23. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ
நடந்து சென்ற வேகத்தில்
காற்று –
இதர அத்தனை சப்தங்களையும்
மறைத்துக் கொண்டு
ஒன்றை மட்டுமே எனக்குள்
பதித்துச் செல்கிறது;
உன் கொலுசு சப்தம்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

22. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ என்னை
காதலிக்கிறாயாமே;

இல்லை இல்லை

காதலிக்கிறாய்………..

இல்லை……………….

காத.. லிக்கி…றாய்….

இல்.. இல்.. லை..

(அவள் இல்லை எனும் போதே
அவள் கையிலுள்ள என் பெயரை பார்த்துவிட்டேன்)

சரி விடு
நான் போகிறேன்

எங்கு போவாய்?

எங்கோ..

போவதற்கு
பிறகேன் என்னை இங்கு
அழைத்தாய்?

நீ தான்
காதலிக்க வில்லை
என்றாயே;

சரி போ,

அப்போ காதலிக்கிறாய்..

இல்லை..

ஆம்.

இல்லை

ஆம்; ஆம்; ஆம்;

யார் சொன்னது உனக்கு
இப்படியெல்லாம்,

வேறு யார்..
இதோ நான் போவதை
தடுத்துக் கெஞ்சும்
உன்னிந்த –
இரண்டு கண்கள் தான்!

கண்களா???!!

உன் கையிலெழுதியுள்ள
என் பெயரும் தான்!

(பெயருமா என்றவள் கேட்டு சிரித்திடாத வெட்கம்
இதழ்களில் ஈரமாய் பூப்பதற்குள் –
என் நிழலும் அவள் நிழலும் அருகருகே சென்றுவிட்டன)
———————————————————-
வித்யாசாகர்

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

21. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ல்லூரியின்
சுவரெங்கும்
காதலன் காதலியின் பெயர்கள்;

நம் பெயரில்லாத
இடத்திலிருந்து துளிர்க்கிறது
உன் பெயரையும் எழுதுவதற்கான
ஆசை;

உன்னை எழுதி ஏன்
அங்கு வைக்கவேண்டுமென;
எழுதாமலேயே வந்து விடுகிறேன்,

நான் கல்லூரியின் சுவர்களில்
எழுதிடாத உன் பெயர் – எனக்குள்
காதலாய்.. காதலாய்.. பூக்கிறது!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

20. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ன்று செய்
நீயும் என்னை
நினைத்துக் கொண்டேயிரு
நானும் உன்னை
நினைத்துக் கொண்டேயிருக்கிறேன்;

குறுக்கே யாரேனும் வந்தால்
கல் வாரி வீசு;

பயித்தியமென்று
சொன்னாலும் சொல்வார்கள்.

சொல்லட்டுமே,

இல்லாவிட்டாலென்ன
சேர்த்தாவைக்குமிந்த சமூகம்???

வெறும் சாதிக்கும்
மதத்திற்கும் அலையும் பித்து பிடித்த
மனிதர்கள் திரியுமிடம் –
வாழுமிடமல்ல;

அன்பை –
நரபலியிட்டுவிட்டு
அரைக் காசு கவுரவம் வேண்டி
மகள்களையும் மகன்களையும் கொன்ற
ஜடங்கள் வாழும் –
மண் இது, பூமியல்ல
நம் மனசிங்கே கல்; கிறுக்கு;
கேட்டால் கீழ்தனமென்பார்கள்.

சொல்லட்டும் சொல்லட்டும்
காலம் அதோ –
காதலர்களின் பின்னே நகர்கிறது
நாளை ஜாதியை –
நாய் நரி மதிக்காது;

மனிதன் ஓர் நாள்
மனிதனாய் மதிக்கப் படுவான்,

அன்று நீயும் நானும்
காதலர்களாய் –
பேசப் படுவோம்!

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

19. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நெடுந்தூரம்
நடந்துவந்து
நெடிய நேரத்தை
கால்கீழ் மிதித்து மிதித்தெரிந்து
விட்டுத் தான் –
உனக்காகக் காத்திருந்தேன்;

இதோ இமைக்கும் பொழுதில்
என்னைக் கடந்து –
அதோ செல்கிறாய்;

நீ போகும் வேகத்திற்கென்
கண்ணீர் மொத்தமும்
சாரை சாரையாய் –
தெருவை நனைக்கையில்
உனக்கென்ன குறைந்துவிடும் –

நீ போ.. போ..
உன் மிதிபடலில்
என் காத்திருப்பு
குறைந்தொன்றும்விடாதென
நான் சொல்லியா உனக்குத்
தெரியவேண்டும்?

உனக்கெல்லாம்
தெரியுமென்பதில் தானே
மீண்டும் மீண்டுமாய்
வலிகளின் மீதேறி –
உயிர் பெருகிறதென் காதல்!

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்