Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

45 பழுத்த இலையின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர்!

மௌனம் உடையா பொழுதொன்று நிலவும் முகமெல்லாம் ஒரு சோகம் படரும் நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும் அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்; உடை கூட ஆசை களையும் உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும் உறக்கமது உச்சி வானம் தேடும் உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்; பகலெல்லாம் பொழுது கணக்கும் சட்டைப்பை சில்லறைத் … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

44 அணையா உயிர்விளக்கை ஒளிர்க்கும் மனித(ம்) பலம்!!

திறக்காத கதவின் மனத் தோன்றல்களாகவே சப்தமிழந்துக் கிடக்கின்றன நம் முயற்சியும் லட்சியங்களும் நம்பிக்கையும்.. வீழும் மனிதர்களின் ஏழ்மை குறித்தோ அவர்களின் பசி பற்றியோ பிறர் நலமெண்ணி வாழாமையோ மட்டுமே வீழ்த்துகிறது – நம் சமூகம் தழைக்கச் செய்யும் மனிதத்தை; தெருவில் கிடப்பவர் யாரென்றாலும் விடுத்து அவர் மனிதர் என்பதை மட்டுமேனும் கருத்தில் கொண்டு அக்கறை வளர்த்தல் … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வார்த்தை சில்லுகள்..

1 மிருகம் மனிதனைக் கொன்றது’ கொலை மனிதன் மிருகத்தைக் கொன்றால்; கடை! 2 மரங்களை வெட்டி கூடுகள் கலைத்து கட்டப்பட்டது ஒரேயொரு குடிசை! 3 பிணங்களென எரித்துவிட்டார்கள் இத்தனை லட்சமென்று சொன்னார்கள் என்னைச் சேர்க்காமல்! 4 காற்று நிறைய இருக்கிறது தமிழர் வலியும், துரோகமும், அநீதியும் சுவாசிப்பவர்களுக்கு வலிக்கவேயில்லை.. 5 ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டுதேர்ந்தெடுத்தோம் லஞ்சம் வாங்கும் … Continue reading →

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒற்றுமையில்லாமையின் குற்ற சாட்சி; செங்கொடி!

1 துண்டு துண்டாய் கசிந்து எரிந்து வெடித்த ஒற்றுமை நெருப்பு உன் உடல் தீயில் வெந்து ஒரு இன வரலாற்றை திருப்பி வாசிக்கிறது! —————————————————————- 2 தற்கொலை கொலை விபத்து எதுவாயினும்’ போன உயிர் வாராதென்பதை உரக்கச் சொல்லவும் உன் உயிர் எரியும் தீக்கொழுந்து மறைமுகமாகவேனும் ஒரு இனத்தின் தேவையானது! —————————————————————- 3 காற்று வானம் … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!

உள்ளெரிந்த நெருப்பில் ஒரு துளி போர்த்தி வெந்தவளே, உனை நெருப்பாக்கி சுடப் போயி எம் மனசெல்லாம் எரிச்சியேடி.. மூணு உயிர் காக்க உடம்பெல்லாம் தீ மையிட்டுக் கொண்டவளே, தீ’மையில் உன் விதியெழுதி – எம் பொய்முகத்தை உடச்சியேடி.. விடுதலை விடுதலைன்னு வெப்பம்தெறிக்க கத்துனியா? அதை கேட்காத காதெல்லாம் இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி.. செத்தா சுடுகாடு, … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்