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து, சிங்கள மொழியில் ஏதோ பேசிக் கொண்டனர். நான் ஒன்றும் … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 2)

இதற்கு முன்.. நானொரு லண்டன் செல்லவிருக்கும் பயணி. இடையில் நான்கு மணிநேரம் கொழும்பு விமானத்தில் விமானம் தரையிறங்கி காத்திருக்க வேண்டுமென்பது ஸ்ரீலங்கன் விமானத்தின் நிர்வாக பயணத் திட்டம். அதன்மூலம் என் மண்ணினைத் தொட்டுக் கடந்து போக இந்த பதினேழு வருட வெளிநாட்டுப் பயணத்தில் இன்றுதான் இப்படி ஒரு வாய்ப்பமைந்தது. விமான நிலையம் மிக சுத்தமாகவும், காண … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 1)

காற்று வீசிடாத வான் கிழித்து, பசுமை பூத்திருந்த தரை நோக்கி விரைந்தது நான் பயணிக்கும் அந்த ஸ்ரீலங்கன் விமானம். என் தாயின் மடி தொடும் உணர்வில் – விமானம் நெருங்க நெருங்க ஆசை பூரித்து, வாசலின் முன்வந்து, தரையிறங்கியதும் திறக்கவிருக்கும் கதவு நோக்கிச் நின்றுக் கொண்டேன். விமானம் அறிவித்திருந்த நேரப் படி தாமதமின்றி கொழும்பு விமானதளம் … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

40 விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

சில்லறைக்கு விலைபோகும் ஓட்டு எந்திரங்களல்ல – நாம் நாளைய விதியை இன்றெழுதும் தேர்தல் பிரம்மாக்கள்; இலவசத்தில் மதிமயங்கி எடுத்து வீசிய ஊழல் பணத்தில் வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம் தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும் மண்ணின் – உரிமை குடிகள்; போட்டதை தின்று விரித்ததில் தூங்கிப் போகும் புரட்சியே யற்ற வெற்று குப்பைகளல்ல … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சில்லறை சப்தங்கள்..

காலம் எட்டி உதைக்காத நாட்களில்லை விரலிடுக்கில் சொடுக்கினாற் போல் வருகிறது வலிகளும்.. துக்கங்களும்! சொல்லத் துணியா வார்த்தைகளுக்கிடையில் மறுக்கவும் மறக்கவும் முடிந்திடாத – ஏக்கங்களுக்கு நடுவே சிரிக்கத் துணிந்த வாழ்க்கையில் தான் – சொல்லி மீளாப் போராட்டாங்கள் எத்தனை…எத்தனை(?) நான் தான் மனிதனாயிற்றே என…. நெஞ்சு நிமிர்த்திய போதேல்லாம் – கர்வம் தலையில் தட்டி மார்பு … Continue reading

Posted in கவிதைகள், சில்லறை சப்தங்கள் | Tagged , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்