பிறந்தநாள் பாடல் தமிழில் – இசை ஆதி!!

உறவுகளுக்கு வணக்கம்,

முன்பறிவித்திருந்தது போல் எங்களால் இயன்றவரையிலான முயற்சியில் பிறந்தநாள் பாடலை தமிழில் செய்துள்ளோம்…

பாடல் கேட்டுவிட்டு கருத்துப் பதியுங்கள். காத்திருக்கிறேன்.

ஒரு கூடுதல் தகவல், சிலர் இப்பாடலை இத்தனைப் பெரிதாக இருப்பதாகக் கருதலாம். நாங்களும் கருதினோம். அதற்கான விளக்கம் யாதெனில் –

நாமெல்லாம் பிறந்த தினத்திற்குப் பாடும் ஆங்கிலப் பாடல் வெறும் இரண்டு வரியிலானது தான். அது மீண்டும் மீண்டும் பாடி நான்கு வரி பின் எட்டு பின் அதற்குமேளுமென கூடுதலாகவும் அவரவர் விருப்பம் மற்றும் நேரத்திற்குத் தக மாற்றியும் கொள்ளப்பட்டது.

1893-இல் வணக்கம் சொல்லவேண்டி மெட்டமையப் பெற்று,  1912-இல் பிறந்த நாளிற்குப் பாட வரிகளமைத்து, 1918-இல் வெளியாகி, 1935-இல் உரிமையாக்கப் பட்டபோது, எல்லோருக்கும், வெறும் இரண்டு வரியா? என்று எண்ணத் தோன்றியது. என்றாலும் மீண்டும் மீண்டும் பாடப்பட்டு அந்த இரண்டு வரிகள் காலம் இத்தனைக் காலம் கடந்தும் உலக மூலை வரை எட்டி இன்றும் நிலைக்கவேச் செய்திருக்கின்றன. இதன் பின்னணியில் நீட்டி எழுதப் பட்டவையும் எவ்வளவோ உண்டு. அவைகள் இருந்தும் இல்லாமலும் உள்ள நிலையில் நாம் எண்ணியது –

‘ஒரு குழந்தைக்கு வாழ்த்தும் தமிழர் மனது எப்படி இருந்திருக்க வேண்டும்? அந்தப் பாடலைக் கேட்கும் குழந்தைக்கு நாம் வாழ்ந்தப் பெரியோராக என்ன சொல்ல வருகிறோம்? அந்த குழந்தையை இவ்வாறெல்லாம் வாழ்த்தும் தமிழர் தன் வாழ்க்கையை எப்படி வாழ்திருப்பர்?’ போன்ற எண்ணங்களை உள்ளடக்கி சற்று நீளமாகவே இது எழுதப்பட்டாலும், நீளமாக இருப்பதாக எண்ணுவோர் அந்த முதல் பல்லவியை மட்டும் பாடி, சரணத்தை விட்டு வாழ்த்தினாலும் போதும், ஆனால் நம் குழந்தைக்கான வாழ்த்து நிச்சயம் தமிழில் தான் இருத்தல் வேண்டும் என்று எண்ணினோம்.

இருப்பினும், இது ஒரு துவக்கப் புள்ளிதானே தோழர்களே, நிறுத்தப் புள்ளியை காலம் முடிவு செய்துக் கொள்ளும்.

மிக்க நன்றிகளுடன்…

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பாடல்கள் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

15 Responses to பிறந்தநாள் பாடல் தமிழில் – இசை ஆதி!!

  1. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    வாழ்த்துகள்.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி ஐயா.., இது முயற்சி தானே.., இதை வைத்து தமிழுக்க இன்னும் பல அரிய படைப்புக்கள் கிடைக்குமென்று எனக்கு நிறைந்த நம்பிக்கைகள் உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம்..

      Like

  2. Umah thevi's avatar Umah thevi சொல்கிறார்:

    மனதில் அன்பின் உணர்வை சுண்டி எழுப்புகிறது இப்பாடல்.
    குழந்தையை தூக்கி, கொஞ்சி,ஆடி மகிழ தூண்டுகிறது இந்த அருமையான இசை.
    மனதிற்கு இதமான அற்புதமான வரிகள் . பாராட்டுக்கள்!
    மேலும் நிறைய பாடல்கள், உங்கள் கவியில் ஒலிக்க நல் வாழ்த்துக்கள்.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      நன்றி உமா. நிறைந்த மனதின் வாழ்த்து பளிக்கும் போல் விரைவில் நிறைய பாடல்கள் வெளிவர உள்ளன.. குறிப்பாக இதைப் பாடியது அன்பிற்குரிய ‘சரோ’ அவர்கள். மிக நன்றாகப் பாடியுள்ளார். முகப்பு படம் மாற்ற முயற்சித்துக் கொண்டுள்ளோம்…

      Like

  3. SimmaBharathi's avatar SimmaBharathi சொல்கிறார்:

    வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். மேலும் நிறைய பாடல்கள் ஒலிக்க நல் வாழ்த்துக்கள்.

    Like

  4. sushruvaa's avatar sushruvaa சொல்கிறார்:

    அருமை! இன்னும் மெருகூட்ட சிறப்படையும் இவ்வாழ்த்துப்பாட்டு! வாழ்த்துக்கள்!

    Like

  5. surendran's avatar surendran சொல்கிறார்:

    வாழ்த்துக்கள் திரு. வித்யாசாகர் மற்றும் இதை பாட்டாக இசையமைத்த குழுவிற்கும்.

    பாடலை பிரபலப் படுத்துவோம், நன்றி.

    சுரேந்திரன்

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றியும் அன்பும் சகோதரர். எப்படி இருக்கீங்க? திருமண வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கு? அண்ணியை விசாரித்தேன் என்று சொல்லுங்கள்.

      இது நாம் செய்தது. நம் முகில் படைப்பகம் மூலம் தான் செய்துள்ளோம். இன்னும் பாடல்கள் வரவுள்ளன. எல்லாமே நம் ஆதி தான் செய்கிறார். மொத்தமாக “ஒன்றுகூடு” எனும் தலைப்பில் குறுந்தகடாக வெளியிடவுள்ளோம். தஞ்சை செல்வியும் சில பாடல்கள் செய்கிறார்கள். அது “மன்சோறும்; ஒரு அரபிக் கடலும்” எனும் தலைப்பில் குறுந்தகடாக வர வுள்ளது. இயன்றதை இயன்றவரை செய்வோம். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும் வணக்கமும்..

      Like

  6. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    திரு பிரின்ஸ் வெளியிட்டுள்ள அவரின் வலைதலத்துப் பதிவு, இப்பாடலுக்கான அர்த்தத்தைக் கொடுக்கிறது. தளத்திற்கான உலாவி இதோ: http://princenrsama.blogspot.com/2012/01/blog-post.html
    ———————————————————————–

    பேருதவி செய்தீர்கள் திரு. பிரின்ஸ். தங்களின் உணர்வுகளை மதிக்கிறேன். எட்டுப் பாடல்கள் சேர்த்து விரைவில் குறுந்தகடாக வெளியிடவுள்ளோம்.

    ஆனால் இதை எப்படிக் கொண்டுபோவது உலகளவில் என்று தான் தெரியவில்லை.

    செய்துவைப்பதை தன் கடனாக அறிகிறேன். கொண்டுசெல்வோர்; கொண்டுசெல்வர். தங்களின் இத்தனை தூர அக்கறைக்கும் பதிவிற்கும் நன்றியும் வணக்கமும்…

    வித்யாசாகர்

    Like

  7. sudha's avatar sudha சொல்கிறார்:

    really very super

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சுதா. என் நண்பர் ஒருவர் சொன்னபிறகு என் அலைபேசியில் அழைப்பொலியாக ஆக்கிக் கொண்டேன் இப்பாடலை. இப்போதெல்லாம் யாரேனும் அழைத்தால் கூட உள்ளுக்குள் யாரையோ வாழ்த்திக் கொண்டேயிருக்குமொரு உணர்வு இசையில் இதமாய் கரைகிறது..

      Like

surendran -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி