நீ யாரோடோ
பேசிக் கொண்டே
செல்கிறாய்.
அது நானாக
இருக்கக் கூடாத
என்றொரு ஆசை.
நானாக இருந்தால்
என்னசெய்வேன் –
என்கிறாயா???
வேறென்ன செய்வேன்
காதலிப்பேன்
காதலிப்பேன்
அப்படி காதலிப்பேன்!
நீ யாரோடோ
பேசிக் கொண்டே
செல்கிறாய்.
அது நானாக
இருக்கக் கூடாத
என்றொரு ஆசை.
நானாக இருந்தால்
என்னசெய்வேன் –
என்கிறாயா???
வேறென்ன செய்வேன்
காதலிப்பேன்
காதலிப்பேன்
அப்படி காதலிப்பேன்!
என்றும் போல
இன்றும் –
பூ வாங்க வருகிறாய்..
ஒவ்வொரு பூக்கடையாய்
சென்று –
ஏதோ கேட்கிறாய்,
வேறு பூ
கேட்கிறாயா –
விலை பேசுகிறாயா
தெரியவில்லை;
நீ பேசும் விலையும்
கேட்கும் பூவும் –
சற்று நேரத்திற்கு
கிடைக்காமல் தான் போகட்டுமே!
சரிவிடு –
நீயும் நானும்
காதலிக்கிறோமென்று
வைத்துக் கொள்;
ஏன்????
இல்லையேல் இறந்து
போவேனென
பயந்துப் போனாயோ?
இல்லை இல்லை
காதலுக்கு முடிவு
இறப்பில்லை என்பதை
புரிந்தவன் நீ.
வேறென்ன?
உன்னை பார்த்துக் கொண்டே
செல்லும் வேறு
நிறைய கண்களை
வேறு எந்த
தீயிட்டு எரிப்பது?
இதற்கென்ன அர்த்தம்?
அக்கறை.
காதலால் அக்கறை கொள்கிறாய்???
ஆம்; அக்கறையும்
அன்பும் மட்டுமே காதலெனில்
நானும் காதலிக்கிறேன்!
இத்தனை SMS – ஆ
அனுப்புவாய்,
நான் –
ஒவ்வொன்றையாய்
நிராகரித்துக் கொண்டே
வருகிறேன்;
அது –
ஒவ்வொன்றாய் என்னை
ஆட்கொண்டே செல்கிறது!
சின்ன
சின்னதாய் தான்
ஆசை –
உன்னை தொட்டுப் பார்க்க,
உன்னை –
பார்த்துக் கொண்டேயிருக்க,
உன்னிடம் –
நிறைய பேச,
உன்னோடு வாழ,
என் காலம் முழுதும்
உன்னோடு மட்டுமே கழிய;
இதத்தனைக்கும் – நீ
ஒன்று சேய் போதும்
என்னை காதலி!