நிலம்
நீர்
காற்று
வானம்
நெருப்பை –
ஐம்பெரும் பூதம் என்கிறார்கள்;
காதல் –
ஆறாம் பூதம்.
ஆம்; காதல் இல்லையேல்
நீயும் நானும் –
அன்றே இல்லை!
நிலம்
நீர்
காற்று
வானம்
நெருப்பை –
ஐம்பெரும் பூதம் என்கிறார்கள்;
காதல் –
ஆறாம் பூதம்.
ஆம்; காதல் இல்லையேல்
நீயும் நானும் –
அன்றே இல்லை!
அதுசரி –
எந்த புள்ளியில்
நாம் காதலிக்கத் தயாரானோம்?
நினைவில்லையென்றாலும்
பரவாயில்லை –
இந்த புள்ளியை நினைவில்
கொள்;
இந்த புள்ளி –
ஒன்று நம் வாழ்வு
அல்லது –
மரணம்!
நில் –
கவனித்திருப்பாய்
இல்லையென்று சொன்னால்
நான் ஏற்கப் போவதில்லை;
ஆமென்று சொல்வதிலும்
அடங்கப் போவதில்லை;
வா..
அதோ நமக்காக
வானமேறிக் காத்திருக்கும்
அந்த கற்பனை தேர் ஏறி –
உலகம் முழுக்கச் சொல்வோம்
நாம் காதலர்களென்று!
உன் –
மலர் கூந்தலின்
வாசமும்
அழகும்
சண்டையிட்டுக் கொண்டன –
யாரால் உனக்குப்
பெருமை என்று;
உன்னால் –
அவைகளுக்குப் பெருமையென்று
சொல்லவே
இக்கவிதை!
உன் –
காது தோடு தொட்டு
கன்னம் தொட்டு
கழுத்து தொட்டு
உள் புகும் காற்றை
சபிக்கிறேன்;
ஏ காற்றே, இனி
நானாக இருக்கக் கடவாய்!