Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

செவிலித் தாயிக்கு மனசு வானம் போல..

பிணம்தின்னும் சாமியிடம் வரம் கேட்கும் பூதங்கள், மலமள்ளி மூத்திரம் துடைத்தும் மனதால் மணக்கும் சாமிகள்; அறுந்தக் கழுத்தில் ரத்தம் கசிய கண்ணீரால் கழுவும் தெரசாக்கள், தாயைப் போல கருணைப் பொங்க ஆலயம் தொழும் தெய்வங்கள்; நீதி தேடி ஒதுங்கிடாது சேவை- யாற்றும் தேவதைகள், பாவமூட்டையை தான்சுமந்து வியாதியை போக்கும் சகோதரிகள்; காலவிளக்கை ஊதிவிட்டு; கருணையில் தலைகோதும் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தீராத தீவிரவாதம்..

எது தீவிரவாதம்? எச்சில் உமிழும் வேகத்திலும் எட்டி குதிக்கிறது தீவிரவாதம்.. எழுந்து நடைபழகும் வயதில் முட்டை கொடுத்து பின் மீனறுத்து பிறகு கோழி விரட்டிப் பிடித்து துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து குழந்தைக்குப் பரிட்சையமாகிறது தீவிரவாதம்.. எதிரியைச் சுடுவது வெற்றி தான் விழுந்தால் கொலையெனும் மனோபாவம் தீவிரவாதத்தின் முதல் போதனையாகப் பதிகிறது மனதுள் பிற கேள்விகளின்றி.. அப்பா … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மாக்கள் இறவாத வானமெங்கே.. (?)

வயதாக வயதாக வருகிறதந்த பயம் என்னம்மா பற்றியந்த பயம்; மரணத்தைக் கண்டு முதலில் அஞ்சவைப்பவள் அவள் தான் என் அம்மா மட்டும் தான்; அம்மாக்கள் இறக்கையில் நண்பர்கள் அழுகையில் அம்மாவைதான் முதலில் நினைத்தழுகிறேன் நான்; இரவில் நனைந்த என் தலையணை எனதம்மாவின் நினைவைத் தான் நிறையச் சுமந்திருக்கிறது; நிலாச்சோறு நாட்களின் இனிமையைப் போலவே அம்மா இல்லாத … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-10-உதவி)

உதவி என்பது கடவுள் தன்மையைக் கொண்டது. உதவுபவர் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார். கடவுள் என்பவர் ஆபத்தில் உதவவே அழைக்கப்பட்டவராக இருக்கலாம். அல்லது உதவியதன் நன்றியாகவே அவரை கையெடுத்து வணங்கப் பழகியிருக்கலாம். உயிருற்று இருக்க ‘உதவும்’ நிலம் நீர் காற்று வானத்திற்கே கடவுளுக்கு நிகரான இறைவணக்கங்கள் செய்யப் பழக்கப்பட்டது. உதவி இல்லையேல் மனிதரின் வாழ்க்கையில் சமதர்ம செழுமையிராதுப் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-9)

9) காதல் அப்படியொரு இனிப்பு. கசப்பை சகிக்கும் இனிப்பு. நினைவை தொலைக்கமுடியாமல் நினைத்து நினைத்து சாகத் துடிக்கும் இதயத்தை உணர்வுகளால் அடைத்துக்கொள்ளும் இனிப்பு. விஷம் கக்கும், ஞானம் தரும், நாகரிகம் வளர்க்கும், மனிதமூறச் செய்யும், மானுடப் பிறப்பை இன்பக் கடலில் மூழ்கடித்து சாகச் சாக உயிர்களைப் பிறப்பிக்கும் காதல். ஆனால் காதல் ஒரு பொருளில்லை. கடையில் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக