பிரிவுக்குப் பின் – 28

ன்று நம்
திருமண நாள் –
தினமும் இரவின்
நடுநிசியிலாவது
யாருக்கும் தெரியாமல் அழுதுவிடும்
நான் –
இன்றாவது
அழவேண்டாமென நினைக்கிறேன்;
தயவுசெய்து இன்று கனவில்
ஊருக்கு வாவென அழைத்து விடாதே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

வெளியூர் வாசிகளின் வலி (22)

தயம் கீறி எழுதும்
ரத்தம் சிந்தா வலிகளை
சுமந்து தான்
வளைகுடாவில் நகர்கிறது வாழ்க்கை;

பிறந்த மண், வீடு,
மழை, காற்று, மலர்களின் வாசமும்..

டி, காகம்,
குழந்தைகளின் பேச்சு,
நாய் குறைப்பு,
மாடு கத்தும் ஓசையும்..

சும்புல் கால் நனைக்கும்
பனியின் ஈரம்,
காலை நேர தேனீர்,
சுட சுட ருசிக்கும் சிற்றுண்டி,
வேளை வேளைக்கு உண்ணும் உணவு
அறுசுவை இனிப்பும் காரமும்…

செல்லமாய் வளர்த்த
நாய்குட்டி,
வீடு சுற்றி மீன் கொண்டு போகும்
பூனை,
வாசலில் பருக்கைகளை மேயும் கோழி,
ஜன்னலில் இருந்து கத்தும் மைனாவும்
சிட்டுக் குருவிகளும்…..

ம்மாவின் மடி
அப்பாவின் முத்தம்
அண்ணாவின் கைபிடித்த நடை
அக்காவின் அறிவுரை
தங்கையின் கொஞ்சல்
தம்பியின் பாசம்
உறவுகளின் அக்கறை
சுற்றத்தாரின் நட்பு
ஊர்கோவில் திருவிழா
விழுந்து விழுந்து காதலித்த காதலியின் நினைவும்..

ரூராய் சுற்றி
குளமெல்லாம் நீந்தி
காடு வயலெல்லாம் திரிந்து
வேலை கிடைக்காமல் அலைந்து
வீட்டில் வாங்கிய திட்டுகளும்
வெளியூர் வருகையில் அவர்கள் அழுத
அழையும்…………

அப்பப்பா!!! மறக்கவாமுடிகிறது நாம்
விட்டுவந்த நம் தேசத்தை?????

த்தனை கடிதம்
எவ்வளவு தொலைபேசி அழைப்பு
பற்றாக் குறைக்கு –
மின்னஞ்சல் செய்து
இணையத்தில் பேசி
யார் யாரிடமோ வீடு பற்றி
உறவு பற்றி
விட்டுவந்த மண்ணிலிருந்து
மலைவரை பேசி பேசி பேசி
உள்ளுக்குள் சுமக்கும் ஊரின் கனம்
வலி தான்.. வலிதான்!
——————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 27

முத்தம் கொடுக்கும் ஆசையிலேயே
வாழ்க்கை – கணக்க
முகம் பார்கவே வருடம் இரண்டு ஆகுதடி;

காமம் தலைக்கேறி அமர்ந்து
உடல் வருத்தியும் –
உள்ளம் உனக்காக உனக்காக – உனக்காகவே
நரை தின்று வாழுதடி!

குளிர்பெட்டி தின்ற மிச்ச மீதியில்
உடல் கட்டை பிழைக்குதடி –
இது வாழ்க்கை இல்லை – விதிதானே
நிமிஷம் கூட வலிக்குதடி!

ட்டில்சுகம் பெரிதில்லை – உன்னை
தொட்ட சுகம் போதுமடி;
மிச்சமீதி கடலளவு – உன்
அலைபேசி சிரிப்பில் மறக்குதடி!

ண்ணும் பொன்னும் பெரிதில்லை – உன்
மனசும் வயசும் வாழ்க்கையடி;
மகமூனு பெத்துட்டோமே – இனி
குவைத்தோ துபாயோ சாபமடி!

தெருவில் நடந்த வீரமெல்லாம் – இங்கே
செருப்படி பட்டுக் கிடக்குதடி;
அரபி அழைக்கும் “ஒமாருக்கு’ ஏழ்மை
ஆயிரம் கும்பிடு போடுதடி!

தூக்கியெறிஞ்சா ஒரு நிமிஷம் –
அரபியும் அவனப்பனும் தூசியடி;
பொண்ணுங்க படிக்கக் கட்டும் -பணம் வந்து
நடுவில் நின்னு சிரிக்குதடி!

ட்சியமும் தன்மானமும்
கடவுசீட்டில் பொதிஞ்சதடி;
செரிக்க முடியா அவமானமெல்லாம்
நெஞ்சுக் கூட்டில் நிக்குதடி!

ப்படியோ வந்துபோன
விடுமுறையில் –
நான் ஆம்பளைன்னு காட்டியாச்சேடி;
உன்னை அம்மாவாக்கி சிரிச்சதுல
மூணு பொன்னும் இப்போ –
பாரமாச்சேடி!

ண்ணு தின்னும் செத்த மனிதர்காவது
உலகம் பிணமின்னு பெயர் சொல்லும்
சொல்லட்டுமேடி;

வறுமையின் விரக்தியும்
ஏக்கமும் தின்று செரிக்க –
‘எங்களுக்கு என்ன பெயர் மிச்சடி???
—————————————–
வித்யாசாகர்

Posted in பிரிவுக்குப் பின்! | 4 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 131

சொட்டு சொட்டான
விசமாக –
தெருவிற்கு தெரு குடியும்
பெண்களின் மோகமும்
அரசியல் சாபமும்
போலிகளின் கொண்டாட்டமும்
இன்ன பிறவும்
இன்ன பிறவும்
சேர்ந்திறங்கிக் கெடுத்த நம் வாழ்வின்
வெளிச்சத்தை மீட்டுத் தர
இன்னொரு தாமஸ் ஆல்வா எடிசனை தேடும்
நீயும் நானும் –
இருந்தென்ன பயனென்று தான்
உதிர்கிறது போல்;
என் தலைமுடியில் இரண்டு!

Posted in உடைந்த கடவுள் | 8 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 130

டிக்காத புத்தகத்தை
படித்ததாகவே எழும்
மனப்போக்கு –
நீ பார்கையில் பார்த்து
கண் மூடிக்கொள்ளும் மனதிற்குள்
வெளிச்சமாய் நிறைகிறது!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்