வித்யாசாகருக்கு சிறப்பு விருது – 2011

ன் எழுதுகோல் விருதிற்காக எழுதியவை அல்ல. ஆயினும் இப்படி ஒருவன் இருக்கிறேன் என்பதை தெரிந்துக் கொண்டு நம் படைப்புக்களையும் நம்பிக்கையோடு வாங்கி படிக்கமட்டும் ஒரு விருது போன்ற சம்பவம் அவசியப் பட்டிருந்தது!!!

விவரத்திற்கு இங்கே சொடுக்கி பாருங்கள்..

http://mukilpublication.blogspot.com/2011/01/2011.html

பெருத்த நன்றிகளுடன்…

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

81) அடியே; போறவளே நில்லேன்டி!!

உன் ரெட்டை பாதம் மெல்ல நடந்து என் இதயம் ஏறிப் போகுதடி – உன் விரலில் வீழும் மனதை படிக்க கண்கள்; கடிதம் நூறு தேடுதடி! உன் குறுக்கே சிவந்த இடுப்பை கிள்ள ஒற்றை தாலி வேணுமடி – உன் உதட்டில் ஈரக் கவிதை பதிக்க வலது காலில் வாசல் மிறி! இடது காலும் இழுக்கா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

80) அவள் கொடுத்த தேநீரில்; முத்தமும்! முத்தமும்!!

1
நீ
கொடுக்கும் தேநீரில்
எனக்காக சர்க்கரை சேர்ப்பியா
அல்லது இரண்டு
முத்தத்தை இடுவாயா?

சர்க்கரை கடந்த ஒரு இனிப்பு
தேனிரிலும் –
எனக்குள்ளும்!!
—————————————————————————

2
வா
ழ்வின் நகர்வுகளை
எனக்காக சுமப்பவள் நீ
என்று புரிகையில் –

உன் மீதான அன்பே
வாழ்வின் அற்புதம் என்றெண்ணினேன்!!
—————————————————————————

3
கா
லத்திற்குமான
ஒரு சக்கரத்தில் –
நிறைய முகங்கள் வந்து போகின்றன;

நீ மட்டுமே –
உலகமானாய்; உயிர்வரை நிரைந்தாய்!!
—————————————————————————

4
ன்னை விட எத்தனையோ பேர்
எனக்கு அழகாக –
தெரிந்திருக்கிறார்கள்;

ஆனால் –
உன் அழகில்; நீ மட்டுமே இருந்தாய்,

இதயத்தையும் –
நீ மட்டுமே எடுத்துக் கொண்டாய்!
—————————————————————————

5
னக்கான கனவுகள்
ஒவ்வொன்றாய் விரிகின்றன;

ஒவ்வொன்றிலும் – நீ
புதிது புதிதாகவே பூக்கிறாய் என்பதில்
நானும்; உனக்காக என்னை சரிசெய்துக் கொண்டதில்
எனையும் அழகென்றது உலகம்!!
—————————————————————————

6
னக்கொரு பூஜாடி போல்
சிரிப்புக்களை வாங்கித் தரத் தான்
என் வியர்வை –
வித்துக்களாய் விழுகின்றன;

அலுவலக அறை முழுதும்!
—————————————————————————

7
னக்காக –
இதயம் சுமந்தாய் என்றே
எண்ணம் எனக்கு;

இதோ, உனக்காக என்னையும் நான்
பத்திரப் படுத்திக் கொண்டேன் –

என் கண்ணாடியில் –
எனக்கு நான் தெரிவதேயில்லை!!
—————————————————————————

8
கு
ழந்தை பிறந்தால்
பாசம் குறையும் என்பார்கள்

மூன்று குழந்தை பெற்ற பின்பும்;

பாசம் அவர்கள் மேல் கூடியதை விட
அன்பும் நன்றியிலுமே –
நீயும் நிறைந்தாய்!!
————————————————————————— 

9
ன்னை எல்லோரும்
பாராட்டும் போதெல்லாம் – உன்
நினைவும் வரும் எனக்கு;

உனக்காகவும் –
ஒரு பாராட்டு விழா வைக்க ஆசை,

வா; வந்து என்
இதய மேடையில்; ஏறி நில்
உனக்கான மாலைகள்
எனக்கான வரங்களாய் விழட்டும்!!
—————————————————————————

10
ட்டி வழித்து சோறு போட்ட
நாட்களும் உண்டு – 

சட்டி வழித்த சப்தம் கேட்டு
பாதியில் போதுமென்று எழுந்துக் கொள்வேன்;

நீயும் எனக்கு –
போதுமென்று நினைத்துக் கொள்வாய்
போதாத என் பசியை –
நீ எனக்கு மட்டும் வழித்துவைத்த அக்கறையை யெண்ணி

மனதார நிறைத்துக் கொள்வேன்!!
————————————————————————— 

வித்யாசாகர்
Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

குவைத் வாழ் தமிழர்களுக்கும் – பிற உறவுகளுக்கும் – வேண்டுகோள்!!

அன்புறவுகளுக்கு வணக்கம்,

கொட்டிக் கொடுக்கும் அளவோ அல்லது கிள்ளிக் கொடுக்குமளவோ பணம் இல்லையேல் பரவாயில்லை, மானம் மறைக்கும் அளவிற்கு மாற்றுத் துணிக்கு ஆடை கொடுத்து உதவுங்கள் என்று எங்கோ தவிக்கும் நம் உறவுகளின் பிள்ளைகளுக்காய் கெஞ்சி நிற்கிறோம்..

அதிலும் மழையினால் பாதிக்கப் பட்டு முறையான இருப்பிட வசதி கூட இன்றி அதிக குழந்தைகளே பாதிக்கப் பட்டுள்ள நிலையில் அடர்த்தி நிறைந்த ஆடைகள் இருப்பின் மேலும் உதவிகரமானது.

அனுப்ப எண்ணுவோர் தொடர்பு கொள்ள விரும்புவோர் உதவி வேண்டின்; கீழுள்ளவாறு ‘தங்களுக்கு அருகாமையில் உள்ள பொங்குதமிழ் அமைப்பினரை அணுகலாம். மேலும் செய்திசார் புள்ளியியல் ரீதியான விவரங்களும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி குவித்த கையினனாய்..

வித்யாசாகர்

ஈழத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு உதவி.. அவசரம்..

ஆஸ்திரேலியாவில் அடித்த கனமழை..அப்படியே இலங்கையிலும் கால் பதிக்க வெள்ளம் வெள்ளம்…. எங்கும் வெள்ளம்…வீடு இழந்த எம்மக்களை இந்த மழை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது…

14 மாவட்டங்கள்……
10லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்க பட்டு இருக்கின்றார்கள்.
38 பேருக்கு மேல் மழை வெள்ளத்தில் இறந்து போய் இருக்கின்றார்கள்..

40க்கு மேற்ப்பட்டவர்கள் காயமடைந்து இருக்கின்றார்கள்..
12க்கு மேற்ப்பட்டவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.

இந்த மழை வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் உறவுகளின் குழந்தைகள்.. மாற்றுதுணிக்கு கூட வழியில்லாமல் தவிக்கின்றனர்…

காசு பணம் கூட தேவையில்லை. குழந்தைகளுக்கான மாற்றுத்துணிகள் உங்களிடத்தில் இருந்தால் கொடுத்து உதவவேண்டுகிறோம். சுவெட்டர் போன்ற குளிர்கால உடைகள், போர்வைகள் இருந்தாலும் கொடுத்து உதவலாம்.

தொடர்புகொள்ள / உதவிட அழையுங்கள்:

மினா அப்துல்லா – பிரபாகரன் – 97896908
பாகில் – செந்தில், பெஸ்ட் லைன் கார்கோ – 67065006
மங்காப் – தமிழ்நாடன் 66852906
                   – உதயம் உணவகம்
அபுகலிபா – இராமன்(பொன்னி) 97522453 / 99015013
மெகபூலா – முத்துக்குமார் – 99014512
சால்மியா – அன்பரசன் 97480871, மகேந்திரன் சேது 90974710
குவைத் சிட்டி – பிரியா மியுசிகல் மதி -99816937
                                – பாலிவுட் உணவகம்
அபாசியா – இக்பால் 97861531

சுற்றிலும் வெள்ளம்..உயிர் பிடித்து இருப்பதே பெரிய விஷயம்… குழந்தைகளுக்கு உடை இல்லை..
மேலும் மழை வெள்ளத்தின் தீவிரம் பற்றி அறிய…

http://tamilwin.org/view.php?22GpXbc3BI34ei29302jQ6dd3Qjb20N922e4ILBcb3pGu2

http://www.bbc.co.uk/news/world-south-asia-12198143

http://asafardeen.blogspot.com/2011/01/blog-post_2274.html

http://www.nerudal.com/nerudal.24514.html

பொங்குதமிழ் மன்றம் – குவைத்
http://www.pongutamil.org
thamizh@pongutamil.org
+965 66852906

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

70) தெருமுனையில்; நின்று பார் போதும்!!

1
நீ
அந்த தெரு வழியே
போனாயென்று எல்லோருக்கும் தெரியும்;
எனை பார்த்தாய் என்று
எனக்கு மட்டும் தானே தெரியும்..

சிலசமயம் நின்று
கடையில் ஏதேனும் வாங்குவாய்
அது எல்லோருக்கும்தெரியும்;
எதற்காக நிற்கிறாய், வாங்கினாய் என்று
எனக்கு மட்டும் தானே தெரியும்..

தெருமுனை திரும்பி எனை பார்த்ததும்
அடிக்கடி மணி பார்ப்பாய் –
வெறுமனே அலைபேசியை காதில் வைத்து
வீணே யாரையேனும் அழைத்துப் பேசுவாய்
அவசரமோ; நேரமாகி விட்டதோ போல்
எல்லோரும் நினைப்பார்கள்;

ஆனால் நீ அடிக்கடி பார்க்கும் மணியிலும்
அவசியமில்லாமல் அழைத்த அழைப்பிலும் தான்
எனக்கான காதலை –
அவ்வளவு வைத்திருக்கிறாய் என்று
எனக்கு மட்டுமே தெரியும்!!
—————————————————————————-

2
தெப்படியோ
நான் விரைவாக வந்தால் நீயும் விரைவாக வருகிறாய்
தாமதமாக வந்தால் –
நீயும் தாமதாமாக வருகிறாய் –

மனதிற்கு மட்டுமே
நம்மை – சரியாக தெரிகிறது போல்!!!
—————————————————————————-

3
நீ
அருகில் வருகிறாய்
உன் கால கொலுசு சப்தம் என் மீதேறி
காதுகளில் புகுந்து –
உடம்பெல்லாம் பதிவாகி வெளி சென்று
கடக்கிறது என்னை உன்னோடு!

அந்த கொலுசின் சப்தத்தில்
உன் பதட்டமும் நீயும்
புரியவில்லை –
இப்போது அமர்ந்து உன்னையும்
உன் கொலுசையும்
நீ என்னை நெருங்கி ஒதுங்கி அவசரமாய் கடந்ததையும்
எண்ணிப் பார்க்கையில் புரிந்தது –

நீ என்னை நிமிர்ந்து பார்க்காவிட்டாலும்
நாளைக்கு என்னருகே வந்து உடலெல்லாம் புகுந்து
விலகி
ஓடி
தெருமுனையில் நின்று
திரும்பிப் பார்க்காவிட்டாலும்
மனதில் நினைத்திருப்பாய் என்று!!
—————————————————————————-

4
னக்கொன்றும் நான்
அத்தனை பெரிய –
அவசியம் இல்லை தான்;

போ..
நீ பெசாவிட்டாலென்ன,
பார்க்கா விட்டால் தான் என்ன?!!!!!!

எனக்கு நீ –
வாழுமளவு வேண்டும்;

இல்லையேல் –
உயிர் பிரியுமளவேனும்!!!
—————————————————————————-

5
ன் வெளுத்த தோலோ
கருப்பு விழியோ
புது வண்ண ஆடையோ
மயக்கும் அழகோ
உன் ஆர்பாட்டமோ
உன்னிடத்தில் காமமோ
காதலோ – ஒன்றும் வேண்டாம்

தினமும் இந்த வழியில் வந்து பொ; போதும்!!
—————————————————————————-
வித்யாசாகர்

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்