13. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

பார்த்தாயா பார்த்தாயா
இப்படித் தான்
இல்லையென்று சொல்லிவிட்டு
செல்லும்போது –
திரும்பிப் பார்க்கையில்
நம்பமுடியவில்லை
உன் பொய்யை!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

12. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

போடி இவளே..
நீயும்
உன் காதலும்
மன்னாங்கட்டியுமென சலித்தாலும்
கால்கள் உன் பின்னேயும்
மனசு உன் முன்னேயும் தானே
கிடக்கிறது!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

11. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

னசு –
உன்கிட்டேயும்
என்கிட்டேயும்
இருக்கிறது தான்;

கொடுக்க யோசிப்பதில்
அறுகிறது காதல்,
அல்லது –
நீள்கிறது காலம்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

10. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ன் தாவணியின்
மேல் மேயும்
நிறைய கண்களை பற்றி
நான் –
கவலை கொள்வதேயில்லை

நீ என்னை
பார்க்கிறாயா என்பதை தவிர!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

9. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ
என்னைத் தொட்டு நிற்கையில்;
முன்னே நகர்ந்து
வேகமாக ஓடும் பேருந்து
சற்று –
நின்றுவிட்டாலெனென்ன!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக