8. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

வெளியிலிருந்து கதவை
உள்ளே திறக்கும் போதும்

உள்ளிருந்து கதவை
வெளியே திறக்கும் போதும்;

இடித்துக் கொள்ளும்
யாரோ ஒருவரில் –

என்றேனும் ஓர்நாள்
நீயாக இருக்கமாட்டாயா!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

7. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

னக்கும்
எனக்கும்
திருமணமாகிவிட்டது;
குழந்தைகளும் உண்டு

பல வருடங்களுக்குப் பின்
இன்று ஏனோ –
நேருக்கு நேர்
பார்க்க நேர்ந்ததில் –
நம் குழந்தைகளையும்
குடும்பத்தையும்
மறந்து தான் போனது நம்
பார்வை!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

6. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நான் –
வாசலில் நின்றிருப்பேனென
உனக்குத் தெரியும்;

நீ –
வீட்டிற்குள் நின்று
எனக்காகக் –
காத்திருப்பாயென
எனக்கும் தெரியும்;

தெரிந்தும் –
நான் காத்திருக்கட்டுமேயென
நீ –
வீட்டிற்குள்ளேயே இருப்பாய்;

வெளியே –
ஊர் எனை மட்டும்
கிறுக்கனென சொல்லி
காரி உமிழ்ந்துப் போகும்
நம் காதலை!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

5. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ங்கோ –
தூரத்தில் வரும்போதே
உன்னை பார்த்துவிடுவேன்;

நீயும் –
பார்த்துவிடுவாய்;

அருகில் வந்ததும்
பார்க்காதவர்களைப் போலவே
சென்றுவிடுவோம்;

உன்னை நானும்
என்னை நீயும்
கடந்தப் பிறகு – சடாரென
இருவரும் –
திரும்பிப் பார்க்க நினைப்போம்;

திரும்பிப் பார்க்காமலேயே
செல்வோம்.

காதல் –
செந்தீயென
இருவருக்குள்ளும் எரியும்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

4. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ
ஒருமுறை
கை குலுக்கிய
அந்த இறுக்கத்தின்
அழுத்தத்தில் தான்
இதயம் –
எழுந்து நின்று செய்தது
காதல்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக