கவிஞர் மன்னார் அமுதனின் “அக்குரோனி” க்கு வாழ்த்து!!

 

ஈழத்துப் பா'வீரன் கவிஞர் மன்னார் அமுதன்

ன்றோ எவனோ வீசிய
எச்சில் இலைகளைத்
தின்று உயிர்க்கும் – பிச்சைக்காரி

“பாவம்,
தின்னட்டும்”

குரல் கொடுக்கும்
கனவான்கள்

உண்டு வைத்ததை தின்று
மீந்ததை ஈந்து –
சில நாய்களோடு
சொந்தம் சேர்வாள்

நன்றிப் பெருக்கால்
நாய்களும் அவள் பின்செல்லும்
இருளைப் போர்த்தியவள்
உறங்கும் இரவுகளில் –
நாய்கள் துணை தேடித்
தெருவிற்குள்  செல்லும்

குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிழிந்த உடைகளுள்

எதையோ தின்று கொண்டிருப்பான்
இலை வீசியவனும்,
குரல் கொடுத்தவனும்!!

ரு பானை சோற்றிற்கு ஒரு பானை சோறு பதம் என்பார்கள். அதற்கு தகுந்தாற்போல் சமூகப் பற்றும், மொழிப் பற்றும், இனப் பற்றும், உறவுகளின் பரிவும் ஒருங்கே நிறைந்த கவிஞர் மன்னார் அமுதனின் வர இருக்கும் ‘அக்குரோனி’ எனும் கவிதைத் தொகுப்பின் ஒரு ஒற்றைக் கவிதை தான் இது.

அமிழ்தங்கள் கொஞ்சமே தரப்படுகின்றன
வாழ்வின் ரசனைகளும்
வெள்ளை சிரிப்பும்
விழா நாட்களும்
உண்மை அன்பும்
ஓட்டத்திற்கும் உழைப்பிற்கும் கிடைக்கும் அங்கீகாரமும்
கலைஞனின் கவிஞனின் வெற்றியும் போல் –
இவரின் இக் கவிதையினை படிக்கையில், இங்கே பகிர்கையில்
எண்ணிக் கொண்டேன் –
அமிழ்தங்கள் கொஞ்சமே கொடுக்கப் படுகின்றன!

உண்மையில், ஒரு சக மனிதனுக்கு இந்த கவிதைக்கான கோபம் வந்துவிடுமெனில்; அந்த இலை வீசுபவனும், குரல் கொடுப்பவனும் – பின்னாளிலாவது; இல்லாமல் போவான்.

அதிலும், கவிதைகள் தான் அர்த்தத்திலும், சமூக அக்கரையிலும் மின்னுகிறதெனில்; புத்தகத்தின் வடிவமைப்பு கூட ‘பார்க்கையில் கண்களை கொள்ளை கொண்டு போவதோடு நில்லாமல்; கவிதைக்கான அர்த்தத்திற்கும் சாட்சியாகி நிற்கிறது.

ஒரு புத்தகம் பிரசுரிப்பதென்பது ஒரு மலர் மலர்வதற்கு சமம். அந்த மலர் மலர்வதற்கு நட்பு, உழைப்பு, அறிவு, சிந்தனை, மொழி ஆளுமை அல்லது மொழியுணர்வு, முயற்சி, நம்பிக்கை, பணம் என நிறைய இதழ்கள் தேவை படுகின்றன. அத்தனையும் கிடைக்கப் பெற்று –

எழில்மிகு படைப்பாகவும், அருமை சொல்வளம் கையாளப் பட்டும்,  இலக்கிய சாரம் நிறைந்தும், சமுகச் சீர்முறை சார்ந்த, பல பயன் நிறைந்த படைப்புக்களின் தொகுப்பு இந்த ‘அக்குரோனி’ என்பதை சொல்லி, தமிழுலகின் தரமான இடத்தை, அங்கீகாரத்தை அடையட்டும் கவிஞர் மன்னார் அமுதன் என்று வாழ்த்தியும் பாராட்டியும் இச் சிறு பா’மாலையால் போற்றுகிறேன்!

ளிமை முகம் கொண்டு உலகை ஆளும் கவி
நடையில் ரசனை கூட்டி சமுகம் திருத்தும் கவி
தமிழின் காதல் கோடி வார்த்தையில் வார்த்த கவி
தரணி புகழை தள்ளி; தரணி வாழ எழுதும் கவி!

அன்பு பண்பு அடக்கம் எல்லாம் உள்ள கவி
ஆணி அடித்தாற் போல் வரியை செதுக்கும் கவி
நல்லதை சொல்லி சொல்லி நாளும் எழுதும் கவி
உள்ளத்து உணர்வுகளுக்கு எழுத்தில்; ஆபரனமிட்ட கவி!

பல பெருமை மிகுந்த கவி; புலமை நிறைந்த கவி;
மண்ணின் மணக்கும் கவி; மன்னார் அமுதனின்
‘அக்குரோனி’ எனும் இப்படைப்பு தமிழுலகின் தரமான
அங்கிகாரம் பெற உளமாற வாழ்த்துகிறேன்!!
——————————————————————————————–
வித்யாசாகர்

Posted in அணிந்துரை, வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தைப் பொங்கலுக்கு குவைத்தில் தலைவாழை இலையும், புத்தாண்டும்!!

தமிழ் புத்தாண்டு துவக்கத்தை முன்னிட்டு ஐயா திரு. செந்தமிழரசு நாட்காட்டியினை வெளியிட திரு. எஸ்.எம்.ஹாரிப் மரைக்கார் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்!

கவிதாயினி திருமதி. ராதிகா செல்வம் தொகுப்புரை வழங்க வழக்கறிஞர் திருமதி. பொன்னி ராமன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்!

வெள்ளமென திரளாவிட்டாலும், வெல்லமென திரண்ட கூட்டம்!!

போ(க்)கியும் பொங்கலும் அதன் சிறப்புக்களும் எனும் தலைப்பில் நாம் கவிதை படிக்கையில்..

என்னவளும், மகள் வித்யா பொற்குழலியும், நானும், மகன் முகில் வண்ணனும், ஐயா திரு.செந்தமிழரசுவும், பின்னால் தலைவர் திரு. K. ஜெயபாலன் அவர்களும்.

பொங்கல் கொண்டாட்டமும், புத்தாண்டு பூரிப்புமாய் தலை வாழை இலையில் உணவு பரிமாறி, கவிதை அரங்கேறி, சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டு வந்து நிறைந்தவர்களின் மனமெல்லாம் இனிக்க இனிக்க நடந்தேறியது முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றத்தின் கலாச்சார விழா!!

தலைவர் திரு. K.ஜெயபாலன் தலைமையில் விழா சிறப்புற நடந்தேற, சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் செய்தி வாசிப்பாளரும் மற்றும் தீரா தமிழ் பற்றும் இனப் பற்றும் கொண்ட ஐயா திரு செந்தமிழ் அரசு அவர்களும், அன்பின் நட்பின் சிறப்பாளர் மேடை பேச்சாளர் திரு. ராஜசேகரன்அவர்களும், வீரிய பேச்சுக்கு தன்னை சொந்தமாக்கி வரும் ஐயா திரு ஈ.எம். ஹனிபாஅவர்களும், தமிழனுக்கு உதவி எனில் தானாக வந்துதவும் பொறியாளர் திரு.சேகர்அவர்களும், எங்கெல்லாம் தமிழர் தலை உயர வேண்டுமோ அங்கெல்லாம் தன் பங்கையும் ஆற்றத் துடிக்கும் பொறியாளர் திரு. ராமன் அவர்களும் கலந்து சிறப்பிக்க, கவிதாயினி திருமதி ராதிகா செல்வம் அவர்களால் விழா சிறப்பாக தொகுத்து வழங்கப்பட்டது.

விழாவின் மிக சிறப்பாக எந்த வித மன்றத்து பாகுபாடுகளுமின்றி உதவும் கைகள் அமைப்பு, குவைத் பொங்குதமிழ் மன்றம், தாய்மண் கலை இலக்கிய பேரவை, குவைத் காயிதேமில்லத் பேரவை என எல்லோரும் பங்குற்று தமிழரின் திருநாளில் தன் ஒற்றுமையினை பறைசாற்றி பொங்கல் குறித்த, பொங்கல் மற்றும் புத்தாண்டு குறித்த சிறப்புரை ஆற்றி சிறப்பித்தனர்.

குறிப்பாக ஐயா திரு. ஈ.எம். ஹனிபா பேசுகையில் வாழ்வில் அனேக வருத்தங்கள் சூழ்நிலை மாற்றங்கள் நேர்ந்தாலும் அதற்கெல்லாம் தளர்ந்து போகாமல் திடமான மனநிலை கொள்ள வேண்டும் என்றும், அதற்கு குறைந்த பட்சம் வருத்தங்களுக்கூடேயும் சிரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி பிறர் சிரிக்க தான் வாழ்வதெனில் முதலில் தான் சிரிக்க வேண்டுமெனும் கருத்தினை முத்தாய்ப்பாக சொல்லி அமர்ந்தார்.

அமைப்பினர் சார்ந்தும், கவிஞர்கள் சார்ந்தும் கவிதையும் நற்சிந்தனைகளின் களமுமாய் அரங்கம் தமிழ் வாசனையில் மணத்ததோடன்றி சர்க்கரை பொங்கலும் தலைவாழையிலை உணவுமாய் வயிறார மாந்தார விழா மகிழ்வுடன் நிறைவுற்றது.

விழாவின் மொத்த வெற்றிக்கும் காரணமாக, பின்னால் நின்று அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடக்கும்வண்னம் கவனித்து, ஒழுங்குப் படுத்தியமை பொருளாளர் திரு.நாராயணசாமி திருச் செல்வம் மற்றும் இணை தலைவர் திரு K.நடராஜ் அவர்களையும் கூட சாரும்.

இவர்களுக்கு மத்தியில் அரங்கம் நிறைந்த காதடைக்கா சப்தமாக ஒலி அமைப்பினை ஏற்பாடு செய்திருந்த திரு. ஏசுரத்தினம் முதல் அனைவருக்கும் நன்றி அறிவித்தவண்ணம், விழா இன்னொரு பொங்கலினை எதிர்பார்த்து நிறைவு கொண்டது.

ஆகா, தமிழன் கூடும் இடமெல்லாம் தன்னை தமிழனாய் அடையாளப் படுத்தத் தவங்கிவிட்டான் என்பதற்கும், உலகின் எந்த மூளையில் இருப்பினும் தமிழர் தமிழராகவே தன் கலாச்சாரம் மாறாமல் வாழ்வார் என்பதற்கும் இக் குவைத் பாலை மண்ணும் அடையாளமாகி வருவதில் பெருமை கொள்கிறோம்!!

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நேரத்தை தின்ற நாள்காட்டியும், ராகுகாலமும் (சிறுகதை) மாதிரி!

Rani-Sirukadhai-Dec-2014001

த்தை  அவசரம் அவசரமாக
வெளியே செல்லப் புறப்பட்டாள்

நான் அவள் பணப் பையெல்லாம்
கொண்டு வந்து கொடுத்துவிட்டு நிற்க

அத்தை தயங்கினாள்.

என்ன அத்தை என்றேன்,
“திங்கள் கிழமையில்ல இன்னைக்கு” என்றாள்

அதனாலென்ன அத்தை, உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும்
நீங்க போயிட்டு வாங்க என்றேன்.

“இல்லடி, மணி ஒன்பதுக்கு முன்னாடி இருக்கே
இப்போ ராகுகாலம்ல?”

“ராவுகாலமா இன்னைக்கெங்க, அதலாம் நேத்து தான்
இன்னைக்கு செவ்வாய் கிழமை அத்தை”

“செவ்வாயா!!!!!!!? ஐயோ காலையில கோவிலுக்கு போகலையே குமுதா?”

“அதலாம் சாந்திரம் போய்க்கலாம் அத்தை
உங்களுக்கு நேரமாச்சி புறப்படுங்க” என்றேன்.

அவள், சற்று தயங்கிவிட்டு

“சரி சரி, போகுமிடம் எப்படி இருக்குமோ என்று
புலம்பிக்  கொண்டே குளியலறைக்குள் போக –

என் கையிலிருந்த –
அவள் வாடிக்கையாக தேநீர் அருந்தும்
பழைய கண்ணாடிக் குவளை  ஒன்று தவறி கீழே விழுந்து
சுக்குநூறாக உடைந்தது.

க்லீங்……….. எனும் சப்தம்
குளியலறைக்குள் கேட்டு விட்டது போல் அத்தை அவசர அவசரமாக
காலில் நீர் ஊற்றிக் கொண்டு வெளியே
வருவதற்குள் –
நான் மொத்த கண்ணாடி சில்லுகளையும் சட்டென பொருக்கி
மறைத்துவிட –

அத்தை கதவு திறக்கும் முன்பாகவே
“என்னாடி…… என்ன கண்ணாடியா ஒடைஞ்சிது,
ஐயோ நல்ல காரியத்துக்கு போறேனே” என்று புலம்பிக் கொண்டே
வெளியே வர –

“அட நீ வேற அத்தை; அது டிவில கதை போவுது, அதோட  சத்தம், நீ போ
உனக்கு நேரம் ஆச்சி பாரு –
நல்லகாலம் முடிஞ்சிடும்” என்று சொல்ல

அவள் ‘அப்படியா – நான்
பயந்தே போனேண்டி’ என்றொரு ராகத்தை
இழுத்து விட்டுப் போனாள்.

பின், ஐந்தாறு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வருகையில் வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டு வந்தாள்.

என்ன அத்தை என்றேன்

அவள் “நல்ல சகுனம்டி போனது
நான் நினைத்ததை விட –
இரண்டு மடங்கு விலைக்குப் போச்சு”

அப்படியா!!!!!! இரு என்று சொல்லிவிட்டு
சிரித்துக் கொண்டே உள்ளே போனேன்,
அத்தைக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன்

“ஏன்டி குமுதா.., இன்னைக்கு திங்கள் கிழமையாமே,
பிள்ளைங்க எல்லாம் பள்ளிக்குடம் போச்சே” என்றாள்

அப்படியா அத்தை………….” என்று நான்
ஒன்றும் தெரியாதவள் போல் அங்கிருந்து நகர,

“ஆமாம், எண்ணத்த சகுனம், பெரிய சகுனம்; மண்ணாங்கட்டி சகுனம்
எது நடக்கனுமோ; அதுதான் நடக்குது,
இப்பல்லாம் எனக்கு நம்பிக்கையே போச்சு குமுதா”

என்று சொல்லிக் கொண்டே தேநீர் கேட்டாள் அத்தை

எனக்கு ஆச்சர்யம் ஒரு புறம், இப்பொழுது அந்த பழைய
கண்ணாடி குவளைக்கு என்ன செய்வது என்று
குழப்பம் ஒரு புறமிருக்க –

அதை வெளிக் காட்டிக் கொள்ளாதவளைப் போல
உள்ளே போனேன்,
தேநிரிட்டு  வேறு புதிய குவளை ஒன்றில் ஊற்றி
அவளிடம் கொண்டுபோய் மிக இயல்பாக இருப்பது போல் கொடுத்தேன்

அவள் அந்த புதிய குவளையை பார்த்தாள்
எங்கு தூக்கி அடித்துவிட்டு, போ, போய் அதில்; பழைய குவளையில் கொண்டு வா
என்பாளோ என்றொரு படபடப்பு எனக்கு.
ஆனால், இன்று அவள் அந்த பழைய கண்ணாடி குவளையை
என்னானதென்று கூட கேட்கவில்லை,
நானும் அது காலையில் தானே உடைந்ததென்று சொல்லவுமில்லை.

கொடுத்த தேனீரை குடித்துவிட்டு சுவற்றில் சாய்ந்தவாறு அமர்ந்துக் கொண்டாள் அத்தை.

நான், உள்ளே சென்று அவள் தேனிர் குடித்த அந்த புதிய குவளையை கழுவி வைத்துவிட்டு, மறைத்து வைத்திருந்த அந்த உடைந்த கண்ணாடி சில்லுகளை எடுத்துப் பார்த்தேன். அதில், அவளின் மூடதனமும் கொஞ்சம், உடைந்து விழப் பட்டிருந்தது.

வாரிக் கொண்டுபோய் அவைகளை தெருவில் இருந்த
குப்பை தொட்டியை நோக்கி கைவீசி எறிந்தேன்.

எறிந்துவிட்டு திரும்பினால், அத்தை வாசலில் நின்றிருந்தாள். திடுக்கிட்டுப் போனேன். அவள், வாசலிலிருந்து ஒருபடி வெளியே வந்து,
லேசாக எனைப் பார்த்து புன்னகைத்தவாறு –
இந்தா இதையும் சேர்த்து எறிந்துவிடு என்று சொல்லி
ராகுகாலம் குறிக்கப் பட்ட அந்த நாள்காட்டியையும் கொடுத்தாள்.

காலம் கண்மூடிக் கொண்டே இருப்பதில்லை. ஒருநாள் எல்லோரின் அறிவையும் சேர்த்துகொண்டு காலமும் கண்விழித்துக் கொள்ளதான் போகிறது –

அன்று, ஏதேதோ சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றி
மன உளைச்சலுற வைத்து வாழ்வின் வெற்றிக்கான நேரங்களையும்
வாய்ப்புகளையும் வீணே தொலைத்துக் கொண்டிருந்தமையின் வருத்தம்குறித்தும் நாளைய நாள்காட்டிகளின் பின்பக்கத்தில் எழுதப் படலாம்!!
—————————————————————————————
வித்யாசாகர்

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

40) ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!!

 

தியாகி முத்துக் குமார்

னக்கொன்றும் தெரியாதென தலைதிரும்பி இருந்த
ஒட்டுமொத்த தமிழகத்தையும் – ஈழத்து இழப்பின் பக்கம் திருப்பி
என் உறவுகள் மடிந்து கொண்டிருந்த பேரழிவை உணர்த்த
தன் உயிரையும் துச்சமென ஈந்த தியாகி  சகோதரர் திரு. முத்துகுமார் அவர்களை நினைவு கொள்வதில் – பெருமை கொள்வதோடு அல்லாமல் –
அவருடைய இனத்தின் மீதான இந்த அக்கறை, மொழியின் மீதான பற்று
சமுகத்தின் மீதான பொதுநல உணர்வை நாமும் நமக்குள்ளும் நிறைத்துக் கொள்வோம்! 

என் கவிதையை படிக்கும் முன்பு தங்கள் அனைவரிடமும்
ஒரு மன்னிப்பினை கோரிக் கொள்கிறேன்..

வன்மம் உள்ள வார்த்தைகளை இதுபோன்ற கவிதைகளில் கையாளும் நிமித்தம் உள்ளது.

பொதுவாக, நாய் என்றெல்லாம் எழுத நானே விரும்புவதில்லை –
அதிலும் குறிப்பாக நாயிற்கு ஒப்பீடாக மனிதனை எண்ணுவதேயில்லை,
என்றாலும் – என் மீனவ உறவுகள் இரக்கமின்றி கொன்று வீழ்த்தப்பட
கதறி அழுத அந்த தாயின், மனைவியின், சகோதரிகளின் கண்ணீரை கண்டு துடிக்கையில் வந்து வீழ்ந்த வார்த்தைகளிது –

தலைப்பு : ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!

போன பாதி உசுர காக்க
கடலை பார்த்து போன எங்க –
மீதி உயிரை தின்ன நாயி –
தெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான் திரியுது!!

பாவம் மேல பாவம் சேர்த்து
கடல் கடலா சுத்திவந்து
தமிழன்; தலைய பார்த்து சுட்டது
கேட்டா கடலில் – கோடு போட்டுக் காட்டுது!!

எம் சிறகொடிக்கப் பாக்குது
இனமருக்க பாக்குது –
நன்றிகெட்டோர் உறவால – எம்
கருவறுக்க துடிக்கிது!!

தமிழனென்றால் ஏத்தமா
திருப்பி யடிக்காத் – துச்சமா
மொத்த  தமிழர் எழுந்து நின்னா
சிங்களந் தான் தாங்குமா?

ஆறுகோடி தமிழனும்
நூறு  கோடி மனிதனும்
சேர்ந்து செய்த கொலையடா
மனிதமில்லா செயலுடா!

கர்ப்பினியை சுடுவதும்
மீனவனை கொள்வதும்
துயிலம் இடித்துத் தகர்த்ததும்
எவங் கொடுத்த தைரியம் ?
நாம் சும்மா இருந்த மடமைடா!

இரக்கம்  இல்லா பிறவிகள்
தமிழச்சி மானம் சிதைத்த கோழைகள்
மண்ணு மேல கொடிய நட்டு –

கடலை கூட கேட்குது தமிழனை வஞ்சகமா கொல்லுது!!

ஆடும் வரை ஆடட்டும்
அடிக்கும் வரை அடிக்கட்டும்
தமிழன் சேரும் வரை சிரிக்கட்டும்
ரத்தம் சுடும்வரை திமுறுடா;
தமிழனை உன் ஆணவத்தால் எழுப்புடா!!!

சிறகொடிச்ச பாவமும்
முலையறுத்த கோபமும்
ரத்தம் பாய விட்ட கொடுமை
அத்தனைக்கும் பதிலுடா; திருப்பியடிக்கும் வழியடா!!

ஆளுபவர் அழுவட்டும்
இருக்கை மீது உறங்கட்டும்
எழுந்து நிற்கும் இளைஞர் அணி  –
துணிந்து – மீனவனை காக்கட்டும்;  ஈழத்தை மீட்கட்டும்!!
———————————————————————————————–

வித்யாசாகர்
Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கதை, கவிதை மற்றும் கட்டுரைக்கான, ஐந்து விருதுகள் வழங்கப் பட்டது!!

ஐயா பெருங்கவி கோ வா.மு.சேதுராமன் விருது கொடுக்க; உயிர் தந்தவள் பெற்றுக் கொள்கிறாள்!!

 

அம்மாவிற்கு திருச்சி போனதும் வரவேற்பு கொடுத்து, கடைசிவரை உடன் இருந்து உதவியவர்கள் "முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கத்தின் உறவுகளான நண்பர் வெங்கடேஷ் ,சதீஷ் குமார் ,பாலாசத்யா, அம்மா மற்றும் அன்புத் தம்பி கவிஞர் தீ.தமிழினியன், அவர்கள் நம் ஐந்து விருதினை அன்பினால் சுமந்திருக்கும் காட்சி!!

விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்து மடல் தந்து கௌரவித்த முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கத்தின் மூத்த அங்கத்தினர் ஐயா திரு.லியாகத் அலி, திரு.சத்யா பாலா மற்றும் அம்மா!!

முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கத்தின் வாழ்த்து மடல்!

தமிழ்த்தோட்டம் கருத்துக் களம் அனுப்பிய வாழ்த்தட்டை!!

FFF - முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கத்தின் வாழ்த்தட்டை!

உறவுகளுக்கு வணக்கம்,

இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பே போட்டிகள் அறிவித்து, விழாவில் நூறு கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு கவிமாமணி விருதும், நூறு எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து இலக்கியச் செம்மல் விருதும், நூறு கட்டுரையாளர்களுக்கு தமிழ்மாமணி விருதும் என படைப்பாளிகளை தேர்ந்தெடுத்து இன்னும் பல சேவை சார்ந்த விருதுகளும் வழங்குவதாக அறிவித்தமை கண்டு நம் படைப்புக்களும் அனுப்பி வைக்கப் பட்டன.

அதில் கவிதைக்கு – நம் “பிரிவுக்குப் பின்”னும்
சிறுகதைக்கு – “ஓட்டை குடிசை, “தகப்பன் சாமி”யும், “என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி ரொம்ப புதுசு” என்று மூன்று கதைகளும்
கட்டுரைக்கு – “அஞ்சி காசுக்கு வக்கில்ல; ஆயிரம் பேச்சு” எனும் வாழ்வியல் கட்டுரையும் தேர்ந்தெடுக்கப் பட்டு

எழுத்தாளர்களுக்கான “இலக்கியச் செம்மல் விருது” மூன்று
கவிதைக்கான “கவிமாமணி விருது” ஒன்றும்
கட்டுரைக்கான “தமிழ்மாமணி விருது” ஒன்றும் என ஐந்து விருதுகள் கொடுக்கப் பட்டுள்ளன!!!

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , | 26 பின்னூட்டங்கள்