நித்தியானந்தா + நாம்

கிறுக்கு –
மனோபாவத்தின்
தந்திர வித்தைகளில்

மறைந்த வக்கிரத்தை
காவி மறைத்துக் கொண்ட
தைரியத்தில்

எதையோ பொய்யென்றும்
எதையோ உண்மையென்றும்
நம்பிவிட்ட
கண்கட்டப் படாத பொதுமக்களின்
குருட்டு நம்பிக்கையில்

காலம் காலமாய்
காம நெருப்பிட்டு உறங்கியவனின்
மோக மெத்தையில் –
எவர்வைக்கும் தீயும்
அவன் தலைமுடியை கூட
சுடவில்லை!
————————————–

Posted in கவிதைகள் | 8 பின்னூட்டங்கள்

இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்!

நிறைய அலமாரிகளில்
பணம் அடுக்கப்பட்டு
வயிறுகளில் பசி
இறுகக் கட்டி

பட்டில் ஆடையுடுத்தி
மாற்றுப் புடவைக்கு
பிச்சையெடுத்து

விமானத்தில்
நடுக்கடலில்
பட்டப்பகல் – நட்டநடுத் தெருவில்
வாகன நெரிசலுக்கிடையே
திருமணம் நடத்தி
முதிர்கன்னிகளை
ஆங்காங்கே திரியவிட்டு

பெண்களின் கற்பு பேசி
விலைமகள்களுக்கு –
வீடமைத்துக் கொடுத்து

ஜனநாயக தேசமென
மார்தட்டி –
எடுத்ததற்கெல்லாம்
ஜாதி கேட்டு

எம்மதமும்
சம்மதமென சொல்லி
என் மதம் உன் மதமென்று
வெட்டிமாய்ந்து

அரசியலை அழகாக பேசி
அரசியல் வாதிகள் மட்டும்
சொகுசாக வாழ்ந்து

இல்லார்க்கு
இல்லாமலே போவதும்
இருப்பவர்
தனக்கு மட்டுமே வாழ்வதும்

அப்பப்பா..

மிக உன்னதமாக
வாழ்கிறோம் நாம்;

வரலாற்றுக் குறிப்பில் நம்மை
வளரும் தேசமெனக்
குறித்துக் கொள்வோம்,

நாளைய தலை முறை
காரி துப்பட்டும்!
—————————————————–
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 2 பின்னூட்டங்கள்

சிறுதுளி பெருவெள்ளமென ஒன்று சேர்வோம்; வாருங்கள் தோழர்களே!

கொட்டிப் பெறாதவர் மனம் தான் எட்டித் துடிக்கிறது எல்லோருக்கும் உதவ. தேசம் எதுவாயினும் என்ன உயிர் விலைமதிப்பற்றது தானே, எனில்; வாருங்கள் ஒருமுறை மீண்டும் ஒற்றுமை கொள்வோம்.

ஒரிசாவை சேர்ந்த சகோதரி ஜெயஸ்ரீ என்பவருக்கு இரத்தப் புற்றுநோயாம். முற்றிலும் குணம் பெற ஒரு கோடி வரை ஆகுமாம். இருபத்தைந்து லட்சம் வரை தயாராகிவிட்டது. இன்னும் எழுபத்தைந்து லட்சமே நிர்ணயிக்க உள்ளது அவரின் உயிரை.

சிறுதுளி பெருவெள்ளமென ஒன்று சேர்வோம் தோழர்களே. நம்மால் ஆனதை அந்த சகோதரிக்குத் தந்துதவுவோம். நான் ஐந்தாயிரம் வரை தர முன்வருகிறேன்.

உங்களால் ஆனதை நீங்களும் தந்துதவுங்கள். இதோ அவரின் உயிர் காக்கும் பணியில் நமக்கு தெரிந்த ஒரு சகோதரி ஒருவர் ஜெயஸ்ரீயின் முழு விவரம் தெரிவிக்க வலை ஒன்றினை திறந்து அதில் மொத்த தகவல்களையும் கொடுத்துள்ளார்.

http://helpjayashree.com

விவரங்களை பிறருக்கும் அனுப்பி உதவுங்கள்.

பிறரையும் உதவ முன்வர சொல்லுங்கள்.

தன்னால் இயன்றதை செய்யுங்கள், ஒன்றுமே இயலாத போதில் இறை நம்பிக்கை உண்டெனில் இறைஞ்சி அவர் உடனே குணம்பெற வேண்டுங்கள். அதுவும் இல்லையெனில் அவர் விரைவில் குணம் பெற்றுவிட நீங்களே வாழ்த்தி, குணம் பெருவாரென்று மட்டுமேனும் நம்புங்கள்.

நம் நம்பிக்கையின் அதிர்வலைகளில் அவரின் தேவைகள் பூர்த்திக் கொண்டு நலம் பெறட்டும்!

உதவும் நெஞ்சங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளுடன்..

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | 3 பின்னூட்டங்கள்

குடும்பத்துடன் பயணம் செல்கிறோம்!

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

தங்கள் அனைவரின் பேராதரவிற்குமான மிக்க நன்றிகளை முதர்கண்ணாய் தெரிவிக்கிறேன். சென்ற மாதம் நடந்தேறிய தம்பியின் திருமணத்தை முன்னிட்டு, மலேசியாவில் ஒரு விருந்துபசரிப்பு விழாவினை வைத்துள்ளார்கள் சகோதரியின் (தம்பி மனைவி) வீட்டார்.

அதில் கலந்து கொள்ளும் பொருட்டு சிங்கப்பூரில் உள்ள பெரிய தம்பியின் வீட்டில் தங்கிவிட்டு பதினான்காம் நாள் மலேசியா விழாவிலும் கலந்துக் கொண்டுவிட்டு பதினெட்டாம் தேதியன்று மீண்டும் குவைத் வருவேன்.

ஒருவார விடுப்பில் ஊர்பயணம் செல்ல இருப்பதால் முடிக்க வேண்டிய வேலை பளுக்களும் அதிகம். எனவே, அதுவரை வலைதளத்திற்கு சரியாக வர இயலாமையையும் பதிவுகள் இடாததையும் பொருத்தருள அன்புடன் அனைத்து தோழமை உள்ளங்களையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தங்களின் அன்புடன்

வித்யாசாகர்
குவைத்

Posted in அறிவிப்பு | 2 பின்னூட்டங்கள்

வெற்றுப் பிணம் நாம்!!! (20)

னதின் –
நீள அகலங்களில்
எத்தனையோ, கண்ணீரின் சாரல்கள்;

வெளியில் தெரியாமல்
உள்ளழுத்தும் வலிகளுக்கு
எல்லோரும் மருந்திட்டுவிடுவதில்லை;

எதையோ தேடி
யாரையோ நினைத்து
எங்கோ மனது கிடந்து அலையும் தருணங்களில்
அழுதுவிடாத வருத்தங்கள்
சுடத் தான் செய்கின்றன;

வெற்றியை தலைமேல் சுமந்து
எத்தனை தெருக்களில்
நடந்துத் திரிந்தாலும்
தோற்கும் வினாடிகள்
வெற்றியின் சிகரத்தை வீழ்த்தாமலில்லை;

என்ன வென்று..
என்ன சிரித்து..
என்ன மகிழ்ந்தென்ன
உயிரற்று வீழுகையில்
வெறுங்கட்டையாய் எரியும்
வெற்றுப் பிணம் தானே நாமெல்லாம்???
——————————————
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 3 பின்னூட்டங்கள்