65) உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..

1
ன்பில் –
உயிருருகி உயிருருகி போகிறது.
இதயங்களால்;
இதயம் நிறைவதேயில்லை!!
———————————————————

2
னக்காக காத்திருக்கையில்
வீழும்
மணித்துளிகளை சேமித்தேன்
யுகம் பல அடங்கிப் போகிறது;

இன்னும் காத்துத் தான் இருக்கிறேன்

என் காத்திருப்பில் எப்படியோ
பிறந்து விடுகிறது –
உனக்கான இரக்கம்..

காலம் எனை கொள்ளும்
உனக்கான காத்திருப்பின் வேதனையில்
பிறக்கும் இரக்கமோ அல்லது
இரக்கத்தில் பிறக்கும் காதலோ
வேண்டாம் –

எனை நீ கடந்து செல்கையில்
உனை பார்க்கக் கிடைக்கும் இந்த ஒரு
தருணமேனும் போதும்;

உனை இன்று பார்துவிட்டதாய்
குறித்துக் கொண்ட இந்த நாளேனும்
போதும்;

நீ என்றேனும் எனை பார்த்து
உன் விருப்பத்தில் சிரிக்கும் நாளிற்காக
நீள்கிறதிந்த காத்திருப்பு!!
———————————————————

3
னை எதிர்பார்த்திடாத
நேரத்தில் நீ எதிரே
வருவதும் –

உனக்காக காத்திராத
தருணத்தில் நீ
எதிரே கடந்து போவதும் –

சண்டை போட்டு கடைக்குப் போனால்
அங்கே மிளகாய் பேரம் நீ
பேசி நிற்பதும் –

கோவில் சுற்றி திரும்புகையில்
சாமி சுற்றி
நீ திரும்பியதும் –

உன் வீட்டு வாசலில் நடக்க
நான்கு தெரு சுத்தி
சந்தைக்குப் நான் போனதும் –

சந்தையிக்கு நீயும் வந்து
என் எதிரே நின்று
தலையில் பூவிருந்தும்
வெறுமனே பூ வாங்கியதும் –

பள்ளிக்கு தினமும் செல்கையில்
அப்பாவின் மிதிவண்டி
ஓரத்தில் –
எனக்கான பார்வையை
நிறைய நீ மிச்சம் வைத்திருந்ததும் –

எதேச்சையாய் உடுத்திய
ஒரே நிற ஆடையிலும்
பார்த்து பார்த்து உன் கண்கள் பூரித்துக் கொண்டதும் –

எபப்டியோ வந்துவிட்ட
திரைப்படக் கொட்டகையில்
படம் பார்க்காமல் நீ தவித்த தவிப்பும்
நான் பார்த்த பார்வையும்
அந்த கொட்டகையின் சுவரெல்லாம் பதிந்த
நம் நினைவுகளும் –

நான் வராத வகுப்பறையில்
எனை தேடி தேடி குவித்த
உன் மௌனமும் –

மறுநாள் எனை கண்டதும்
ஆச்சர்யத்தில் பூரித்த
உன் புன்சிரிப்பும்

மதிய உணவு நேரத்தில்
குடிக்க நீரின்றி நீ தவிக்கையில் –
நான் ஓடிச்சென்று வாங்கிக் கொடுத்த ஒரு குவளை தண்ணீரும்
அதற்கு நீ திருப்பித் தந்த பார்வையின் நன்றியும் –

படிக்க வாங்கி பிரிக்காமல்
கொடுத்த புத்தகமும்
அவ்வப்பொழுது வாங்கிப் படிக்கும்
என் மனசும் –
அந்த மனசெல்லாம் நீயும் –

எனக்காய் எனக்காய்
நீ சிரிக்காமல் சேர்த்து வைத்திருந்த
சிரிப்புமெல்லாம் –

வாழ்வெல்லாம் எனக்குள்
பொக்கிஷமாய் நிறைந்திருக்கும்
உயிர்வரை உனையே நினைத்திருக்கும்!!
———————————————————
வித்யாசாகர்

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

போ(க்)கியும் பொங்கலும் அதன் சிறப்புக்களும்..

ரம் நெடுக வீசும் காற்றும்
காற்றெல்லாம் கலந்த மணமும்
மனமெல்லாம் நிறைந்த மகிழ்வும்
மகிழ்வில் பொங்கி நிறையும் தமிழர் பண்பும்
நன்றியும் மானுட வளர்ச்சியும்
உலகின் வேர்களில் ஊறி செழுத்திட
பொங்கட்டும் பொங்கட்டும்;
பொங்கலோ பொங்கல் பொங்கட்டும்!

என் அன்புள்ளங்களுக்கு இனிய வணக்கமும்
வாழ்த்துக்களும் நிறையட்டும்!

போ(க்)கியும் பொங்கலும் அதன் சிறப்புக்களும்..

ண்டாண்டு காலமாக ஆண்ட இனம்
தினசரி பொருள்களுக்கு கூட
“எக்ஸ்பைரி” தேதி வைத்த இனம்

பழைய படுக்கை, தேய்ந்த துடைப்பம்
ஓய்ந்துப் போன முரம், பழங்கந்தை, கிழிந்த ஆடைகளை
சுற்றுச் சூழல் கருதி ஒதுக்குப் புறத்தில் போட்டெரித்து
பழையன கழித்து; புதியன புகுத்தவும் தேதி குறித்த இனம்

அதற்கு போ(க்)கி என்று பெயர்வைத்த இனம்!!

வீடெல்லாம் சுத்தம் செய்து
வண்ணப்பூச்சி பூசி –
புத்தாடை உடுத்தி –
வெளிச்சம் தந்த சூரியனுக்கு நன்றி சொல்ல
வாசலில் – சூரியன் பார்த்து பொங்கல் வைத்து
தைப் பொங்கல் திருநாளென்று கொண்டாடிய இனம்!

சோறுபோட்ட மண்ணுக்கு கரும்பு சாய்த்து
ஏரு பூட்டி உழைத்த உழவனுக்கு புது சட்டை யுடுத்தி
காலமும் உழைக்கும் கால்நடைக்கு நன்றி சொல்ல
மாடுகளை குளுப்பாட்டி அலங்கரித்து மஞ்சுவிரட்டி
மூன்றாம் நாளை –
உழவருக்கென கொண்டாடிய இனம்!

ருப்பவர் –
இல்லாருக்கு இனாம் தந்து மகிழ்ந்து
உள்ளூர் உறவு தாண்டி வெளியூர் வரை சென்று
புதிய மனிதர்களை சந்தித்து
பழைய கனவு பற்றி பேசி –
மனிதருக்குள் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள
காணும் பொங்கலென்று –

நான்காவது நாளை கொண்டாடிய இனம்!

ன்று புது நாகரிக பொங்கலை கேஸ்-டவ்வில் வைத்து
தொலைகாட்சிக்கு முழு நேரத்தை படைத்து
சமைத்ததை மேஜையில் பரப்பி தின்றுவிட்டு
புதுபடத்தை பிளாக்கில் சீட்டு வாங்கி பார்ப்பதில்
முனைப்பு காட்டாமல் –

குழந்தைகளின் குதூகலத்தில் தெளிவான சிந்தனைகளை புகுத்தி
தமிழர் மரபு மாறாது இருக்க முயல்வோம்;
வாழ்வின் மொத்த அசைவுகளுமே நம் மொத்த உயிர்களின்
நன்மைக்கு மட்டுமென்றெண்ணி மனிதம் வளர்த்து உயர்வோம்!

ரமும் செடியுமென் ஜாதி என்று வாழ்ந்தவன் தமிழன்
தானத்திலும் வீரத்திலும் பண்பிலும் அன்பிலும் கூட
அன்றே சிறந்தவன் தமிழன் –

அவ்வழியில் வந்த தமிழரின் சிறப்பாக
நாமும் வாழ முற்படுவோம் வாழ்த்தறிவிப்போம்
பொங்கலோ பொங்கல்!!

வித்யாசாகர்
————————————————————————
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உழைத்தவருக்காய்; செங்கரும்பும், சீனிப் பொங்கலும்!!

காற்றிற்கு குறுக்கே கயிறு கட்டி
ஏறிநடந்த தூர அளவிற்கு
வந்து விழுந்த சில்லறையில் –
ஒற்றை ரூபாய்க்கு அரிசி கிடைக்கும் – சீனி கிடைக்குமா?

கலை குடும்பம், பாரம்பரியம், பரம்பரை தொழில்
என்றெல்லாம் சொல்லி – நாயனம் ஊதியவருக்கும், தபேலா அடித்தவருக்கும்
பொங்கலை தொலைகாட்சியில் பார்க்கலாம்
வீட்டில் கொண்டாட இயலுமா?

பிற வீடுகளில் பாத்திரம் தேய்த்து, துணி அலசி போட்டு
குழந்தைகள் குளிப்பாட்டி, கூரை முடிந்து, வேலி கட்டி
வந்த பணத்தில் – பழைய துணிகளை தைத்துப் போட முடியும்
புதிய துணி வாங்க முடியுமா?

பேருக்கு இலவசம் கொடுத்து
ஊருக்கு வெளியே எங்களை நிறுத்திய தேசத்தில்
பொங்கல் வரும் போகும் –
போகும் அவ்வளவே!!!

என்றாலும் –

முறுக்கேறிய உடம்பின் திமிரில் கடிக்க அல்ல
மண்மிதித்து நெல் குவித்த என் ஏழைக்குக் –
கடிக்கச் செங்கரும்பும்

கஞ்சிக் கூழ் குடித்து நெஞ்சி நிமிர நடந்த
என் தமிழர் ஜாதி பரம்பரைக்கு –
அஞ்சி வாழா மனித ஆணிவேருக்கு சீனிப் பொங்கலும்..

என உழைத்தவருக்காய் படைத்திட்ட
இம்மூன்றுப் பொங்கலின் திருநாட்களும்
அவர்களுக்குத் தித்தித்தோ இல்லையோ,

வாருங்கள் நாம் மனம் இனிக்க இனிக்க
பொங்கல் தின்று புதுத் துணியுடுத்தி – கூட ஒரு
கவிதையும் எழுதிக் கொண்டாடித் தீர்ப்போம் – அவர்களின்
வியர்வை வாசம் மறந்ததொரு பொங்கலை!!
————————————————————————————–
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இருட்டின் சப்தத்தில்; உன் சிரிப்பும்!!

நான்
வேண்டாமென்று தான் நினைத்தேன்
எனக்கே தெரியாமல்
உன் பெயர் உச்சரிக்கப் படுகிறது எனக்குள்;

என்ன செய்ய ?

இதோ இரவினை வெளுக்க முடியாத
ஒரு அவஸ்தையில் –
மொட்டைமாடி ஏறி
தெருக்கம்பத்து விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்துக் கொண்டேன்

வெளிச்சத்தின் வண்ணங்களில்
உன் நினைவுகளாக –
நிறைகிறாய் நீ..

என்ன செய்ய ?

எழுந்து இங்குமங்கும் பார்த்தேன்
வெளிச்சம் முடியும் நுனியில்
விடமனமில்லாத இருட்டின் எல்லை போல்
உள்ளே இருந்து கத்தியது உன் நினைவு

யாரோ அழைக்கிறார்களோ என்று
திரும்பிப் பார்த்தேன்..

பார்த்த திசையெலாம் –
நிலவு, மரம், இருட்டு, வெளிச்சம், மேகம் என
எல்லாமோடு நீயுமிருந்தாய்.

சரி இனி என்ன செய்ய ?

வந்து புத்தகம் எடுத்தேன்
எதையோ படித்தேன் –
உள்ளே புரிந்த வார்த்தைகளின் மத்தியில்
வாயில் எப்படியோ சிக்கிக் கொண்ட –
இடைச் சொல்போல் உன் பெயரை உச்சரிக்கலானேன்

இல்லை இல்லை –

அத்தனை மனபலம் அற்றவனா நான்
உன் பெயரை உச்சரிக்காமல்
புத்தகத்தை வாசிக்க எத்தனித்தேன்..

சற்று நேரத்தில் –
புத்தகத்தின் ஆழ சிந்தனைக்குள்
பொதிந்துக் கொண்டது மனசு

இடை இடையே லேசாக
உன் நியாபகம் வர –

எட்டி வெளியே பார்த்தேன்

இரவு தான் –
வெறும் இருட்டு தான் தெரிந்தது

இரவுப் பூச்சிகள்
உறங்காமல் கத்தும் சப்தம்
மனதை என்னவோ செய்தது

ஒரு நிழலும் உடன் தெரிய
சற்று அதிர்ந்து போனேன் –
இதய வேகம் இன்னும் கூடியவனாய் எழுந்து
தெருவை பார்த்தால் – தெருவில் நீ
நின்றிருந்தாய்; என்னைப்போல..

எனன் செய்ய?
இப்போது என்ன செய்ய ????

புத்தகத்தை மடக்கி வைத்து விட்டேன்.

ஒரு நிமிடம் இரு என்று
உனக்கு ஒரு கையை காட்டி விட்டு
உள்ளே சென்று ஒரு காகிதம் எடுத்து
இவைகளை எல்லாம் மடலாக எழுதினேன்

அவசரமாக எடுத்துக் கொண்டு வெளியே நிற்கும்
உனை நோக்கி ஓடிவந்தேன்

வெளியே –
கொட்டும் பனி போல
அடர்ந்த இருள் போல
அந்த இருளில் பிராகாசிக்கும் நிலவினை போல
அடிக்கும் சில்லென்ற காற்றினை போல
அந்த விட்டில் பூச்சி சப்தத்திற்கு நடுவே
நீயும் வலிக்கும் கால்களை மறந்து –
எனக்காக நின்றிருந்தாய்

நான் –
ஒரு புன்னகையை பூத்து விட்டு

ம்ம்.. பிடி என்று உன் கையில் அந்த மடலை
திணித்து விட்டு திரும்புகையில்

என் கை பிடித்து நிறுத்தி
நீயும் ஒரு காகிதம் திணித்தாய்
என் கைகளை இருக்க பிடித்து விட்டு
போ.. என்றாய் –

நான் உணர்ச்சியின் வேகத்தில்
திணறி –
இருட்டில் தகிக்கும் வெளிறி போன முகமாக
உள்ளே சென்று அந்த காகிதத்தை பார்த்தேன்

ஆனால் பிரித்துப் பார்க்க
எண்ணவில்லை –
நீ தந்த சந்தோசத்தை
நீ கையிருக்கி விட்ட அந்த உணர்வை
கடக்கும் நிமிடமெல்லாம் அனுபவித்தேன்

மீண்டும் மீண்டும்
அந்த மடல் பார்த்து சிரித்துக் கொண்ட
என் மனசுக்கு தெரிந்தது
உள்ளே நீ உன் இதயம் வைத்திருப்பாய் என்று!!
————————————————–
வித்யாசாகர்

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

66) அரைகுடத்தின் நீரலைகள்..

1
வெ
ற்றிடத்தையும்
வண்ணங்கள் நிறைத்துக் கொள்வதை
பார்வை அறிகிறது!
—————————————————————–

2
யா
ருக்காகவும் யாரும்
இல்லை என்பதே உண்மை;

ஆனால் எல்லோருக்காகவும்
எல்லோரும் இருக்க முயன்றதில்
இயற்கை;
மரணம் ஆனது!!
—————————————————————–

3
ங்கு சுற்றினாலும்
இதயம் கிடைக்கிறது,

அதில் சில இதயங்கள் மட்டுமே
நமக்காக இயங்குகிறது..
—————————————————————–

4
ணர்வுப் பூர்வமாய்
பிறரை கலைக்க முடிகிறது
மனதால் மட்டும்;

லைந்த கோலத்திற்கு வேண்டுமெனில்
வாழ்க்கை என்று பெயர் சொல்லும்
உலகம்!!
—————————————————————–

5
வ்வொரு கல்லாய் தூக்கி
வானத்தில் எறிந்தேன்.

எல்லாம் மீண்டும்
பூமியிலேயே விழுந்தது.

எங்கு சுற்றினாலும் –
இங்குதான் வரவேண்டுமெனும் நியதி –

மண் தான் நமக்கு முடிவென்னும் உண்மை –
வீழ்ந்த ஒவ்வொரு கல்லிலும் ஒட்டிக் கொண்டிருந்தது.

மண்ணினை கல்லிலிருந்து தட்டிவிடுகையில்
என் தலைகனத்தையும் சேர்த்து தட்டிவிட்டேன்…

இன்னும் விழ;
நிறைய மண் இருந்தது அந்த கல்லின் மேல்!!
————————————————————–

6
தே டிபன் பாக்ஸ் சோறு..
அதே காலையில எழுந்து பை மாட்டிக்கொண்டு ஓடும் ஓட்டம்..
அதே வாழ்வின் பரீட்சைக்கான பயம்..
யாரையேனும் பிரிந்து வாழும் அதே பிரிவின் வலி..
அதே யாரோவின் மரணம்..
அதே என் அழுகையும் கண்ணீரும்….

ச்ச………..
வலிக்குதே!!!!!!!!
இதுதான் வாழ்க்கையா…..????

வேறென்ன??!!!
இப்பாடியே வாழ்ந்து தீர்த்து விட்டு –
உயிர் போகும் கடைசி நேரத்தில் – நம்மால் யாரேனும்
மகிழ்ந்து வாழ்ந்திருப்பார்களேயானால் –
அதையெண்ணி – கண்மூடிக் கொள்வேன்!!!
————————————————————–

7
ரு கடலளவு
விரிந்துக் கிடக்கிறது
மனமும்.. அறிவும்.. திறனும்..

நாம் தான் இதயம்
கையளவு போலவே –
எல்லாவற்றையும் எண்ணிக் கொள்கிறோம்!!
————————————————————–

8
ரு சாபம்
ஒரு வெறி
ஒரு கோபம் கொண்டேனும் கொன்றுவிடு
உனக்குள்ளும் இருக்கும் உன்னை;

பிறருக்குள் நீயிருப்பதை
உனை கடந்து நிற்கையில் அறிவாய்

எனை கொன்ற பிறகா ?

சரி, என் எனும் சுயநலத்தை அல்லது
தான் எனும் கர்வத்தை –
கொன்றபின் என்று வைத்துக் கொள்!
————————————————————–

9
னித நாற்றங்கள்
பெருக்கெடுக்கின்றன;
சாக்கடையில் புகாமல்
மனதில் தேங்கி!!
————————————————————–

10

யிர்கொல்லி மருந்து
தினமும் இடப்படுகின்றன;

எறும்பு கரைப்பான் எலி
பூச்சுகள் கூட இறக்கின்றன.

மனித பிணங்கள் மட்டும்
உயிர்த்தே கிடக்கிறது!
————————————————————–
வித்யாசாகர்

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக