155 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

அவன் சொன்னான்
இவன் சொன்னான்
எவன் சொன்னாலும்,

அம்மா சொன்னாங்க
அப்பா சொன்னாங்க
தாத்தா சொன்னாங்க
பாட்டி சொன்னாங்க
யார் சொன்னாலும் –
சிந்திப்போம்.

தேவையானதை
அவசியமெனில் –
சரியெனில் –
ஆய்ந்து –
தன் புத்திக்கு ஏற்கும் பதில் இருக்குமெனில்
மட்டுமே – ஆமென்றும் இல்லையென்றும்
ஏற்ப்போம் மறுப்போம்;

நம் சுதந்திர சிந்தித்தலில்
மூடதனம் ஒழியட்டும் –
இறைமை யாதென மொத்த பேருக்கும்
புரியட்டும்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

154 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

எத்தனை தலைமுறை
ஒழிந்தாலும்
விடாத சனி
சனியல்ல;
சனியென்று நினைப்பது தான்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

153 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

கருப்பு கயிற்றை
கையில் கட்டினால் –
ஒரு பேயும்
ஓடுவதில்லை;
வேண்டுமெனில்
மூடப் பேய் –
இலவசமாக வந்துவிடும்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

152 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

பூசணிக்கா உடைத்து
தேங்காய் சுத்தி போட்டு
எலுமிச்சை பழம் நசுக்கி
கற்புரம் ஏத்தி
உப்புல காரி காரி துப்பி
சுத்திப் போடறதை விட சுலபம்
அதலாம் –
ஒண்ணுமேயில்லைன்னு நம்பறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

151 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

இறைவன் இருப்பதை
நம்பியவருக்கு –
நம்பிக்கை போதுமானது;

இருப்பாரோ……………..
என்றெண்ணுபவருக்கு தான்
காத்து கருப்பு
பில்லி சூனியம் காட்டேரி
மினிஸ்வரன் எதை கண்டாலும்
பயம்;

பொதுவில் இருப்பதை
காட்டிலும் –
இல்லாததில் பயப்படுவதே நம்
மூடதனத்தின் மூலதனம்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக