Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

கண்ணீர் வற்றாத காயங்கள்..

1 ரத்தம் பிசுபிசுத்த நினைவுகளை சுயநலத்தினால் – கழுவிக் கொண்டாலும் கறைபடிந்த உணர்வோடு திரியும் இதயத்தில் – இன்னும் ஒட்டிக் கொண்டுள்ளது அந்த ஈழத்திற்கான ஒருதுளி நம்பிக்கை!! ———————————————– 2 ஈழம் வெல்லும் வெல்லுமென்று முழங்கியேனும் கொண்டிருப்போம்; உள்ளே உறங்கிப் போகும் உணர்வுகள் அம்மண்ணில் உறைந்த ரத்தத்தை நினைத்தேனும் ஈரமொடிருக்கட்டும். நெஞ்சின் ஈரம் – நாளை … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

87 அரைகுடத்தின் நீரலைகள்!!

1 அவர்கள் அப்படித் தான் இருந்தார்கள். இனிப்பாகவும் கசப்பாகவும் புதுசாகவும் பழமை குறையாமலும் வாழ்வின் முதல் படியிலிருந்து கடைசிப் படி வரையிலும் அவர்களுக்காகவே அதிகம் வாழ்ந்தார்கள். அவர்களை உறவென்று சொல்லிக் கொள்ளும் கட்டாயத்தில் சிநேகமாய் ஒரு பூவும் – மரணிக்கையில் அழுகையாய் பல குரலும் கேட்டது!! —————————————————————- 2 ஒவ்வொரு தெருவிற்கு இடையேயும் நான்கு வீடுகள் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உன் புத்தகப் பை நிறைய, அந்த கண்ணீரும் சிரிப்பும்!!

நீ பிறந்தாய் எனக்குள் ஒரு பூ பூத்து அப்பா எனும் வாசமாய் உடலெங்கும் கமழத் துவங்கியது.. பின் – நீ வளர வளர அந்த அப்பாயெனும் வாசத்தால் நானும் உலகெங்கும் மணம் பரப்பி மதிப்பால் நிரம்பி நின்றேன்; இன்றும் – உன்னிடம் நான் பெற்ற – பெரும் – பாடங்கள் ஏராளம், ஏராளம்; என் குழந்தை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இயக்குனர் பாலாவின் இன்னொரு திரைக் காவியம் – அவன் இவன்!!

ஒவ்வொரு மனிதரின் ஒவ்வொரு விதமான வாழ்க்கையின் வெவ்வேறு காட்சிகளை ஒவ்வொன்றாய் தன் ஏட்டில் பதிந்துக்கொண்டுதான் வருகிறது ஒவ்வொரு திரைப்படமும். அதிலும் எளிய மக்களின் வாழ்தலை சமகாலப் பதிவாக்கும்  அரிய திரைப்படங்கள் தமிழரின் கலைத் திறனை மெய்ப்பிக்கும் சான்றாகவே தற்காலங்களில் வந்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகையில், ஒரு எழில்மிகு கிராமத்தில் வசிக்குமொரு குடும்பத்தின் இரு மகன்களையும், அவர்களின்  யதார்த்த வாழ்க்கையினையும் … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

ஒரு தோசையும்; தொட்டுக்க நாலு மாத்திரையும்.. (சிறுகதை)

குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும் அவர்களுக்கு நடுவே ஒரு இதய நோயாளியான தந்தையுமென திறக்கிறது இக்கதைக்கான கதவுகள். “ஐயோ… தாத்தா!!!!!!!!!!!!!!!!” ”அம்மா தாத்தா குளிக்கிற அறை கதாவான்டையே விழுந்துட்டாரு” “என்னடி சொல்ற???!!!!” “உண்மையா தாம்மா, வந்து பாரேன்…” “ஐயோ ஆமா…, … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , | 18 பின்னூட்டங்கள்