3. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

ன் –
முட்டைக் கண்
பார்வையால் –
நெட்டை கால் விரித்து
உயிர் கொண்டுவிட்டது
நமக்கான காதல்!

Posted in காதல் கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

2. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

தெருவில் நீ
நடந்து செல்கிறாய்;

நானும் –
நடந்துச் செல்கிறேன்;

பார்ப்பவர்கள்
நினைத்துக் கொள்கிறார்கள்
நீயும் நானும்
யார் யாரோவென்று;

உனக்கும் எனக்கும் தானேத்
தெரியும் –
நீயும் நானும்
யார் யாரென்று!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

1. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

மனதில்
நிறைய வைத்துக் கொண்டு
தானே –
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என்கிறாய்;

என்ன வைத்திருக்கிறாயென
எனக்குத்
தெரியாவிட்டாலென்ன

உனக்குத் தெரிந்தால்
போதும்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

காற்றில் கலந்த ஈழப் புரட்சி – பொன்னம்மான்!

நீ சிரித்துப் பாடிய பாட்டெங்கே
உன் சிரித்த முகமெங்கே
நீ வளர்த்த வீரமிங்கே –
கண்ணீர் விட்டழுகிறதே;

உன் கருணை முகமெங்கே
காற்றில் தீராத உன் பாடல் – தொலைந்துப் போனதெங்கே
விடியாத ஈழ இருட்டில் மேலும் –
நீ பிரிந்த சேதி வலிக்கிறதே;

பெற்ற – தாய் காட்டுமுன் பாசமெங்கே
கொதித்தெழுமுன் கோப துடிப்பெங்கே
உயிர் மூச்சடிங்கி நீ போன தூரமாய் –
நெஞ்சம் கனக்கிறதே; கனக்கிறதே;

எந் தலைவனுக்குத் தந்த தோளெங்கே
போர் கணைகள் படைக்கும் திறமெங்கே
நீ பாடி வளர்த்த புரட்சியின் –
மீதி நினைவுகள் மிஞ்சி எரிக்கிறதே;

எம்; இந்திய முதல் பாசறை ஆண்ட துணிவெங்கே
உன் வெடிமருந்து புலமை போனதெங்கே
ஆயுதம் படைத்து நீ விட்ட ஆயுள்
இருபது – வருடம் கடந்தும் சுடுகிறதே; சுடுகிறதே;

உனை தேடிப் பார்த்த இடமெல்லாம்
நீ இறந்த தடமே கிடைக்கலையே –
நீ காற்றாய் கலந்த உண்மை மட்டும்
வெடித்த – சப்தம் கூறி அடங்கியதே;

காலம் கூறும் கதைகளையெல்லாம்
வரலாறு எழுதிக் கொள்ளும்; கொள்ளட்டுமே
ஈழதேசம் உள்ளவரை – பொன்னம்மான்
இருப்பதாகவே உள்ளம் நம்பும்; நம்பட்டுமே! நம்பட்டுமே!!
———————————————————-
வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

திருமணப் பெண்ணுக்கு ஒரு மணமகனின் கவிதை!

என் வாழ்வின் உயிர்மூச்சிற்கு,

என் காத்திருப்பில் பூத்த
பரிமளமே!

என் கனவுகளை சுமக்க
உறவுற்ற உயிரே!

நான் வாழாத நாட்களில் தேடிய
தேடலின் அர்த்தமே!

இனி என் மீத நாட்களின்
சிரிப்பிற்கு சொந்தமனவளே! வா….!

சந்தமுள்ள காதலியே…
சலங்கை குலுங்கிய தமிழ்
பேச்சழகே! வா…!

இதோ-என் வாழ்வின்
புதுமைகள் –
நீ கால் பதித்த இடத்திலிருந்து
பூக்க உள்ளது … வா…!

நாட்களாய் மணிகளாய்
நிமிடமாய் நொடிகளாய்
காற்றில் கரைதலின் மிச்சத்தில்
நீயும் நானும் சேர்ந்திருப்போம்… வா…!

முதன் முதலாய் உன் பார்வை
முதன் முதலாய் உன் தொடுதல்
முதன் முதலாய் உன் முத்தம்
முதன் முதலாய்-முதலாய்-முதலாய் உன்னில்
நானாக – நான் கரையப் போகும்
கனப் பொழுதுகளுக்காய் – காத்திருக்கிறேன்… வா…!

நீ நானாகவும்
நான் நீயாகவும்
நமக்குள் நம்மை தொலைத்து
உயிரற்று போகும் வரை தேடுவோம்… வா…!

உலக சமாதானத்தின் கொடி
நம் உறவின் நெருக்கத்தில்-
இழைத்து-திரிந்து-
காலத்தின் இன்னொரு கற்பித்தலுக்காய்
பிறப்பிப்போம் வா……!
———————————————
பரிமளக் கண்ணனுக்காக வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | 4 பின்னூட்டங்கள்