ஹைக்கூ – 110

ரியில்லை எனத் தெரிந்தும்
அறுத்தெறிய மறுக்கிறது
பல மடமைகளை –
என் மூதாதையர் வளர்த்த
புத்தி!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 109

காசு கொடுத்து
வாங்க இயலாத
பொருள்களிலிருந்து தான்
பூக்கிறது கனவு –
வாங்கிய பொருள்களின் ஆசை தீர்ந்த
சலிப்பிற்கிடையேயும்!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 108

ன்னும் –
நிறைய மண்
மாளிகையாகாமலும்,

நிறைய துணிகள்
நெய்யப் படாமலும்,

மனிதர்கள் –
நிறையப் பேர்
பக்குவப் படாமலும் தான்
சுற்றுகிறது பூமி!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 107

வாங்கி வந்த
நிறைய பொருட்கள்
கீழே வீசிக் கிடக்கின்றன்
வேறு சிலரின் கனவுகளை
தாங்கி!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 106

கால நேர
சம்பிரதாயம் பார்பவர்கள்
வீட்டிலும் –
பிணங்கள் விழாமலில்லை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக