ஹைக்கூ – 124

தொலைபேசியில்
கத்தி கத்தி பேசினாலும்
மனதின் சப்தம்
யார் காதையுமே
தொடுவதில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 123

யித்தியம் பிடிக்காத
நாட்களை –
இப்படித் தான்
எழுத்துகள் மென்று தின்றுவிட்டு
தன்னை கவிதை என்று
அறிவித்துக் கொள்கிறது!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 122

வ்வொரு பிணமாய்
வீழும்போதும்
மனிதன் தன்னை
சாகாவரம் பெற்றதாகவே
நினைத்துக் கொள்கிறான்;

மரணம் மட்டும்
நிகழாதிருக்குமே யானால்
மனிதன் கொள்ளும்
முதல் நபர் கடவுளாகவும்
இருக்கலாம்!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 121

செரிப்பதற்கு
இனிப்பும்
ரசமும்
சோடாவும் குடிப்பவனுக்கு
பசிப்பவனை பற்றிய
சிந்தனை அற்றுப் போன
இடத்திலிருந்தே
முளைத்துக் கொள்கிறது
உலகின் அத்தனை போராட்டங்களும்!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 3

குழந்தை கையோடு புத்தகம்

நீளப் பயணங்களில்
நிறைவில்லா தனிமைகளில்
ஒரு புத்தகமோ இல்லை
ஒரு கைக்குழந்தையோ
என் கையில் தவழ்ந்தால்-எனக்கு
போதுமாயிருக்கும்;

இரண்டுமே…
சூலடைந்து கருசுமந்து
வெளிவந்த படைப்புகள்தானே…!

ரு கையில் ஏந்தி எடுக்க
இதழ் திறக்க உச்சிமுகர
ஒரு நிமிடம் தியானிக்க…அந்த
பாலின் வாடைக்கும்- பச்சைத்
தாளின் வாடைக்கும்- எனது
தாயின் நினைவு உள்ளூறித்
தளும்பிவிடுகிறது!

முகப்பிலும் முக அமைப்பிலும்
படைத்தவரின் முக…வரி
பளீரெனத் தெரிந்துவிடுகிறது.
புரிந்தும் புரியாமலும்
அறிந்தும் அறியாமலும்
புத்தகமும் குழந்தையும் -நமக்கு
புதிர்ச்சொல்லிப் போகின்றன!

குழந்தையின்…
சிறுகைப் பிடித்து – சின்ன
நடைப் பழகி பார்க்கின்றேன் -அது
இரு கை விரித்து வானில்
எம்பிவிட துடிக்கிறது; நான்
இறுக்கிப் பிடிக்காவிடில் -அது
சிறகை விரித்து ஜிவ்…வென பறந்திடலாம்,

அதன்
தளர்நடையோடு எனது
தளர்ந்தநடை தடுமாறிப்போகையிலே – எனக்கது
விரல்நீட்டி வாழ்வின்
வெளிச்சத்தை காட்டுகிறது!

அதை என் உயரத்திற்கு தூக்கியெடுத்து
கொஞ்சிப் பார்க்கின்றேன்
என் அவசர உலகமும்
அழுத்தமான அன்பும் -அதற்க்கு
அரைநொடியில் சலிக்கிறது!

அதன் உயரத்திற்கு குனிந்து
அருகமர்ந்து
அதன் உலகத்தில் புகுந்து
சரிக்கு சரியாய் விளையாடினால்
நாள் முழுதும் நீளும் கொண்டாட்டத்தில்
என் வயது –
குறைந்துகொண்டே வருகிறது!

நண்பர்களே… என்மீது அதன் உதடுபட்ட இடங்களையும்
உள்ளங்கால் தடங்களையும்
ஒற்றி நகலெடுக்க யாரேனும் எனக்கு
உதவி செய்தால் -அதை
கடவுளிடம் காட்டி -அவர்
பக்கத்தில் காலியான இருக்கையை
எனக்காக
இப்போதே கையகப்படுத்தி வைப்பேன்!
—————————————————–
முனு.சிவசங்கரன்

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | பின்னூட்டமொன்றை இடுக