Category Archives: கவியரங்க தலைமையும் கவிதைகளும்

குவைத் தமிழோசையின் இன்பத் தமிழ் இசைவிழாவும்; சில விருதுகளும்..

இரவுநிலா குளிருதிர்த்து காதுமடல் திறந்து அந்த அரங்கத்தை நோக்கி அமர்ந்திருந்தது. அறைநிறைந்த தமிழதன் வெளிச்சத்தில் அடர்ந்த ஓரிருள் விலக காரிருள் சூழ்கொண்டு இடையெரியும் விளக்குகளால் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. இருட்டின் காதுகளில் கவியரங்கச் சிந்தனைகள் குடைந்துக் கொண்டிருக்க, பாட்டரங்கமும் கைதட்டும் ஓசையின் ஆர்ப்பரிப்பும் அரேபிய மண்ணின் நீண்ட பாலைவனத்தில் இன்னும் நெடுநாட்களுக்கு அழியாதவண்ணந்தனில் ஒட்டிக்கொண்டுவிட்டதை அந்த அரங்கமும், … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

தென்றல் வீசும் தெருவொன்றில் ஞானத் தீயாய் எரிந்தவன்.. (கவியரங்கக் கவிதை)

தமிழ் வணக்கம் அ ஆ’ வில் உயிரூட்டி அமுது தமிழை உரமாக்கி இலக்கிய இலக்கணத் தெருவெங்கும் வாழ்தலின் ரசங்கூட்டி அடிக்கு அடி மொழியாலே உலகப் பண்பு வளர்த்த தமிழ்மண்ணே; மனித மாண்பூறிய உன்தாய்மடியில் எனை தமிழனாய்ப் பெற்றெடுக்க வரம் தந்த மொழியே; தமிழே என் முதல் வணக்கம்!! ——————————————————————— அவை வணக்கம் பசிக்கு தமிழ்தந்து படிக்க … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சந்தவசந்தத்தின் படமொழிக் கவியரங்கக் கவிதை..

உயிரில் உருகி உருகி ஒருதுளி விழ விழும் துளி சேர்த்து சேர்த்து வான விரிப்பு கிடத்தி அதில் தமிழ் என்று எழுத தவம் தந்த மொழியே, தமிழே வணக்கம்! புல் முளைத்தால் நெல்லாக்கி நெல் பொருக்கி நெல்பொருக்கி பானைகுவித்து பானைபொங்க பொங்கலிட்டு சர்க்கரையாய் இனிக்க கவிவார்க்கும் நெற்கதிர்நோக்கி இந்த இளம்புல்லின் தலைசாய்ப்பும், மதிப்பு நிறைந்த வணக்கமும்!! … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

பெரியார் நூலகத்தின் இராவண காவியமும், பாராட்டு விழாவும்…

வெறும் சவ்வுகளாலான இதயத்தை அன்பு நிரப்பி – மனசாக்கிக் கொள்வோம்! சில நீலக் கடலின் தூரத்தை சின்ன இதயமளவில் வென்று உறவென எழுத்தாலும் முழங்குவோம்; வாழ்வின் அதிசயத்தை ஆணவமும் பொறாமையுமின்றி – உனக்காய் எனக்காய் நமக்காய் நாளைய தலைமுறைக்குமாய் ஒற்றுமையில் வென்று குவிப்போம்!! கால சூத்திரத்தின் கட்டப்பட்ட சூட்சுமக் கைகளை நற்சிந்தனையின் தெளிவின் கண்களோடு கண்டு … Continue reading

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் பாராட்டு விழா!!

வாழ்வின் மௌனமான வாய்பேசா தருணத்திலும் வார்த்தைகள் உள்ளே குதியாட்டம் ஆடுவதை உணரும்  தளமாக இருந்தது – தமிழோசையின் அந்த பாராட்டு மேடை.. வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு, தாஜ்மஹாலினை மையமாகக் கொண்டு, நடத்தப்பட்ட கவியரங்கமும், உலக அறிவியல் முன்னேற்றம் குறித்தும், குவைத் பொன்விழா ஆண்டு குறித்து கருத்துப் பரிமாறலும்,  பாட்டு மன்னர்கள் கணேஷ் முருகானந்தத்தின் மெல்லிசை … Continue reading

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்