18. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

காலம்
காலமாகத் தான்
காதலிக்கிறார்கள்;

நீயும்
நானும் மட்டும்
எப்படியோ –
எதிரியாகிப் போனோம்
ஜாதி மதப் பேய்களுக்கு!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

17. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீயும்
நானும்
பேசிக் கொள்வதை
காற்று நம்மிடம்
சொல்வதேயில்லை;

போகட்டும்,

நாம் ஒன்றாக சேரும் தினத்தில்
கட்டி இறுக்கிய நம்
நெருக்கத்தினால் –
காற்றினை வெப்பம்கொள்ளச் செய்வோம்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

16. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ
விட்டிறங்கிய பேருந்தின்
இருக்கையில் –
உன் கைக்குட்டை
விழுந்துக் கிடக்கிறது;

ஓடிவந்து எடுத்து –
லேசாக நுகர்ந்ததில்

யாரும்-
பார்த்தார்களா தெரியவில்லை
பற்றி எரிகிறது காதல்!

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

15. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ரு முறை
உன் தலையிலிருந்து
பூ –
கீழே விழுகிறது;

நீ –
குனிந்து எடுக்கிறாய்;

தலையில் வைப்பதற்குள்
திரும்பி –
இங்குமங்குமாய் பார்க்கிறாய்;

என்னை பார்த்தாயா
வேறு யாரேனும் –
பார்த்தார்களா என்று பார்த்தாயா
தெரியவில்லை!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

14. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

வா. .
வேண்டுமெனில்
ஒரு சத்தியம் செய்கிறேன்;

உன் அப்பாவும்
என் அம்மாவும்
சம்மதிக்கும் வரை உன்னை
தொடக் கூட மாட்டேன்;

சம்மதிக்கா விட்டாலும்
விடவும் மாட்டேன்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக