45. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

து ஏனோ
உனக்கு அப்படி ஒரு
வெட்கம் –
சிரித்துக் கொண்டே வெளியே
ஓடி வந்தாய்
வாசலில் நான் நிற்பதை
கண்டதும் –
நின்று – தயங்கி –
நிமிர்ந்தென்னைப் பார்த்து
திரும்பி வீட்டிற்குள்ளேயே ஓடுகையில்
சத்தமில்லாமல் சிரித்தாயே
அந்த சிரிப்பும் பார்வையும் தவிர
வேறொன்றுமே இல்லை
நீஎன்னை காதலிப்பதற்கான
சாட்சி!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

44. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ன் கைப்பையில்
என்னென்னவோ
வைத்திருக்கிறாய்
இடையே என் புகைப்படம் கூட
வைத்திருப்பதாய் –
உன் தோழி சொன்னாள்;

உன் காதலின் அர்த்தம்
நீ திரும்பிப் பார்க்காமல் செல்வதில்
வலிக்கத் தான் செய்தது;

சரி போடி என
விட்டுத் தான் பார்த்தேன் –
நீ அலைந்து அலைந்து என்னை
தேடியதில் –
உயிர் கொள்கிறது
உனக்கான காத்திருப்பு!

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

43. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நம் கல்லூரி
வளாகத்தில் –
நீ என் பின்னே
நடந்து வருகிறாய்
அறை முழுதும் கேட்கும்
உன் காலடி சப்தத்தில்
என் இதயம் –
காதல் காதல் என்கிறது!

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

42. இப்படி ஒருமுறை காதலித்துப் பாருங்க!

மனோ: காதலென்றால் என்ன?

மகி: எனக்கென்ன தெரியும்,
நீ தான் அப்படியெல்லாம்
பீத்துற

பீத்துலடி அசடு
நெசம்மாவே நானுன்னை
காதலிக்கிறேன்

அப்ப நீயே
சொல்லு –
காதல்னா என்ன?

ம்ம்ஹ்..ஹூம்
நானென்ன காதல்னா என்னன்னு
டிப்ளோமா வரை
படிச்சிட்டு வந்தா காதலிக்க முடியும்

அப்படியா
காதலுக்கு கூட
டிப்ளோமா இருக்கா

அசடு அசடு
அதில்ல

சரி விடு
காதல்னா என்ன சொல்லு?

மூடின கண்ணை திறந்தா
திறந்த கண்ணை மூடி
கண்ணுக்குள்ள பார்த்தா
காதல் தெரியும்;
அதுக்கு மனசு முழுக்க
அன்பிருக்கணும்.

அன்பிருந்தா???????????

அன்பிருந்தான்ன்னா
அன்பிருந்தா காதல்;
அவ்வளவு தான்.

ஹே……………………
பாரேன் பாரேன்
இந்த பட்டிக் காட்டானுக்கு
இதலாம் பேசவருமா?

பட்டிக்காடோ
பணமோ இல்லடி
காதலை நிர்ணயிக்கிறது;
மனசு!

மனசு தான் காதல்னா
இத்தனை காலமா
சமூகம் எதிர்க்குமா?
வயசும் காதல்.

வயசில்லாம
காதலில்ல,
ஆனா –
மனசு தான் காதல்.

சரி விடு,
வயசும்
மனசும்
காதல்னு வெச்சிக்கலாம்.

விட்ரதென்ன –
வயசுக்கும்
மனசுக்கும்
கண்ணு திறந்திருந்தா
வருவது தான் காதல்.

கண்ணு திறக்காத
வயசும் மனசும் கூட
இருக்கா?

ம்ம்ம்ம்ம்ம்…..
அன்புன்னா என்னன்னு
சரியா சொல்லிக் கொடுத்தா,

தேவையானவரை
அன்பை கொடுத்து
வளர்த்திருந்தா…,

பெண்களை
நட்பை
வாழ்வின் லட்சியங்களை
புரியிற மாதிரி விளங்கவைத்தால்,

ரசனையின் அர்த்தத்தை
உறவுகளின் அருமையை
பிரிவின் வலியை
எப்படி வலிக்கும்னு சொல்லிக் கொடுத்தா,

பெண்ணை தாய்மையோடும்
சகோதரியுணர்வோடும் பார்த்து
உடல் போதை அளவை
இதுவரை; இங்கிருந்து தேவைன்னு
புரியவைத்தால்
வயசின்.., மனசின்.. கண்
அந்தளவுக்கு உடனே திறந்துக்காது.

அப்போ –
காதலிக்கிறவங்க இதலாம்
புரியாம தான்
காதலிக்கிறாங்களா?

இருக்கலாம்.
ஏன்னா காதலிக்கிறவங்களுக்கு
இது காதல்ன்ற ஒரு
வார்த்தையே
அவசியமியில்லை;
ஆனா சொல்லிக்கிறாங்க.

சொல்லிக்காம எப்படிடா
காதலிக்கிறேன்னு
ஒருத்தர் கிட்ட ஒருத்தர்
வெளிப் படுத்தறது?

அது சொல்லிக்காம
நிகழும்.
சொல்லிக்கறதெல்லாம்
அவசியமிருக்காது மகி;
என்னமோ கடையில வாங்குற
கத்திரிக்கா மாதிரி..
விடு விடு.. இந்த காலம்
இப்படித் தான்.

அப்போ –
நான் உன்னிடம்
காதலிப்பதாவும்
நீ என்னை –
காதலிப்பதாகவும் சொன்னதெல்லாம்????

நமக்கெல்லாம்
காதலிக்கவே தெரியலை
நம் காதல்லாம் இப்படித் தான்
சினிமா மாதிரி.

அவன் பெருசா ஏதோ
சொல்லுவான்னு பார்த்தேன்
இப்படி பச்சையா ஒத்துக்குவான்னு
நினைக்கல.
அவன் சொல்வதை
கேட்கவும்
திரும்ப எதையோ சொல்லவும்
வெட்கமாக இருந்தது.
நம்மல சுத்தின உலகம்
அப்படித் தான் –
நினைவு தெரிஞ்சிட்டா சினிமான்னும்
வயசு பதினாறை தொடும் முன்னே
காதல் காதல்னும்..
ச்சே ச்சே லட்சியமே இல்லாம
சுத்துற நிறைய பேர்.., பாவம்.

காதல் கொடுத்து வாழ்க்கையை
வாங்கணும்,
வாழ்க்கைய கெடுத்து
காதல் வாங்குற நிறையபேர்
நம்ம சுத்தி உருவாவறாங்க.

காதல் அநிச்சயா எழாம
செயற்கையா இருக்கு.

தற்கொலை
பெற்றோர் தவிப்பு
லட்சியமின்மை
புத்தி சிதறல்
பெண்களை போதையா
பார்க்கும் மனோபாவம்
இதுக்கெல்லாம் காரணம் இந்த காதலும்
அதை வைத்து சம்பாதிக்கத் துணியும்
திரைப்படங்களும் தானோன்னு தோணுது.

இருந்தாலும் –
காதல் இனிப்பதாகவே
ஒரு உணர்வோடு வளர்ந்து விட்ட
என்னால் அவனிடம் எதிர்த்து
பேசமுடிய வில்லை தான்.

வாவென அவனின்
கைகோர்த்து நடந்து
அவன் தோள் மேல்
சாய்ந்துக் கொள்கையில்
ஏதோ இதமாகவும்
மனதிற்கு இது தேவையாகவும் இருந்தது.

இந்த தேவை தான்
எல்லாவற்றையும் மறக்கடிக்கிறதோ என
நினைத்த நினைப்புகளில்
அவனை இறுக்கமாக இறுக்கிப்
பிடித்துக்கொள்ள

காலில் படும் புள் வெளியின்
ஈரம் சிலிர்ப்பேற்படுத்தியதும்
மேலே விழுந்து நனைக்கும்
பணி மழையில் –
நானும் அவனும் நனைந்து போனதும்
காதலால் தானே!!

என்ன மகி
அமைதியா வர

ஒண்ணுமில்ல மனோ
நீ தூண்டிவிட்டதன் விளைவு

சரி, நேரமாயிடுச்சி
நான் சொன்னதெல்லாம்
நினைவிருக்கட்டும்
இதோடு நாம ஐந்து
வருடம் பொருத்து தான் சந்திக்கப் போறோம்.

இந்த ஐந்து வருடம் தான்
நம் அன்பின் வலிமையை
உலகிற்கு காட்டப்போது

இந்த ஐந்து வருடத்துல
உனக்கான அடையாளத்தை
நீ ஏற்படுத்து.
எனக்கான அடையாளத்தோடு நானுன்னை
சந்திக்கிறேன்.

உலகம் நம்மை புகழும் புகழ்ச்சியில்
நம்ம அப்பாம்மா
நம்ம அன்பை புரிந்து
நம்மை சேர்த்து வாழவைப்பாங்க.

ஆமாம் மனோ,
நம் காதல் நம் வாழ்க்கைக்கானது.
போய்ட்டுவா..

அவன் கையசைத்து விட்டு
திரும்ப வந்து கட்டி
ஆலிங்கனம் செய்துவிட்டு
அதோ போகிறான்.

ஒரு பெண்ணிற்கும் தக்க
அடையாளத்தை ஏற்படுத்தும் ஆண்கள்
இனி புறப்பட்டுவிடுவார்களென
கையசைத்துவிட்டு
ஐந்து வருடம் கழித்து சந்திக்கப் போகும்
நம்பிக்கையில் –
எனக்குள் அவனும்
அவனுக்குள்
நான் மட்டுமாய்
இருவரும் விடை கொள்கிறோம்!
————————————————————————
வித்யாசாகர்

Posted in காதல் கவிதைகள் | 12 பின்னூட்டங்கள்

41. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

தாவணியில் – நீ
எத்தனை அழகென்று
எல்லோருக்கும்
தெரிய வாய்ப்பில்லை தான்;

வானம் பரப்பிய
வெளிச்சத்திற்கிடையே நீ
மாடியில் இருந்து
கையசைக்கும் அழகு
எல்லோருக்கும் தெரிய
வாய்ப்பில்லை தான்;

ஜன்னல் ஓரம்
நின்று சிரித்து
தொலைபேசியில் அழைக்க
ஜாடை செய்து விட்டு
உள்ளே சென்று நீ
வெளியே வரும் வரை நான்
வாசலிலேயே காத்திருப்பேன்
வெளியே வந்து நீ –
ஏனழைக்கவில்லையென
ஜாடையில் சிணுங்குவாய் என
எல்லோரும் அறிந்திருக்க
வாய்ப்பில்லை தான்;

கையில் நானெழுதி
உன்னிடம் காட்டாத பெயரும்
புத்தகமெல்லாம் நீ
எழுதிவைத்த என் பெயர்களும்

கோவிலில் யாரும் வராத
நேரம் பார்த்து –
நீயும் நானும் சென்று
உன் பேரில் நானும்
என் பெயரில் நீயும் செய்த அர்ச்சனையும்

ஒரே வண்ணத்தில் அணிந்த
ஆடையும்,
ஒரே நேரம் பார்த்து
பள்ளிக்கு ஒன்றாகக் கிளம்பியதும்

திரும்பி வரும்போது
தெருவெல்லாம் –
பேசிக் கொண்டே வரமறுத்து
பார்த்துக் கொண்டே வந்ததும்

படித்து படித்துவிட்டு
நீ கிழித்தெறிந்து விட்ட என்
கடிதங்களும்
இன்றுவரை கிழிக்காமல் வைத்திருக்கும்
உன் காதல் கவிதைகளும்

உன் கால் பதிக்கும் ஓசையும்
நான் வாய்விட்டு அழைக்காமலே
நீ திரும்பிப் பார்க்கும்
மன ஒற்றுமையும்

இரவும் நம் தூக்கமும்
மட்டுமே அறிந்த நம்
கனவுகளும்

தெருக் கம்பத்தில்
உன் ஒரு பார்வைக்காய் காத்து
நின்றதும்
வீட்டு வாசலில் யாரையோ
தேடுவது போல் –
யாருக்காகவோ காத்திருப்பது போல்
எனக்காக நீ வந்து நின்று
எனைப் பார்த்துக் கொண்டே
வீட்டினுள் சென்றதும்

நீர் நிலம் காற்று வானம்
பூமி அறிந்த நம் காதலை
எல்லோருமே அரிய வாய்ப்பில்லைதான்;

இப்படி –
யாருமே அறியாத காதல்
உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரிந்த காதல் –
உனக்கும் எனக்கும்
அற்றுப் போனதை –
வருடங்கள் பல தொலைத்தத பின்பும்
மனசு நினைக்கத் தான்
செய்கிறது!

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்