ஹைக்கூ – 129

வானின் –
நிறைய வெற்றிடங்களை
தாண்டி
இடம் கொள்கிறது
மேகமாய்
உன் நினைவு!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 128

தையோ கிறுக்கி
எதையோ எழுதி
எதையோ உளறி
எதையோ பேசி
எதையோ செய்துதொலைத்ததில்
என் வெள்ளை சட்டை
மறைத்துத் தான் கொள்கிறது
என் அசிங்க முகத்தை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 127

வெள்ளையும்
கருப்புமாய் வாழ்ந்த
என் –
அப்பாம்மாவின் காலம்
எனக்கு வண்ணமாகவே
தெரிகிறது!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 126

செவ்வகம்
சதுரம்
முக்கோணம்
நீளம்
அகலம்
நெட்டை
குட்டை என
எல்லாம் இருக்கிறது புத்தகத்தில்
யாரோ ஒருவனின் கணித தோல்வியை
ஒன்றிரண்டு மதிப்பெண்களில்
மறைத்துக் கொண்டு!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 125

ன்ன அருமையாக
ஆங்கிலம் பேசுகிறாள்…

டமில் மட்டும்
தகராறாம்;

சிறுக்கியை –
தமிழச்சியென்று மெச்சிக்கொள்ள
ஒருவேளை –
நான் இறந்தபிறகு என் உதடுகள்
அசைந்துக் கொடுக்கலாம்
அசையாமலும் போகலாம்!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்